Published:Updated:

Airport பாதுகாப்பும் தனியாரிடம்!-உயரும் மின் கட்டணம்-அத்துமீறிய தமிழிசை- |விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 8
Listicle
Vikatan Highlights September 8

விமான நிலையங்களில் CISF வீரர்களுக்குப் பதிலாக சில பணியிடங்களில் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்கும் அரசின் முடிவு ஏற்புடையதா, கருத்துக்கேட்புக் கூட்டம் கண்துடைப்பா, அத்துமீறினாரா தமிழிசை?, கழுகார் அப்டேட்ஸ், இந்திய அணிக்கு என்ன பிரச்னை?, கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்...


1
விமான நிலையம்

Airport-ல் தனியார் செக்யூரிட்டி...CISF வீரர்கள் விடுவிப்பு... கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு!

நாட்டின் பல்வேறு துறைமுகங்கள், விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்தபோதே மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 3,000-க்கும் அதிகமான சி.எஸ். ஐ. எஃப் வீரர்களின் பணியிடங்களை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக தனியார் பாதுகாவலர்களை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விமான கடத்தலால் கற்றுக்கொண்ட பாடம்

* கடந்த 2000-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான், ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு-க்கு வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

* பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பயணிகளை மீட்க, காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கும் நிலை ஏற்பட்டது.

* இதனைத் தொடர்ந்து, இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகத்தான், வாஜ்பாய் அரசு விமான நிலையங்களின் பாதுகாப்புக்காக சுமார் 1.63 லட்சம் CISF (Central Industrial Security Force) வீரர்களைப் பணியில் அமர்த்தும் முடிவை மேற்கொண்டது.

* அதனைத் தொடர்ந்து 2000 -ம் ஆண்டில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் CISF வீரர்கள் முதன்முதலில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். பின்னர் படிப்படியாக அனைத்து விமான நிலையங்களிலும் இந்த வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

CISF வீரர்களுக்குப் பதிலாக தனியார் செக்யூரிட்டிகள்

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் முக்கியமில்லாத பணிகளாக மத்திய அரசு கருதும் இடங்களில் அமர்த்தப்பட்டுள்ள CISFவீரர்கள் 3,049 பேரது பணியிடங்களை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக தனியார் செக்யூரிட்டிகளை அந்தப் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் பயணிகளை வரிசையில் நிற்க வைப்பது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு உதவி, விமான நிலையத்தின் சில நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளில் தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரியான ஜெய்தீப் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் பாதுகாப்பு பணியாளர்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு ஸ்மார்ட் தொழில்நுட்ப கருவிகளின் உதவியும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளும் விமர்சனங்களும்

* இந்த நிலையில், நாட்டிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் போன்றவை இன்னும் தொடர்கதையாக உள்ள சூழலில், மத்திய அரசின் இந்த முடிவு சரியானதல்ல என விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

* " முக்கியமில்லாத பணியிடம் என்றால் எதற்காகத் தனியார் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்? இதன் நோக்கம் என்ன? எந்த 'தனியார்' பாதுகாப்பு நிறுவனத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப்படும்..?

* விமான நிலையங்களில் இருக்கும் முக்கியமான அரசு அதிகாரிகளையே சில சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக வளைத்துவிடும் நிலையில், தனியார் செக்யூரிட்டிகளை எந்த அளவுக்கு நம்ப முடியும்?

* நாட்டில் எல்லா இடங்களிலும் தினமும் தீப்பிடித்து எரிவதில்லை. அதற்காக தீயணைப்பு நிலையங்களை ஒழித்துவிட முடியுமா அல்லது தனியாரிடம் ஒப்படைத்துவிட முடியுமா?

மத்திய அரசின் நோக்கம் பயணிகளைப் பாதுகாப்பது அல்ல. மாறாக விமான நிலையங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் அதானி போன்ற முதலாளிகளுக்குச் சாதகமான முடிவு" என்றும் இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர்.

' RSS அலுவலகத்துக்கு மட்டும் மத்திய படை பாதுகாப்பா?'

காங்கிரஸ் கட்சியோ, பயணிகளின் பாதுகாப்புடன் மத்திய அரசு விளையாடுகிறது எனக் காட்டமாக விமர்சித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசி தரூர்,

* " ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் டெல்லி அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்தும் போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விமான நிலையங்களில் தனியார் பாதுகாவலர்களை நிறுத்துவதை ஏற்க முடியாது.

* நாடாளுமன்றத்திலோ, விமான பயணிகள் சங்கத்தினரிடமோ, விமான நிறுவனங்களிடமோ எவ்வித கலந்தாலோசனையும் செய்யாமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக" கடுமையாக விமர்சித்துள்ளார்.

விமானநிலையம், துறைமுகம், தொலைத் தொடர்பு, கல்வி, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, ரயில்வே வரிசையில் தற்போது மத்திய படை பாதுகாப்பும் தனியார் மயம் என்பது பயணிகள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


2
மின் கட்டணம்

அக்டோபர் முதல் மின்கட்டணம் உயர்கிறது..! - கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பா?!

" மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்துக் கடந்த மாதம் 22ம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசும் போது பேச நேரம் கொடுக்காமல் உட்காருங்கள் என்றார்கள். அப்போதே தெரியும் கண்டிப்பாக மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று..." எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அப்படியானால் கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பா..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கழுகார் அப்டேட்ஸ்

செலவுக்குப் புலம்பும் அமைச்சர்கள் முதல் ஆளுநர் தமிழிசையின் அத்துமீறல் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

நஷ்டஈடு கொடுக்க வேண்டாம்...அமைச்சரின் ஓப்பன் டாக்... அதிர்ந்த உ.பி-க்கள்!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. இதில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, " திண்டுக்கல் மாநகராட்சிக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. அருகேயுள்ள 5, 10 ஏக்கரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் தொடங்கிவிடலாம் யாருக்கும் நஷ்டஈடு கொடுக்க வேண்டாம்" என்று போகிற போக்கில் வார்த்தையை விட...." - இதன் முழுமையான தகவல் மற்றும் தி.மு.க முப்பெரும் விழா... செலவுக்காகப் புலம்பும் அமைச்சர்கள், தமிழிசையின் அத்துமீறல், தி.மு.க எம்.எல்.ஏ – எம்.பி மோதல்...கேன்சலான டெண்டர்... என கழுகார் தரும் மேலும் பல அப்டேட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
தேர்வு

NCERT: "தேர்வு, பதற்றம், மன அழுத்தம்'': மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்- ஆய்வில் அதிர்ச்சி!

ல்வி என்பது குழந்தைகளை மேம்படுத்தவும், அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து வாழ்வின் சரியான பாதையில் பயணிக்க வைக்கவும் வேண்டும். ஆனால் கல்வியே மாணவர்களின் மனநலத்தையும், வாழ்வையும் சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது. பெருந்தொற்றின்போது பள்ளி மாணவர்களின் வாழ்வும், கல்விமுறையும் தலைகீழாகத் திருப்பி போடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் மனநலன் குறித்து அறிய NCERT ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 36 மாநிலங்களிலிருந்து சுமார் 3.79 லட்ச மாணவர்களிடம் நடந்த இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் சொல்வது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் ( Anjum Naveed )

`மீண்டு வாங்க Men in Blue!' - தொடர் வெற்றிகள் டு `தொடர்' தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை?

லங்கை அணியிடம் தோற்று யாரும் எதிர்பாராத விதமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோற்கும் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது ரோஹித்தின் அணி.

இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. என்னதான் பிரச்னை, இது இந்திய அணியை எந்த வகையில் பாதிக்கும்?! விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
தால்லிவுட்

கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!

ங்களாதேஷின் தலைநகர் தாக்காவில் தால்லிவுட் சினிமா தோன்றியது. 1956-ல் முதல் சினிமா எடுக்கப்பட்டாலும் 70களில் ஆரம்பித்து இன்றுவரை அதிரடி மசாலாப் படங்களை எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அதிக ரீமேக் படங்களை தமிழ், தெலுங்கிலிருந்து சுட்டு எடுக்க ஆரம்பித்து தால்லிவுட்டை வளர்த்தெடுத்துவருகிறது பங்களாதேஷ்.

அதிலும் தமிழ்ப்படங்கள் என்றால் எந்த ரீமேக் ரைட்ஸும் வாங்காமல் அல்வா சாப்பிடுவதுபோல அப்படியே சாப்பிட்டு விடுகிறார்கள். லோ பட்ஜெட் மேக்கிங் என்றாலும் கலெக்‌ஷனில் வாரிக்குவித்து தால்லிவுட் செழிப்பாகவே இருக்கிறது...

சமீப காலமாக தால்லிவுட் மார்க்கெட்டைக் காப்பாற்றுவதே நம்ம ஊர் சினிமாக்கள் தான். தால்லிவுட் வரலாற்றில் ரீமேக் ஆகி மெகா ஹிட்டடித்த தமிழ்ப் படங்களைப் பார்ப்போமா..? மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...