Published:Updated:

ஜாலியன்வாலா பாக்:வருத்தம் தெரிவித்த ராணி!அதிமுக அலுவலக மாற்றம்-ராகுல் சொல்வது என்ன?|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 9
Listicle
Vikatan Highlights September 9

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்த்ன் சிறப்புகள், புகழாரங்களுடன் சேர்ந்த சில கசப்பான பகிர்வுகள், அதிமுக அலுவலகத்தில் நடந்த மாற்றம், ராகுல் காந்தி சொல்ல வருவது என்ன, நிதிஷ்குமார் சொல்லும் புது தகவல், ஆன்டிபயாடிக் மாத்திரையின் ஆபத்துகள், 'யோனிப்பொருத்தம்' ஏன் அவசியம்..?


1
ராணி இரண்டாம் எலிசபெத்

ஜாலியன்வாலா பாக்: வருத்தம் தெரிவித்த ராணி இரண்டாம் எலிசபெத்!

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்களெல்லாம் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 1952-ல் அரியணை ஏறிய ராணி எலிசபெத், அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.

காலனி ஆதிக்க நினைவுகள்...

70 ஆண்டுகளுக்கு மேல் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், தனது 96 -வது வயதில் காலமான நிலையில், அவர் குறித்த பல்வேறு நினைவலைகள், நிகழ்வுகள் பகிரப்பட்டு வருகின்றன. அவரது தனித்திறமைகள், குணாதிசயங்களைக் குறிப்பிட்டு ஒருபுறம் பாராட்டுரைகளும் புகழாரங்களும் சூட்டப்பட்டு வருகின்றபோதிலும், இன்னொருபுறம் அவரது மரணம் இந்தியா உட்பட உலகின் பல இடங்களில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட பல்வேறு துயர சம்பவங்களை நினைவூட்டும் கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்க சமூகத்தின் கோபம்

தங்களது ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் பல்வேறு அடக்குமுறைகள், வன்முறைகளைக் கையாண்டு, அந்த நாடுகளின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்று தனது நாட்டை வளமாக்கிக்கொண்ட நிகழ்வுகளை காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஆப்பிரிக்க சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

"ஒரு இனப்படுகொலை சாம்ராஜ்யத்தின் தலைமை அர(சி)சன் கடைசியில் ஒருவழியாக இறந்துவிட்டார்" என்ற செய்தியை அறிந்தேன். அவருடைய வலி மிகவும் கடுமையானதாக இருக்கட்டும்," என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான உஜு அன்யா ட்வீட் செய்தார். அவரது ட்வீட் 13,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 55,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், பின்னர் இந்த பதிவுக்கு எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

வெறுப்பைக் கண்டித்த அமேசான் நிறுவனர்

அதே சமயம், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அன்யாவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, " உலகத்தை சிறப்பாக்குவதற்கான யாரோ ஒருவரது உழைப்பா இது..? கண்டிப்பாக இல்லை!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அன்யா, "எனது குடும்பத்தில் பாதி பேரைக் கொன்று குவித்த இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்த மற்றும் எங்களை இடம்பெயரச் செய்த ஒரு அரசாங்கத்தை நிர்வகித்த மன்னருக்கு ( ராணிக்கு) நான் வெறுப்பைத் தவிர வேறு எதை வெளிப்படுத்துவேன்?" எனக் காட்டமாக கூறியுள்ளார்.

இதேபோன்று Zoé Samudzi என்ற ஜிம்பாப்வே அமெரிக்க எழுத்தாளர், "என் குடும்பத்தின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் காலனியில் பிறக்காததால், வாய்ப்பு கிடைத்தால், அரச குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கல்லறைகளிலும் நான் நடனமாடுவேன்... குறிப்பாக ராணி எலிசபெத்தின் கல்லறையில்..." என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர், எலிசபெத் மகாராணியின் மரணத்தை ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை

இப்படி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒவ்வொரு கதை என்றால், இந்தியாவுக்கு ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம், 1919 ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான துயர நிகழ்வு. தங்களது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அன்றைய பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த மிகக் கொடுமையான ரௌலட் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதனை அடக்க நினைத்தார் ஜெனரல் டயர்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை

அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக்கில் சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தபோது, அதிரடியாக பெரும் படையுடன் அங்கு வந்த டயர், உத்தரவிட்ட அடுத்த நொடி தொடங்கி 15 நிமிடம்வரை விடாமல் முழங்கியது துப்பாக்கிக் குண்டுகள். இதில் 379 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அப்போது சொல்லப்பட்டது. "ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்திய - பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு நீங்காத வடுவாக உள்ளது.

ராணி தெரிவித்த வருத்தம்!

இருப்பினும், இந்த சம்பவத்துக்காக பல ஆண்டுகள் கழித்து பிரிட்டன் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டு, வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, தற்போது மரணமடைந்துள்ள ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

* இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கிலாந்து அரியணை ஏறிய முதல் பிரிட்டிஷ் மன்னர் ராணி இரண்டாம் எலிசபெத் ஆவார்.

* அவர் தனது பதவி காலத்தின்போது 1961, 1983 மற்றும் 1997 என மூன்று முறை இந்தியாவுக்கு வந்துள்ளார்.

தனது இந்திய வருகையின்போது, இந்தியாவின் வளமையையும் பன்முகத்தன்மையையும் குறிப்பிட்டு பாராட்டியதோடு, ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு வருத்தமும் தெரிவித்தவர்.

* "எங்கள் கடந்த காலத்தில் சில கடினமான அத்தியாயங்கள் இருந்தன என்பது ரகசியமல்ல. ஜாலியன் வாலா பாக் ஒரு துன்பகரமான உதாரணம்" என்று அவருக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியின்போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

பின்னர் அவரும் அவரது கணவரும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்குச் சென்று, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தனது பதவிக் காலத்தில், 1963 ல் டாக்டர் ராதாகிருஷ்ணன், 1990 ல் ஆர். வெங்கட்ராமன் மற்றும் 2009 ல் பிரதிபா பாட்டீல் ஆகிய இந்திய ஜனாதிபதிகளுக்கு விருந்து அளித்து, அவர்களைக் கெளரவித்துள்ளார்.

---------------

மேலும் இன்றைய விகடன் தளத்தில் ராணி எலிசபெத் குறித்து இடம்பெற்றுள்ள மேலும் சில சிறப்புக் கட்டுரைகள்...

70 ஆண்டுகளுக்கு மேல் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

6.6 பில்லியன் ஏக்கர் நிலம், கவிஞர், குடும்ப ஏடிஎம்- ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யங்கள்! - இங்கே க்ளிக் செய்யவும்...

மருதநாயகம்; விரும்பிச் சாப்பிட்ட சட்னி, ராணி எலிசபெத் தமிழகம் வந்தபோது என்ன நடந்தது? #AppExclusive இங்கே க்ளிக் செய்யவும்...

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு `டப்பாவாலாக்கள்' இரங்கல்... எதனால் ஏற்பட்டது இந்த நெருக்கம்? இங்கே க்ளிக் செய்யவும்

-----------------------


2
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி

அதிமுக அலுவலகத்தில் நடந்த மாற்றம்!

திமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியும், அவர் நியமித்த அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்பேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அலுவலகம் வந்த அவர், வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அலுவலகத்தின் உள்ளே செல்லும் முன்பாக வாசலை மூன்றுமுறை தொட்டு வணங்கினார்.

பின்னர் முதல்தளத்தில் இருக்கும் கூட்டரங்கில் நிர்வாகிகளுடன், இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
ராகுல் காந்தி நடை பயணம்

நடைப்பயணத்தில் ராகுல் காந்தி சொல்ல வருவது என்ன?!

ன்னியாகுமரியிலிருந்து `பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று புலியூர்குறிச்சி பகுதியில் மதியம் நடைபயணத்தை நிறைவு செய்தார். மதிய உணவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில், ``அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து உண்டு. அதுபோல பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-க்கும் ஒரு கருத்து உண்டு. அவர்களின் கருத்தையும் நாங்கள் மதிக்கிறோம். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
நிதிஷ் குமார்

"2, 3 மாதங்களில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முடிவாகிவிடும், ஆனால்..!" - நிதிஷ் சொல்வதென்ன?

பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணி அரசை முறித்துக்கொண்டு ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் `மகாபந்தன்' கூட்டணியுடன் சேர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரான பிறகு, 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இவரே இருப்பார் எனச் செய்திகள் உலவின.

இருப்பினும் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாகவே, `எனக்கு அத்தகைய எண்ணமில்லை, அதில் விருப்பமுமில்லை' என நிதிஷ் குமார் தெரிவித்துவந்தார். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
மாத்திரைகள்

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்... ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

ந்தியர்கள் அதிகம் எடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள், இதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும் பட்டியலிடுகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
காமசூத்ரா

காமசூத்ரா கூறும் 'யோனிப்பொருத்தம்' என்றால் என்ன, ஏன் அவசியம்?

திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் 'சமரத'மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம்...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..


7
சின்னக் கவுண்டர்

 சின்னக் கவுண்டர்: "இந்தப் படம் ஓடுமா?" – விஜயகாந்தின் சந்தேகமும், மொய் விருந்து குறித்த காட்சிகளும்!

விஜயகாந்த்தின் திரைப்பட வரிசையில் ஒரு முக்கியமான வெற்றித் திரைப்படம் என்று 'சின்னக் கவுண்டரை' சொல்லலாம். பெரும்பாலும் ஆக்ஷன் ஹீரோவாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்தின் பிம்பத்தை மாற்றிய படம் இது.

இப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யங்களையும் அலசல்களையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...