Published:Updated:

கோவா: கடவுளே கட்சி மாறச் சொன்னாராம்!-வேலுமணிFIR- 'நீட்' விபரீதம்-நெகிழ்ந்த ராஷ்மிகா|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 14
Listicle
Vikatan Highlights September 14

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 8 பேர் பாஜக-வில் இணைந்ததன் பின்னணி, கட்சி மாறிய எம்.எல்.ஏ-க்கள் அதனை நியாயப்படுத்தி சொன்ன வாசகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன? கிசுகிசு பகுதியில்,'ஆளும் கட்சி வாரிசுக்கு க்ரீன் சிக்னல்', 'நீட்' விபரீதம்...


1
பாஜக-வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

கோவா: மீண்டும் முதுகில் குத்திய காங். எம்.எல்.ஏ-க்கள்! - கடவுளும் சம்மதித்ததாக பேட்டி! 

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்துடன் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுவதாக அந்தக் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கோவாவில் அரங்கேறிய 'ஆபரேஷன் லோட்டஸா'ல் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ-க்களில் 8 பேரை பாஜக-விடம் பறிகொடுத்துவிட்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் கோவிலில் வாங்கப்பட்ட சத்தியம்!

கோவாவில், கடந்த 2019-ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் சேர்ந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களைக் கைப்பற்றியது.

* 2019 ல் நடந்தது மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டவர்களிடம், தேர்தலில் வெற்றிபெற்றால் வேறுகட்சிக்குச் சென்றுவிடக்கூடாது என கோவிலிலும், தேவாலயத்திலும் சத்தியம் வாங்கப்பட்டது.

* ஆனாலும், கடந்த ஜூலை மாதத்திலேயே காங்கிரஸின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத்தும், மைக்கேல் லோபோவும் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் அவர்கள் அதனை மறுத்தனர்.

ஆனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த காங்கிரஸ் தலைமை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், சபாநாயகர் அதுகுறித்து முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இதர காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் வளைக்க 'ஆபரேஷன் லோட்டஸ்' முன்னெடுக்கப்பட்டு, அதற்கான வேலையை திகம்பர் காமத்திடம் பாஜக பொறுப்பை ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது.

பாஜக-வுக்கு 8 எம்.எல்.ஏ-க்கள்

இந்த நிலையில்,

* இன்று காலையில் திடீரென திகம்பர் காமத் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் சபாநாயகரைச் சந்தித்துப் பேசினர்.

* இந்தச் சந்திப்புக்குப் பிறகு 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் சதானந்த் தெரிவித்தார்.

* மொத்த எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் பாஜக பக்கம் தாவி இருப்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

* இன்னும் 3 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.

கடவுளே சம்மதித்தாராம்

இந்த நிலையில், சபாநாயகரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திகம்பர் காமத்திடம், " தேர்தலுக்கு முன்னதாக கோவிலிலும், தேவாலயத்திலும் செய்த சத்தியமும் உறுதிமொழியும் என்னவாயிற்று? எனக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

* " தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான்.

* ஆனால் மீண்டும் கடவுளிடம் சென்று 'நான் என்ன செய்யவேண்டும்?' எனக் கேட்டேன். 'உனக்கு எது நல்லதோ அதை செய்' எனச் சொன்னார்" எனக் கூறி செய்தியாளர்களை மிரள வைத்தார்.

'பணவீக்கத்துக்கு இதுதான் காரணம்'

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஒவ்வொரு மாநிலத்திற்கும் 'ஆபரேஷன் லோட்டஸ்' நடத்துகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகிறார்கள்.

அவர்கள் இலவசமாக எம்.எல்.ஏ-க்களை வாங்கவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் அவர்களை பயமுறுத்துகிறார்கள்.

* பஞ்சாப்பில் அவர்கள அதற்கு முயன்றதை நாங்கள் அறிந்தோம். இது நல்லதுக்கு இல்லை.

* எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வருகிறது? இது அரசு பணம். அதனால்தான் பணவீக்கம் அதிகரித்து வருகிறது" எனக் காட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், ராகுலின் ஜோடோ யாத்திரையை சீர்குலைக்கவே பாஜக இதனை அரங்கேற்றி உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
வேலுமணி

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள்... மிரள வைக்கும் எஃப்.ஐ.ஆர்!

திமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

"மின்கட்டண உயர்வால் அரசின்மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சி இது" என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில், "லஞ்ச ஒழிப்புத்துறை அதன் வேலைகளைச் செய்கிறது" என்கிறது திமுக.

இந்த நிலையில், ரெய்டில் சிக்கிய எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் மீதான எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிரள வைப்பதாக உள்ளன. அவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
கிசுகிசு

கிசுகிசு: ஆளும் கட்சி வாரிசுக்கு க்ரீன் சிக்னல்... கப்பல் தலைவரின் புதிய முடிவு!

னி நாடு கட்டமைத்திருப்பதாகச் சொல்லும் சாமியாரின் உடல்நிலை, கவலைக்கிடமாக இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அது உண்மையோ, பொய்யோ… ஆனால், தமிழகம் தொடங்கி பல மாநிலங்களில் அந்தச் சாமியாருக்குச் சொந்தமாக இருக்கும் பல கோடி மதிப்புள்ள நிலங்களை வளைக்க, திடீரென முயற்சிகள் நடக்கின்றனவாம். ' சாமியாரே விற்க நினைக்கிறார்' எனவும் சொல்லப்படுகிறது. அரசியல் ஆலோசகராகக் காட்டிக்கொள்ளும் ஒருவரின் கைங்கர்யங்களும் இந்த விவகாரத்தில் நிறையவே இருக்கின்றனவாம். #குருவே சரணம்!

மேலும் ஆளும் கட்சி வாரிசுக்கு க்ரீன் சிக்னல், கப்பல் தலைவரின் புதிய முடிவு, தமிழக கதர் கட்சியின் புதிய தலைவர், மொய் விருந்துக்கு முதன்மையானவரின் ரியாக்சன் உள்ளிட்ட பல அரசியல் சீக்ரெட்ஸ்-களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
நீட் தேர்வு

நீட்: "தந்திரத்தைக் கற்றுத்தரும் கோச்சிங் சென்டர்கள்; நடக்கப்போகும் விபரீதம்..!"

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் பலரும் தவறான முடிவெடுப்பது இப்போதுவரை தொடரும் நிலையில், ஆண்டுதோறும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இந்தத் தேர்வு குறித்த விவாதங்களுடன் ஆதங்கக்குரல்களும் அதிகமாக ஒலிக்கின்றன.

இந்தப் போக்குத் தொடர்வதற்குப் பின்னணியில் உள்ள சிக்கல்கள் மற்றும் உளவியல் ரீதியான அணுகுமுறை குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, " நீட் பயிற்சி வகுப்பு சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்காமல், சரியான பதிலைத் தேர்வு செய்வதற்கான தந்திரத்தை தான் சொல்லித்தருகிறது" எனச் சாடுகிறார். மேலும் இதனால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதம் என்ன என்பதையும், இதில் திமுக அரசுக்கு உள்ள கடமையையும் அவர் விளக்குகிறார்.

அவரது விரிவான பகிர்தலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
சூர்யகுமார் ( AP )

Suryakumar Yadav: இந்தியாவின் Mr.360; இந்த SKY-க்கு வானமே எல்லை - போராடி வென்ற சூப்பர் சூர்யகுமார்!

டந்த ஆண்டு வரை இந்திய அணியில் இடம்பெறாத சூர்யகுமார் யாதவ், தற்போது உலகக் கோப்பை அணியில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக உள்ளார். பெரிய வீரர்களான கோலி, ரோஹித் முதல் இளம் வீரர்கள் வரை அணியில் இடம்பெறுவதில் நிறைய விமர்சனங்கள் இந்த ஓராண்டுக் காலத்தில் வந்தன.

ஆனால் ஒருவருக்கும் இவர் அணியில் இடம்பெறுவது குறித்து ஒரு சிறிய கேள்வி கூட இருந்தது இல்லை. அதுதான் சூர்யகுமார் யாதவ்!

ஒரு நல்ல தொடக்கத்தைத் தொடர்ந்து ஆட வந்தாலும் சரி, விக்கெட்டுகளின் சரிவில் ஆட வந்தாலும் சரி, சூர்யாவின் ஆட்டம் சூர்யாவின் ஆட்டம்தான்! ஒரு டி20 அணிக்கு சூர்யா போன்ற வீரர் ஒரு பொக்கிஷம். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ராஷ்மிகா மந்தனா ( twitter )

'சாமி சாமி' பாடலுக்கு நடனமாடிய சிறுமியின் வீடியோ வைரல்... ராஷ்மிகா மந்தனாவின் ரியாக்சன்!

'சாமி... சாமி' என்ற பாடல் ராஷ்மிகாவின் அபாரமான நடனத்தால் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் ரஷ்மிகாவை போலவே பலரும் நடனமாடி தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.

`சாமி சாமி' என்ற பாடலுக்குக் குழுவாக குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுமி தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். குறிப்பாக, திரைப்படத்தில் வரும் ராஷ்மிகாவின் நடன காட்சிகளைப் போலவே அந்த சிறுமி ஆடியுள்ளார்.

வைரல் வீடியோவைப் பார்க்கவும், ராஷ்மிகா மந்தனாவின் ரியாக்சனையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...