Published:Updated:

அமித் ஷாவுக்கு அண்ணாவின் பதில்- ஸ்டாலின் தொடங்கிய புதிய திட்டம்-கழுகார் அப்டேட்ஸ்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 15
Listicle
Vikatan Highlights September 15

இன்று அண்ணாவின் பிறந்த நாள்... நேற்று இந்தி திவாஸையொட்டி அமித் ஷா பேசிய பேச்சுக்கு அண்ணாவிடம் இருக்கும் பதில்... தமிழக பள்ளிக் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம், மீண்டும் `மாஸ்' காட்ட தயாராகும் எடப்பாடி, கழுகார் அப்டேட்ஸ், வெந்து தணிந்தது காடு விமர்சனம்...


1
அமித் ஷா

அமித் ஷாவுக்கு அண்ணாவிடம் இருக்கும் பதில்!

மீப ஆண்டுகளாக, செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட பாஜக அமைச்சர்களும் 'இந்தி திவாஸ்' எனும் இந்தி தினத்தையொட்டி வெளிப்படுத்தும் கருத்துகள் வேறெந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இது இன்று நேற்றல்ல... தந்தை பெரியார், அண்ணா காலந்தொட்டே நடந்துகொண்டிருக்கிற ஒரு நிகழ்வு. என்ன ஒன்று... அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு... இப்போது இருப்பது பாஜக தலைமையிலான அரசு.

இந்தி திணிப்பும் எதிர்ப்பும்

அதிலும்,

* 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு மத்திய அரசின் இந்தி திணிப்பு போக்கு மிக அதிகரித்து காணப்படுவதாகவும், இந்தி மொழிக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வாரி இறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

* மேலும் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள் போன்றவற்றிலும் இந்தி மொழியிலேயே கோப்புகளைக் கையாளவும், இந்தி பேசுபவர்களையே பணியில் அமர்த்தும் போக்கும் அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

* இன்னொரு பக்கம் தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏதாவது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், அவர்களுக்கு வரும் பதில் கடிதம் இந்தி மொழியிலேயே அனுப்பப்படுகிறது.

* மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பலமுறை இதுபோன்ற கடிதங்களைத் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, மத்திய அமைச்சர்களின் இந்தி ஆதிக்க உணர்வை அம்பலப்படுத்தி உள்ளார்.

* இன்னொரு பக்கம் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி-க்களும் நாடாளுமன்ற விவாதங்களில், தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆங்கிலம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே இந்தியில் பதிலளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய வீடியோக்கள் வைரலானதும் உண்டு.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு

ஆனால், என்னதான் தமிழகம் மத்தியில் ஆள்பவர்களின் இத்தகைய இந்தி திணிப்பு போக்குக்கு அவ்வப்போது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தாலும், ஆள்பவர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய பேச்சு உணர்த்தி உள்ளது.

'இந்தி திவாஸையொட்டி, குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா,

* "நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்தி அனைத்து இந்திய மொழிகளின் நண்பன் என்றும், அது ஒட்டுமொத்த தேசத்தை ஒரு அலுவல் மொழியாக ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், "உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியைக் கற்க வேண்டும்.

* ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை நமது அதிகாரப்பூர்வ மொழியும் உள்ளூர் மொழிகளும் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்று பேசினார்.

அண்ணா சொல்லிவிட்டுச் சென்ற பதில்...

அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், தமிழகத்தின் இரட்டை மொழிக் கொள்கைக்கு வித்திட்ட அண்ணா, 1967 ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் ஆற்றிய வீரியமிக்க உரைகளும், ஆட்சிக்கு வந்தபின்னர் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகளும்தான் தமிழகத்தை இன்றளவுக்கும் இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றி வருவதாக திமுக-வினர் கூறுகின்றனர்.

அறிஞர் அண்ணா

சுமார் இரண்டாண்டு காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தின் எதிர்கால போக்கை தீர்மானித்தவர் அண்ணா.

1967 -ல் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு நடந்த விழாவில் பேசிய அண்ணா, "இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.

* ஒன்று - சுயமரியாதை திருமணத்துக்குச் சட்டஅங்கீகாரம். இரண்டு - தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம். மூன்று - தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.

* இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 'முடியுமா' என்று நான் சவால் விடமாட்டேன். உங்களால் முடியும்.

* ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்.

* அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்" என்றார்.

அவர் மறைந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அண்ணா சொன்னபடி அவர்தான் தமிழகத்தை ஆள்கிறாரா இல்லையா என்பதற்கான விடை இங்குள்ளவர்களைவிட மத்தியில் ஆட்சியில் உள்ள அமித் ஷா உள்ளிட்டவர்களுக்குத்தான் நன்றாக தெரியும்!


2
காலை உணவுத் திட்டம்

பள்ளிக் குழந்தைகள் பசியாறும் காலை உணவுத் திட்டம் தொடக்கம்... 1,14,095 மாணவர்கள் பயன்!

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திராவிட மாடலின் மிக்க முக்கிய திட்டமாக கருதப்படும் இந்த காலை உணவுத் திட்டத்தினால், தமிழகம் முழுக்க 1,14,095 மாணவர்கள் முதற்கட்டமாக பயனடைகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
எடப்பாடி, பன்னீர்

மீண்டும் `மாஸ்' காட்ட தயாராகும் எடப்பாடி... ஆப்ஷன் இன்றி தவிக்கிறதா பன்னீர் தரப்பு?!

தி.மு.க அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து செப்.16-ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்து மாஸ் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, நிர்வாகிகளின் இல்ல விழாக்களுக்கும் பொதுக்கூட்டம் போல கூட்டத்தை கூட்டி, ஓ.பி.எஸ்-ஸின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியும் வருகிறார் எடப்பாடி.

பொதுக்குழு தொடர்பான வழக்கு, அலுவலகத்தின் மீதான அதிகாரம் என தான் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்றங்களின் தீர்ப்பே எதிராக அமைந்து வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறார் பன்னீர் செல்வம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: எடப்பாடி போட்ட போன் கால் முதல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரை..!

ராகுலைப் பின்தொடரும் மோடி... குமரி காந்தி மண்டபத்தில் அஞ்சலி?

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி டு காஷ்மீர் நடைப்பயணம் எதிர்பார்த்ததைவிட கவனம் பெற்றிருக்கிறது. "அவர் அணிந்திருந்த 'டி சர்ட்'டின் விலை 41,000 ரூபாய்... அவருடன் செல்லும் கேரவன்களுக்கே பல லட்சம் ரூபாய் செலவாகிறது" என்று பா.ஜ.க-வினர் தொடர்ந்து விமர்சனம் செய்தனர். அது அந்த நடைப்பயணத்துக்கு இலவச விளம்பரமாகவே மாறுவதை தாமதமாக உணர்ந்த பா.ஜ.க-வினர், வேறு திட்டம் போட்டிருக்கிறார்களாம்...

கழுகார் தரும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
வனிதாமணி

மாரத்தான் மனிதர்கள்: குழந்தைகள் கொண்டாடும் வனி அத்தை!

"அந்தக் காட்டுக்குள்ள கரடி அதுபாட்டுக்கு உலாத்திக்கிட்டு இருந்துச்சு. ஒரு மரத்தண்டு மேல ஒரு சின்னப்பையன் உக்காந்து அழுதுகிட்டிருக்கான். `ஏய், என்னாச்சு... ஏன் அழுவுறே..."ன்னு கரடி கேட்டுச்சு. `ஒரு பெரிய பிரச்னை... நான் தொலைஞ்சுபோயிட்டேன்... அதான் அழுகிறேன்'னு பையன் சொன்னான்..."

கரடியாகவும் பையனாகவும் மாறிக் கதை சொல்லும் வனி அத்தையை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். ஒரு கற்பனை வனத்துக்குள் கரடிக்கும் சிறுவனுக்கும் முன்பாகக் குழந்தைகளை அமரவைத்துக் காட்சிகளை விரிக்கிறார் வனிதாமணி.

கதைச் சொல்லியாக வனிதாமணி மாறியது எப்படி..? கதைச் சொல்லியின் கதையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

விமர்சனம்: வெந்து தணிந்தது காடு

கௌதம் மேனன் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் விட்டுவிட்டு ஜெயமோகனின் கதையுடன் புதிய களம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

கிராமத்தில் இருந்து கதியற்று கிளம்பும் முத்து வீரன் எப்படி மும்பையின் முத்து பாய் ஆகிறார் என்பதுதான் `வெந்து தணிந்தது காடு' படத்தின் ஒன்லைன்.

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...