Published:Updated:

பிடிவாத EPS...திகைப்பில் பாஜக!-'பொம்மை முதல்வர்' - தமிழிசை வருத்தம்-'டயட்' சரியா?|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 16
Listicle
Vikatan Highlights September 16

அதிமுகவில் நடக்கும் குழப்பங்களும் எடப்பாடியின் நிலைப்பாடும் பாஜக-வுக்கு திகைப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது, முரசொலி கட்டுரைக்கு தமிழிசையின் வருத்தம்-


1
அமித் ஷா, மோடி

இறங்கி வர மறுக்கும் இ.பி.எஸ்... கையைப் பிசையும் பாஜக!

ப்போதுமே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் உள்ளபோதிலும், தேர்தலை எதிர்கொள்வதற்கான களப்பணிகளை இப்போதிருந்தே தொடங்க ஆயத்தமாகி விட்டது திமுக.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக...

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், " ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத போக்கையே கொண்டுள்ளன.ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க

* நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். அதற்கான களப்பணிகளை இப்போதே தொடர வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே" எனப் பேசினார்.

* இது வெறும் மேடைப் பேச்சுக்கானது அல்ல என்றும், நிஜமாகவே அதற்கான முன்னெடுப்புகளை ஸ்டாலின் தொடங்கி விட்டார் என்றும் கூறும் திமுக மூத்த தலைவர்கள்,

* "அரசு நலத்திட்டங்கள் மூலமாக மக்களைக் கவர்வது ஒரு உத்தி என்றால், மறுபுறம் கட்சியினரைத் தட்டிக்கொடுத்து, உட்கட்சிப்பூசலை சரி செய்யும் பணிகளை முடுக்கிவிடும் பணியையும் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

* அதன் வெளிப்பாடுதான், 'தொண்டர்களால் ஆனவன் நான். உடன்பிறப்புகளால் ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கிறேன்' என்ற அவரது பேச்சு என்கிறார்கள்.

அதிமுக உட்கட்சி பூசலால் தவிக்கும் பாஜக

வழக்கமாக தேர்தலை எதிர்கொள்வதற்கான களப்பணிகளை முடுக்கிவிடுவதில் சமீப ஆண்டுகளாக பாஜக-தான் முன்னணியில் நிற்கிறது.

* அந்த வகையில் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் பாஜக, தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 இடங்களையாவது கைப்பற்றிவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

* இதற்கு அதிமுகவின் தயவு கட்டாயம் தேவை. ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதலினால் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள விரிசல், அதன் வாக்கு வங்கியைப் பாதித்துவிடும் என்றும், இதனால் எதிர்பார்த்த இடங்களில் வெற்றிபெற முடியாமல் போய்விடுமோ என்றும் கலக்கத்தில் இருக்கிறது பாஜக தலைமை.

'மீண்டும் 2021 நிலை வரக்கூடாது'

* கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தினகரனின் அமமுக-வும் முக்கிய காரணம் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

* குறிப்பாக தென்மாவட்டங்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிசமானோர் உண்டு. இந்த தொகுதிகளில் அதிமுக வாக்குகளை தினகரனின் அமமுக வேட்பாளர்கள் கணிசமாக பிரித்ததுதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

tough bargainer எடப்பாடி...

இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்துதான், "தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது அவரது கட்சியுடன் கூட்டணியாவது அமைத்துக்கொள்ளுங்கள்" என 2021 தேர்தலுக்கு முன்னர் அமித் ஷா சொன்னபோது, அதனை ஏற்க உறுதியுடன் மறுத்துவிட்டார் எடப்பாடி.

* அப்போதே ' எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றவரல்ல... இவரிடம் பேரம் பேசி வழிக்குக்கொண்டுவருவது என்பது சுலபமல்ல... tough bargainer ஆக இருக்கிறார்' என்பதை பாஜக மேலிடம் உணர்ந்துகொண்டது.

இருப்பினும், வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதே தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக தான் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறும், ஓ.பன்னீர் செல்வத்துடன் இணக்கமாக செல்லுமாறும் எடப்பாடியிடம் அறிவுறுத்தியது பாஜக தலைமை.

ஆனால், எடப்பாடி அதனை ஏற்க மறுத்ததால்தான், கடந்த ஜூலை மாதம் அவர் டெல்லி சென்றபோது அவரைச் சந்திக்க அமித் ஷாவும் மோடியும் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

இதை தனக்கான அவமதிப்பாக கருதிய எடப்பாடி, " வருவது வரட்டும்... இனி அவர்களிடம் போய் கெஞ்சிக்கொண்டிருக்கப்போவதில்லை..." என தனது ஆதரவாளர்களிடம் அப்போது கூறியதாக தகவல் வெளியானது.

இறங்கி வர மறுக்கும் இ.பி.எஸ்

இந்த நிலையில்தான், இந்த முறை பாஜக-வை முந்திக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை திமுக தொடங்கி இருப்பது அந்தக் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க சார்பில் சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, "யாராவது உழைத்தால் அவர்களுடன் இருந்துகொண்டு சுரண்டுவதுதான் அவரின் வேலை" என பன்னீர் செல்வத்தை மறைமுகமாக சாடினார்.

அதேபோன்று சசிகலாவும் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், " அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். அம்மாவை பார்ப்பது போல மக்கள் என்னை பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " சசிகலாவுக்கு சென்ஸ் ஆப் ஹியூமர் அதிகம்" எனக் கலாய்த்தார். ஜெயக்குமாரின் இந்தக் கருத்து எடப்பாடியின் வாய்ஸ் ஆகத்தான் பார்க்கப்படும்.

இப்படி சசிகலா, தினகரன் மட்டுமல்லாது பன்னீர் செல்வத்தையும் கட்சிக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்பதில் எடப்பாடி காட்டும் உறுதியும், இந்த விஷயத்தில் அவர் இறங்கி வர மறுப்பதும் 2024 தேர்தலை எண்ணி பாஜக-வுக்கு ஒருபக்கம் திகைப்பையும் இன்னொரு பக்கம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

'ரெய்டு அச்சுறுத்தலும் வேலைக்கு ஆகாது'

ரெய்டு, கைது என எடப்பாடியையோ அல்லது அவரது ஆதரவு அமைச்சர்களையோ அச்சுறுத்தி வழிக்குக்கொண்டு வரலாம் என்றாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலின்போது அதிமுகவினர் காலை வாரிவிட்டால் என்னாவது என்ற கவலையும் சேர்ந்திருப்பதால், அடுத்து என்ன என்று கையைப் பிசையும் நிலையிலேயே பாஜக உள்ளது!


2
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

"ஆளுநர் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது" - தமிழிசை கருத்தின் பின்னணி என்ன?!

மீபத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை, "தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை" என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ``மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல; சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
எடப்பாடி பழனிசாமி

"தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்கள்... ஸ்டாலின் பொம்மை முதல்வர்" - விளாசிய எடப்பாடி!

மிழ்நாடு அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுக அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு ஒரு நுனி அளவுக்கு கூட நன்மை கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் மக்களுக்கு வேதனையும், துன்பமும் மட்டும் தான் மிஞ்சியது..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஆன்லைன் ரம்மி ( Representational Image )

ஆன்லைன் சூதாட்டம், தொடரும் தற்கொலை; என்ன செய்யப் போகிறது உச்ச நீதிமன்றம்?

காலங்காலமாகவே சூதாட்டங்கள் ஒரு போதையைப் போல பலரை ஆட்டுவித்து பல குடும்பங்களை சீரழித்துள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக சூதாட்டம் ஆன்லைன் தளத்துக்கு மாறியுள்ளது.

சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்ட பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
உடல் பருமன்

உடல் பருமன், 'டயட்'... தவறான புரிதலும் சரியான விளக்கங்களும்!

டல் பருமனுக்காகப் பின்பற்றப்படும் உணவு முறையைத்தான் பெரும்பாலும் 'டயட்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். ஒருவர் டயட்டில் இருக்கிறேன் என்று கூறினால் அவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு நாமாகவே வந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு டயட்டும் உடல் பருமனும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.

உடல் பருமனைக் குறைக்க மக்கள் பல்வேறு விதமான விஷயங்களைக் காலங்காலமாகப் பின்பற்றிவருகிறார்கள். அதில் சில விசித்திரமான பழக்கங்களும் உண்டு.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
எலிசபெத் ராணி

ராணி எலிசபெத் இறுதிச்சடங்குக்கு அழைக்கப்படாத நாடுகள்... காரணம் என்ன?

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு அரச குடும்பத் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான அரச குடும்பங்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...