Published:Updated:

சிறுவர்கள் மீதான தீண்டாமை..பழைய வழக்கு காரணமா?-EPSக்கு பின்னடைவு -IPLஎதிர்காலம்|விகடன் ஹைலைட்ஸ்

விகடன் ஹைலைட்ஸ்
Listicle
விகடன் ஹைலைட்ஸ்

சங்கரன்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் சிறுவர்கள் மீது காட்டப்பட்ட தீண்டாமை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கான பின்னணி காரணங்கள்... எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு, புதிய விதிமுறையும் ஐ.பி.எல்-லின் எதிர்காலமும், பங்குச்சந்தை முதலீட்டு உத்தி...


1
கடை முன்பாக ஏமாற்றத்துடன் நிற்கும் சிறுவர்கள்

சிறுவர்கள் மீதான தீண்டாமை... பழைய வழக்கை வாபஸ் பெற மறுத்ததுதான் காரணமா?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உள்பட்ட கிராமம், பாஞ்சாகுளம். இங்குள்ள பள்ளியில் பயிலும் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு, அருகில் இருக்கும் கடையில், ' ஊர் கட்டுப்பாடு' சென்று சொல்லி தின்பண்டம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதை கடைக்காரரே வீடியோவாக எடுத்து வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவு முதலே வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையைப் பூட்டி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும் அந்த பெட்டிக்கடை உரிமையாளர்களான மகேஸ்வரன் மற்றும் அந்த வீடியோவை பரப்பிய ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மோதலுக்கு வித்திட்ட கிரிக்கெட் விளையாட்டு

* கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், சாதி ரீதியாக திட்டியதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளன.

அரசு பணியில் சேர தடையாக இருந்த வழக்கு

* இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ராமகிருஷ்ணன், மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ளார்.

* இதையடுத்து அந்த சமுதாய மக்கள், பட்டியலின சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன்மேல் உள்ள வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு, " எங்கள் சமுதாயத்தினர் மேல் நீங்கள் போட்ட வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பதிலுக்கு ராமகிருஷ்ணன் மேல் போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுவோம்" எனப் பட்டியலின சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல், மாவட்ட அரசு நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது.

மேலும் அதிகரித்த பகை தீ...

* வழக்கை வாபஸ் பெற பட்டியலின சமுதாயத்தினர் மறுத்த நிலையில், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

* இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரு தரப்பு இளைஞர்களிடையே மீண்டும் ஏற்பட்ட மோதல், பகை தீயை மேலும் அதிகரிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

* இதனைத் தொடர்ந்தே ஊர் கூட்டம் போடப்பட்டு, கடையில் பொருட்கள் கொடுக்கக்கூடாது, பட்டியல் சமூகத்தினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பெரியார் பிறந்த நாளில்..

பெரியார்

இந்த உத்தரவின் அடிப்படையிலேயே கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க கடைக்காரர் மறுத்த வீடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதிலும் சாதிய தீண்டாமைக்கு எதிராக தனது வாழ்நாளெல்லாம் முழங்கி போராடிய தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளான இன்று பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து திராவிட, பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டனர்.

பதிலுக்கு, பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து, " இது பெரியார் மண்... பெரியார் மண் எனப் பெருமை பேசுவீர்களே... திராவிட இயக்கங்கள் சாதியை ஒழித்த லட்சணம் இதுதானா..?" என்ற ரீதியில் கடுமையான விமர்சன கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த சம்பவத்தின்போது கடைக்காரருக்கும் சிறுவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள், இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

===========================


2
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு எதிராக இறுகும் டெண்டர் வழக்கு... உச்ச நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்திய பின்னடைவு!

டந்த 2017 முதல் 2021 வரை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

அச்சமயம், நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கே கொடுத்ததாகவும், டெண்டர்களில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திப்பதாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான் எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கான காரணம், வழக்கின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
IPL Trophy

அது என்ன Impact Player? - பிசிசிஐ அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறையும்; ஐ.பி.எல்-லின் எதிர்காலமும்!

ஐ.பி.எல் உட்பட உள்ளூர் டி20 தொடர்களில் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில் ஒரு புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. `Impact Player' எனப்படும் இந்த விதிமுறையை அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சையத் முஷ்தாக் அலி டி20 தொடரிலிருந்தே பிசிசிஐ நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

'Impact Player' விதிமுறை என்றால் என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
மும்பை பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீடு... புதியவர்களுக்கான உத்தி என்ன..?

ங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, எந்த கம்பெனி பங்கில் முதலீடு செய்வது என்பதை எப்படித் தீர்மானிப்பது, அடுத்து, எந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி பங்குகளை வாங்குவது/ விற்பது?

தற்போதைய சூழ்நிலையில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒருமுறை மொத்த முதலீடு செய்வதற்கு உகந்தது? அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


5
சினம் விமர்சனம்

சினிமா விமர்சனம்: 'சினம்'

ன் மனைவிக்கு நேரும் ஒரு பெரும் துயரத்தைக் கணவன் எப்படி தன் சினத்தால் போக்குகிறார் என்பதே 'சினம்' படத்தின் கதை.

காவல்துறையில் உதவி ஆய்வாளரான அருண் விஜய் கடும் கோபக்காரர். காதல் திருமணத்தால் மனைவியின் வீட்டில் சண்டை; அதீத நேர்மையாலும், கோபத்தாலும் தான் பணிபுரியும் காவல் நிலையத்தின் ஆய்வாளருடன் சண்டை என க்ளீன் ஷேவ், ரஃப் & டஃப் நபராக அருண் விஜய்.

இதுவரை தமிழ் சினிமாவில், இந்திய சினிமாவில் வந்த காவல்துறை அதிகாரிகளுக்கு என்னென்ன பிரச்னைகள், சவால்கள் இருக்குமோ அதெல்லாம் வைத்தே படத்தின் முதல் பாதியை எழுதிவிட முடியும். இரண்டாம் பாதியில்...

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
M.R.Radha

'நானும் அந்த நாலஞ்சுபேரும் ஒழிஞ்சாதான் தமிழ் சினிமா உருப்படும்! - எம்.ஆர்.ராதா @1964

பெரியார புடிக்காதுன்னு சொன்ன எம்.ஆர்.ராதா அப்புறம் என்ன சொன்னார் தெரியுமா? 1964ல் எம்.ஆர்.ராதா விகடனுக்கு அளித்த பேட்டி இது...

" நாத்திகப் பிரசாரத்திற்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் நாடக மேடையையும், நடிப்புக் கலையையும் முதன் முதலில் பயன்படுத்திய பழம் பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, விவாதத்துக்குரிய ஒரு நபராகவே இருந்து வந்திருக்கிறார். இவர் வாழ்க்கையே போராட்டமும், கிளர்ச்சியும், தடை உத்தரவும், போலீஸும், சிறைச்சாலையுமாகவே அமைந்துவிட்டது. தமக்கு உண்மை என்று தோன்றியதை பிட்டுப் பிட்டுப் பேசுவார். இவருக்குக் கற்பனை பிறக்க ஆரம்பித்துவிட்டால் பிறர் மானம் காற்றில் பறக்கும் !

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் இங்கே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.