Published:Updated:

திமுகவில் ராஜினாமா பரபரப்பு-பரவும் காய்ச்சல்-சவுக்குசங்கர் சர்ச்சை-தமிழிசை பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 19
Listicle
Vikatan Highlights September 19

திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் பரபரத்துக் கிடக்கிறது அக்கட்சி வட்டாரம். இதற்கான பின்னணி காரணங்கள்,அமைச்சர் அனிதா சொத்துகள் முடக்கம் ஏன்,தமிழகத்தில் பரவும் காய்ச்சல்,சவுக்கு சங்கர் வழக்கு தீர்ப்பு விமர்சனம், ராமராஜன் கம்பேக்...


1
சுப்புலட்சுமி ஜெகதீசன் ( Photo: Vikatan )

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமாவா? திமுக-வில் பரபரப்பு... பின்னணி தகவல்கள்... 

திமுக துணை பொதுச்செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல், அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியிருக்கிறது.

அவரது இந்த முடிவுக்கு உள்ளூர் மட்டத்தில் சொந்த கட்சியினராலேயே புறக்கணிக்கப்படுவதும், அமைச்சர் ஒருவருடனான உரசலுமே முக்கிய காரணமாக சொல்லப்படும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

மொடக்குறிச்சியும் சுப்புலட்சுமி ஜெகதீசனும்

* 1977 ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார்.

* பின்னர் திமுகவில் சேர்ந்த அவர், 1989 - ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது மாநில சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

* தொடர்ந்து கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன். இதனாலேயே மொடக்குறிச்சி தொகுதி என்றாலே சுப்புலட்சுமி ஜெகதீசன்தான் எனச் சொல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் தொகுதியில் செல்வாக்குடன் வலம் வந்தவர் இவர்.

பறிபோன சபாநாயகராகும் வாய்ப்பு

* இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதி, அமமுகவின் டி.தங்கராஜ், மக்கள் நீதி மய்யத்தின் ஆனந்தம் ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஜி. பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

* தொகுதிக்கு பாஜக வேட்பாளர் புதியவர். அதிமுக வாக்குகளை நம்பியே களமிறக்கப்பட்டார். ஆனால், தொகுதி கூட்டணி கட்சிக்குப் பறிபோன விரக்தியில், தேர்தலில் அதிமுகவினர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் பேசப்பட்டதால், நிலைமை திமுகவுக்கு சாதகமானதாகவே கருதப்பட்டது.

* இதனால், சுப்புலட்சுமியின் வெற்றி உறுதியானதாகவே பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் சுப்புலட்சுமி. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரஸ்வதி வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

'வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகராகும் வாய்ப்பு சுப்புலட்சுமிக்கு கிடைக்கப் போகிறது' என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில், தேர்தல் தோல்வி குறித்து அப்போது சுப்புலட்சுமி அளித்த பேட்டியை நினைவு கூர்ந்தால், அவரது தற்போதைய பரபரப்புக்கு விடை கிடைக்கக்கூடும்.

திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக வேதனை

" ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் எனக்கும் வாக்களித்தனர். என்னுடைய வெற்றியைத் தடுக்க முன்கூட்டியே சில மோசடி வேலைகள் நடந்துள்ளன. என்னுடைய தொகுதியில் 2,600 தபால் வாக்குகள் பதிவாகின. அதில், 571 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதில், 350 வாக்குகள் எனக்குப் பதிவானவை.

தபால் வாக்குகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்.

* மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை. சிலரின் சூழ்ச்சியால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தளபதியிடம் பேசினேன்; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதையும் சொன்னேன்.

1996 தேர்தலிலும் தி.மு.க சார்பில் நான் போட்டியிட்டபோதும் எங்கள் கட்சியிலேயே என் வெற்றியைத் தடுக்க சிலர் திட்டமிட்டனர். அப்போது 250 ரூபாய்தான் டெபாசிட் தொகை. தேர்தலை நிறுத்துவதற்காக ஆயிரம் பேரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்தனர். தேர்தல் களமே அதிர்ச்சியானது" என விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியிருக்கிறது. சுப்புலட்சுமியின் ராஜினாமா விவகாரத்துக்கு, அமைச்சர் ஒருவருடனான மோதல்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஷயமறிந்த உடன்பிறப்புகளிடம் பேசுகையில் கிடைத்த தகவல்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம் - நடவடிக்கை பாயுமா?!

அ.தி.மு.க, தி.மு.க என மாறி மாறி அமைச்சரவையில் அலங்கரிப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்று அ.தி.மு.க அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.

இவர் அமைச்சர் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க குற்றம்சாட்டியது. மேலும், அதற்கான ஆதரங்களையும் சேகரித்தது.

இந்நிலையில்தான்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல்

'தமிழ்நாட்டில் தீவிரம் காட்டும் வைரஸ் காய்ச்சல்' - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படி?!

மிழ்நாடு முழுக்க 'இன்ஃபுளுயன்சா' எனப்படும் H1N1 வைரஸ் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. சுமார், 965 பேர் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் மட்டும் 117 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக தலைவலி, காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டைவலி, மூக்கடைப்பு, உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
திருமாவளவன்

'சவுக்கு சங்கர் வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கலாமா?'

" நீதியையும், நேர்மையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்களும், நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்கள்தான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க முடியும்.

நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயும் என நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்..."

சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
தமிழிசை சௌந்தரராஜன்

"எனது சாப்பாட்டுக்காக மாதம் ரூ.15,000 கவர்னர் மாளிகைக்குக் கொடுக்கிறேன்..!" - தமிழிசை

"மக்களுக்குப் பணியாற்றுவதே எனது நோக்கம். நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது தெலங்கானா மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும்" என அதிரடியான ஸ்டேட்மென்ட்டை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பைப் பற்றவைத்தார், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன்.

"பாஜக தலைவர்போலச் செயல்படுகிறீர்கள் என உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களின் நேரடியான பதில் என்ன?'' என்பது உள்பட அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழிசை அளித்த பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
ராமராஜன்

"ராமராஜனின் கம்பேக் படம்; அவர் மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன?"- `சாமானியன்' இயக்குநர் Exclusive

ரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிவிட்டார் கிராமத்து நாயகன் ராமராஜன். `சாமானியன்' என்ற படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார். `தம்பிக்கோட்டை', `மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ராகேஷ், `சாமானியன்' படத்தை இயக்குகிறார். இன்று மாலை சென்னையில் இதன் டீசர் வெளியீடு நடக்கிறது.

இவ்வளவு நாளாக ராமராஜன் படங்கள் பண்ணாமல் இருந்தது ஏன்..? இந்த படத்தில் அவர் நடிக்க வந்தது எப்படி.? விவரிக்கிறார் படத்தின் இயக்குநர் ராகேஷ்...

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க...