Published:Updated:

EPS டெல்லி விசிட் பின்னணி-ஆம்னி பஸ் வசூலுக்கு விளக்கம்-பாரிவேந்தர் வருத்தம் ஏன்? |விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights September 20
Listicle
Vikatan Highlights September 20

எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் ஏன், அமித் ஷாவிடம் அவர் பேசியது என்ன, ஆம்னி பஸ் வசூல் வேட்டைக்கு அமைச்சரின் விளக்கம், திமுக உடனான கூட்டணிக்காக பாரிவேந்தரின் வருத்தம் ஏன்?, காங்கிரஸ் தலைவராகிறாரா சசி தரூர்?, சீமான் ஆதரவுக்கு திமுக ரியாக்சன்கள், சின்ன வயசு மிஷ்கின் பாசம்


1
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா ( File photo2 )

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் ஏன்... அமித் ஷாவிடம் பேசியது என்ன?

திமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் தனக்குச் சாதகமாக வரவே, எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவந்தார். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார்.

அவரது இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான பின்னணி காரணங்களும் வெளியாகாமல் இல்லை.

நீதிமன்ற தீர்ப்பால் உற்சாகமான எடப்பாடி

கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அன்று இரவு டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த ஜனாதிபதி பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், அவர் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட திரௌபதி முர்முவின் பதவியேற்புவிழாவில் கலந்துகொள்வதாகவும் திட்டமிடப்பட்டது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கவும் திட்டமிட்டார். அப்போது, பெருவாரியான பொதுக்குழு நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க-வின் ஆதரவைப் பெற திட்டமிட்டு, சந்திப்புக்காக நேரம் கேட்கப்பட்டது. ஆனால், எடப்பாடியைச் சந்திக்க மோடி, அமித் ஷா இருவரும் நேரம் ஒதுக்கவில்லை.

* இந்தச் சூழலில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

* அதேபோல், அ.தி.மு.க தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்குச் சாதமாகவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.

* நீதிமன்றத் தீர்ப்புகள் தனக்குச் சாதகமாக வரவே, உற்சாகமான எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவந்தார்.

திடீர் டெல்லி பயணம் ஏன்?

இது குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விசாரித்தபோது, * "தி.மு.க-வுக்குப் போட்டியாக டெல்லி ஷோகேத் பகுதியில் அ.தி.மு.க-வுக்குக் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு, அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன. கடந்த மே மாதமே கட்சி அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டது.

* ஆனால், உட்கட்சிப் பிரச்னை காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நீதிமன்றத் தீர்ப்புகள் எடப்பாடிக்கு ஆதரவாக வந்திருப்பதால் ஓரிரு வாரங்களில் அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

* இதற்காக மோடி, அமித் ஷாவுக்கு நேரில் அழைப்பு விடுக்கவே எடப்பாடி டெல்லிக்குச் சென்றார். சந்திப்புக்கான வேலைகள் மூன்று நாள்களுக்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்தச் சந்திப்பின்போது, வருமான வரித்துறை வழக்கு நெருக்கடி குறித்தும், பொதுக்குழு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்திருப்பதால் அதைப் பற்றியும் எடப்பாடி பேசக்கூடும்.

* மேலும், அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் முறையிடவிருக்கிறார்" என்றனர்.

இந்த நிலையில், அமித் ஷா உடனான சந்திப்பின்போது திமுக அரசு மீது புகார் பட்டியல் வாசித்து, அது தொடர்பான ஃபைல் ஒன்றையும் அளித்ததாக தெரிகிறது. இதனை, அமித் ஷாவைச் சந்தித்த பின்னர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி உறுதிப்படுத்துவதாக இருந்தது.

"அமித் ஷாவிடம் பேசியது என்ன?" - 20 நிமிட சந்திப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
ஆம்னி பஸ்

'ஸ்டேஜ் கேரியர்... கான்ட்ராக்ட் கேரியர்' - ஆம்னி பஸ் வசூல் வேட்டைக்கு அமைச்சர் சொல்லும் விளக்கம்!

யுத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறைகள் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருப்பதால் மீண்டும் பேசு பொருளாக மாறியிருக்கிறது ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரை தொடர்பு கொண்டு பேசியபோது, "சிறிய அளவில் உள்ள பிரச்னையை பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது போல் போன முறையும் புகார்கள் வந்த போது 957 வண்டிகள் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையும் கொடுத்தோம். ஆம்னி பேருந்துகளில் சென்றால் கூடுதல் கட்டணம் இருக்கும் என முடிவெடுத்து தெரிந்தேதான் பயணிக்கிறார்கள்..."

இந்த பிரச்னை தொடர்பான புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆம்னி பஸ்கள் அதிக கட்டண வசூலுக்கு காரணமான விதிமுறை உள்பட அமைச்சர் அளித்த விரிவான பதில்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
ஸ்டாலினுடன் பாரிவேந்தர்

திமுக கூட்டணி: பாரிவேந்தர் வருந்துவதற்கு என்ன காரணம்?

திமுக கூட்டணியின் மீது அதிருப்தியில் இருக்கும் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர், "போகக்கூடாத இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம் என்று நினைத்து நினைத்து வருந்துகிறேன்" என வெளிப்படையாகவே பேசியிருப்பதுதான் தற்போதைய அரசியல் டாக்.

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் பாரிவேந்தர். குறிப்பாக மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆனாலும், இதுகுறித்து திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில், பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இடம்பெற்றதற்காக வருந்துவது குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது, "2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போல 2019-ம் ஆண்டிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவே பாரிவேந்தர் விரும்பினார். ஆனால்,..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
சசி தரூர் Vs அசோக் கெலாட்

சசி தரூர் Vs அசோக் கெலாட்: காங்கிரஸ் தலைவர் ரேஸில் முந்துவது யார்? - டெல்லி அப்டேட்ஸ்

டந்த சில வாரங்களாகவே, சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்ற செய்திகள் பரவிவந்த நிலையில், அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா சம்மதம் தெரிவித்துவிட்டார் எனத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அதே சமயம் ராஜஸ்தான் முதல்வரும், காந்தி குடும்பத்தின் விசுவாசியுமான அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் உலவும் நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரப்போவது யார் என்பது குறித்த டெல்லி அப்டேட்ஸை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஆ. ராசா

ஆ.ராசாவுக்கு ஆதரவாக சீமான் பற்றவைத்த நெருப்பு... ரியாக்‌ஷன்கள் என்னென்ன?

`மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்திருக்கும் கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ஒருபுறம், `திமுக தலைமையே ஆதரவு தெரிவிக்காத நேரத்தில் எங்கள் அண்ணன் எப்படி துணிச்சலாகப் பேசியுள்ளார்' என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், சீமானின் கருத்துக்கு திமுகவுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
மிஷ்கின்

"சின்ன வயசுல மிஷ்கின் செய்த அந்த செயல்... " - மனம் திறந்த மிஷ்கின் தம்பி ஜி.ஆர் ஆதித்யா

மிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர் மிஷ்கின். முதல் படத்திலிருந்தே தனது தனித்துவமான திரைமொழியால் கவனம் பெற்றவர். இன்று அவரது பிறந்தநாள்.

இயக்குநர், நடிகர், பாடகர் என பல `முகமூடி'களை அணிந்த மிஷ்கின் தன் உடன்பிறந்த தம்பி ஜி.ஆர் ஆதித்யா இயக்கத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

மிஷ்கின் குறித்தும் அவரது பிறந்தநாள் குறித்தும் அவரின் தம்பி ஆதித்யாவிடம் பேசினோம். உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...