Published:Updated:

Evening Post: 'ஓசி பஸ்' சர்ச்சை.. ஸ்டாலின் ஆவேசம்-காங். ஆட்சி நீடிக்குமா?-கெளசல்யாவின் புதிய பாதை...

Vikatan Highlights September 26
Listicle
Vikatan Highlights September 26

சில அமைச்சர்களின் பேச்சு தொடர்பாக அண்மையில் சர்ச்சைகள் வெடித்த நிலையில், முதல்வர் இது குறித்து வெளிப்படுத்தியுள்ள ஆவேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா, திமுக குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு, கெளசல்யாவின் புதிய பாதை, இந்தியன்-2 படத்தின் புதிய மாற்றம்...


1
முதல்வர் ஸ்டாலின்

'ஓசி பஸ்' சர்ச்சையும் முதல்வர் ஸ்டாலினின் ஆவேசமும்!

மிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் தொடங்கி வைக்கும் நலத்திட்டங்கள், அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் என எந்த ஒரு பொது நிகழ்ச்சி என்றாலும், சமூக நீதி, சமத்துவம், பெண்கள் உரிமை என 'திராவிட மாடல்' கொள்கையை உயர்த்திப் பேசி வருகிறார். மேலும், "திராவிட மாடல் ஆட்சியின் மைய கொள்கையே மனிதநேயமும், சமூகநீதியும்தான்" என்றும் கூறி வருகிறார்.

" ஆனால், முதல்வர்தான் இவ்வாறு சமத்துவம் சமூக நீதி எனப் பேசுகிறாரே தவிர, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில மூத்த அமைச்சர்களே அவ்வாறு நடந்துகொள்வதில்லை" என்று சில நிகழ்வுகள் மற்றும் மேடைப்பேச்சுகளை முன்வைத்து கடந்த சில தினங்களாக சர்ச்சைகள் வெடித்தன.

இத்தகைய சர்ச்சைகளில் அண்மையில் எந்தெந்த அமைச்சர்கள் சிக்கினார்கள், எதனால் என்பது குறித்த நிகழ்வுகளைப் பார்த்துவிடலாம்.

சர்ச்சை -1 ( அமைச்சர் பொன்முடி)

சமீபத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,

* பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை, "ஏம்மா நீ எஸ்.சி.தானே..." என்று மேடையிலேயே கேட்டார் என சர்ச்சை வெடித்தது.

அதாவது அந்த சமூகத்தினரும் ஊராட்சித் தலைவர் ஆகும் அளவுக்கு 'திராவிட கொள்கைகள் வழிவகுத்தன' என்ற அர்த்தத்தில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இருப்பினும் அவர் "ஏம்மா நீ எஸ்.சி.தானே..." என்று பேசி இருக்கக்கூடாது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இன்னொரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, பெண்களுக்காக அரசு செய்துள்ள நலத்திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசுகையில், " நான்காயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வாங்கினீங்களா?

* இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்" என்று பேசியதாக வீடியோ வெளியானது.

அண்ணாமலை கண்டனம்

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "மக்களுக்கான சலுகைகளை நீங்கள் அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் தருகிறீர்கள், பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவிலிருந்தல்ல! கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லாமல் நம்பி வாக்களித்த பாமர மக்களை துச்சமாக மதித்து ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது" என அறிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இது வெட்டி ஒட்டப்பட்டு திரிக்கப்பட்ட வீடியோ என திமுக ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

சர்ச்சை - 2 ( அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் )

குருவிக்காரர்கள், நரிக்குறவர்களை, குறவர்கள் சமூகத்தில் இணைத்து பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) சேர்க்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை கண்டித்தும், குஜராத் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர்களை, தமிழ்குடி குறவர் பட்டியலோடு சேர்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் வன வேங்கை கட்சியினர் அண்மையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

சர்ச்சைக்கு காரணமான சந்திப்பு

இது தொடர்பாக வன வேங்கை கட்சித் தலைவர் இரணியன் மற்றும் மாநில நிர்வாகிகள், தென்காசி எம்.பி. தனுஷ்குமார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் கடந்த 23 ஆம் தேதியன்று சந்தித்தனர். அப்போது,

* வன வேங்கை கட்சி நிர்வாகிகளையும், தனுஷ்குமார் எம்.பி.யையும் நிற்க வைத்தே அமைச்சர் பேசியதாக அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

' இதுதான் சமத்துவமா? ' - சீமான் கண்டனம்

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், " இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சியா? இந்த ஆண்டை மனப்பான்மையைத்தான் திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா? வெட்கக்கேடு" எனக் குறிப்பிட்டிருந்தார்.

'ஜமீன்தார்கள் என நினைப்பு' - ஜெயக்குமார் கண்டனம்

அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், " ஓசி பேருந்துகளில் செல்கிறார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு பேசியது பெண்மையை அவமானப்படுத்தும் ஒரு செயலாகத்தான் பார்க்க முடியும்.

திமுக அமைச்சர்கள் தங்களை வானத்திலிருந்து குதித்தவர்களைப் போன்றும், நிலச்சுவான்தாரர்கள், பண்ணையாளர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் போன்றும் நினைத்துக்கொள்கிறார்கள். பதவிக்கு வந்தவுடன் கால்மேல் கால் போட்டு தோரணையாக உள்ளனர்" என்று விமர்சித்திருந்தார்.

துரைமுருகன், கண்ணப்பனும் தப்பவில்லை

இது ஒருபுறம் இருக்க மூத்த அமைச்சரான நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், மேடையில் பேசும்போது, " வன்னியர்னா நீயும் பறையர் மாதிரிதான்" என்று பெரியார் சொன்னார் எனக் கூறியதாக இன்னொரு சர்ச்சை வெடித்தது.

அதற்கு முன்னதாக அமைச்சர் கண்ணப்பன், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை, சாதியைச் சொல்லி திட்டியதாகவும் சர்ச்சை கிளம்பி, அதனாலேயே அவரது இலாகா மாற்றப்பட்டது.

முதல்வரின் காட்டமான அறிக்கை

இத்தகைய சூழ்நிலையில்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின், சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை துளியும் இல்லை என்றும், கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிடுவதாகவும் எனக் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது விரிவான அறிக்கையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
அசோக் கெலாட்

அசோக் கெலாட் ஆதரவாளர்கள் திடீர் ராஜினாமா... ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா?

சோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வானால் ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக வரும் செய்திகளையடுத்து, கெலாட் ஆதரவாளர்கள் என கருதப்படும் சுமார் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர்.

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்பம், ஆட்சியைக் கவிழ்க்கும் நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் அக்கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
சுப்பிரமணியன் சுவாமி

"பெரியார் கொஞ்ச நாள் இருந்திருந்தால், இன்று திமுக இருந்திருக்காது" - சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்த நாளை விராட் இந்துஸ்தான் சங்கமும் அவருடைய ஆதரவாளர்களும் மதுரையில் விழா எடுத்து கொண்டாடினார்கள்.

அதில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நம் நாட்டின் கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
சிறுமிப் பாலியல் வழக்கு

சென்னை சிறுமிப் பாலியல் வழக்கு: 8 பேருக்கு ஆயுள்; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

டசென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தரப்பில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபர புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், சிறுமியை அவரின் உறவினர்கள் சிலர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
பார்வதியுடன் கெளசல்யா

" அரசுப் பணியிலிருந்து விலகி சொந்தக்காலில் நிற்கிறேன்..!" - கடை திறப்பு விழா குறித்து கெளசல்யா

ணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யா, அரசுப் பணியிலியிருந்து விலகி, தற்போது கோவை வெள்ளலூர் பகுதியில் புதிதாக பியூட்டி பார்லர் அண்ட் சலூனை திறந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த சலூனை நேரடியாக வந்து திறந்துவைத்து வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்திருக்கிறார் நடிகை பார்வதி.

அரசுப் பணியிலியிருந்து விலகியது ஏன், இந்த புதிய முயற்சிக்கான தூண்டுதல், மறுமணத்துக்குப் பிறகும் சங்கர் குடும்பத்துடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசிய கவுசல்யாவின் பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல்

கோலிவுட் ஸ்பைடர்: தயாரான 'வாடிவாசல்' சூர்யா; இந்தியன்-2 படத்தின் புதிய மாற்றம்!

'இந்தியன் 2' படப்பிடிப்பு சென்னை, திருப்பதியில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கமலின் போர்ஷன் படமாகி வருகிறது. படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். ஊழல் பெருக்கெடுக்கும் சமூகத்தில் ஒருவர் அதற்கு எதிராக என்ன மாதிரியெல்லாம் களத்தில் இறங்குகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

மேலும் பல சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...