Published:Updated:

Evening Post: ஆர்.எஸ்.எஸ் சந்தித்த தடைகள்- DMK: காலாவதியான கோட்பாடு- திருமாவளவன் தடை கோருவது ஏன்?

Vikatan Highlights September 28
Listicle
Vikatan Highlights September 28

'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு மீதான தடையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள சர்ச்சைகள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு திருமாவளவன் தடை கோருவது ஏன்?, திமுகவில் காலாவதியாகி வரும் 'திராவிட அரசியல் கோட்பாடு', பீடி சுற்றும் பெண்களின் துயரங்கள், வீட்டுக் கடனில் கவனிக்க வேண்டியவை...


1
ஆர்.எஸ்.எஸ்

பி.எஃப்.ஐ VS ஆர்.எஸ்.எஸ் : தடைகளும் சர்ச்சைகளும்!

நாடு முழுவதும் 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்திருக்கிறது.

தடை ஏன்?

கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுந்த கண்டனங்கள்...

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பழ. நெடுமாறன், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PFI

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர் எஸ் எஸ் அமைப்பினைத் தான் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? எந்த ஒரு அமைப்பையும் தடை செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பது ஏற்கெனவே தடைகளை சந்தித்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று கேரள காங்கிரஸ் எம்.பி கொடிகுன்னில் சுரேஷ், " பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைத் தடை செய்வது தீர்வாகாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் நாடு முழுவதும் மதவாதத்தை பரப்பி வருகிறது. இரண்டு அமைப்புகளுமே ஒன்றுதான் என்பதால், இரண்டையுமே தடை செய்ய வேண்டும்" எனக் கூறி உள்ளார்.

ஆனால், மத்திய பாஜக ஆட்சியையே ஆர்.எஸ். எஸ்-தான் வழிநடத்திச் செல்வதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸின் இந்த கோரிக்கை சிறந்த நகைச்சுவையாகத்தான் கருதப்படும்.

3 முறை தடை விதிக்கப்பட்ட ஆர்.எஸ். எஸ்

இருப்பினும் கடந்த காலங்களில் ஆர்.எஸ். எஸ் இயக்கம் 1948, 1975 மற்றும் 1992 என மூன்று முறை தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது. அந்த தடையும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்ப்பட்டது.

* முதல் தடை மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.

* அதுவும் இன்று பாஜகவினராலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களாலும் கொண்டாடப்படும் சர்தார் வல்லபாய் படேல் லைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் இந்த தடையைப் பிறப்பித்தது.

அப்போது அது தொடர்பாக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில், " நம் நாட்டில் செயல்படும் வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை வேரறுக்கவும், நாட்டின் சுதந்திரத்தைக் சீகுலைப்பதைத் தடுக்கவும் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான செயல்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் அதன் உறுப்பினர்கள் தீ வைப்பு, கொள்ளை, கொள்ளை, கொலை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சேகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

* பின்னர் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அந்த தடை விலகியது.

* ஆர்.எஸ்.எஸ் மீதான இரண்டாவது தடை 1975 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தின்போது விதிக்கப்பட்டது.

* அதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் மீதான மூன்றாவது தடை விதிக்கப்பட்டது.

* அப்போது பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் மற்றும் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் ஆகியோர் இந்த தடை விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் மட்டுல்லாது அதன் துணை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) ஆகிய இயக்கங்களும் அப்போது தடை செய்யப்பட்டன.

* இருப்பினும் பின்னர் தீர்ப்பாயத்தில் தடைக்கான காரணங்களை மத்திய அரசு சரிவர முன்வைத்து வாதாடததால், அந்த தடை நீக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' இயக்கத்தின் மீதான தடையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனிடையே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு மீதான தடையைத் தொடர்ந்து, அதன் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு எதிராகக் களமிறங்கும் திருமாவளவன் - ஊர்வலத்துக்குத் தடை கோருவது ஏன்?

ர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

அதே அக்டோபர் 2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ., சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவுசெய்துள்ளன.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பேரணிக்கு எதிராகக் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணியை எதிர்ப்பது ஏன்?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
பொன்முடி

திமுக-வில் காலாவதியாகி வரும் 'திராவிட அரசியல் கோட்பாடு'...   #VoiceOfAval

'திராவிட மாடல் அரசு' என்பதை தன் அடையாளமாக நிறுவ முயன்று வருகிறது தமிழகத்தை ஆளும் தி.மு.க. ஆனால், சமீபத்தில் அடுத்தடுத்து சர்ச்சையாகி வரும் தி.மு.க அமைச்சர்களுடைய பேச்சும் செயல்பாடுகளும், திராவிட அரசியல் கோட்பாடு அவர்கள் கட்சிக்குள்ளேயே காலாவதியாகி வருவதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் அங்குள்ள பெண்களிடம் பேசும்போது, தி.மு.க அரசு பெண்களுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே வருகிறார். அப்போது, 'பஸ்ஸுல ஓசியில போறீங்க' என்று, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
பீடி சுற்றும் தொழில்

'சட்டங்கள் வந்தாலும் இவர்கள் நிலை மாறவில்லை' - பீடி சுற்றும் பெண்களின் துயரங்களைப் போக்குமா அரசு?

`பீடி, புகையிலை போன்றவை உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்தான பொருள்கள். அதனால் யாரும் புகைக்காதீர்கள்’ என்று தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பீடியைப் புகைத்தலே ஆபத்தானதென்றால் பீடி, புகையிலை ஆகியவற்றின் கூடவே வாழும் மக்களின் வாழ்க்கையே தினமும் ஆபத்தில் இருக்கிறது.

இந்தியாவில் பீடிசுற்றுவதை மட்டுமே தொழிலாகக்கொண்டு பல குடும்பங்கள் வருமானம் ஈட்டுகின்றன. பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
வீட்டுக்கடன் ( vikatan )

வீட்டுக் கடன் ஒப்பந்தம்: கையெழுத்துப் போடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

வீட்டுக் கடன் வாங்க வங்கி, வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் (Loan Agreement) போடப்படும். இதில் கையெழுத்து போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ள விஷயம் ஏதாவது புரியவில்லை எனில், அதிகாரிகளிடம் விளக்கம் கேளுங்கள்.

கண்ணை மூடிக் கொண்டு பெருக்கல் குறி போட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடாதீர்கள். அப்படிப் போட்டால் பின்னர், நீங்கள்தான் பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன்: கங்கை அமரன் - ராமராஜன் கூட்டணி கொடுத்த கலக்கல் ஹிட்! 

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'சாமானியன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் ராமராஜன். இதற்கு முன்பு, 2012-ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 'மேதை', தோல்விப்படமாக அமைந்தது.

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' திரைப்படத்தில், சினிமா சான்ஸ் கேட்டு வரும் ஒரு கேரக்ட்டர், "நடிச்சா ஹீரோதான் சார்... நான் வெயிட் பண்றேன்" என்று மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் சொல்வார். ராமராஜனும் அது போலத்தான். ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருடங்கள் சினிமாவில் இடைவெளி ஏற்பட்டாலும் குணச்சித்திர பாத்திரங்களை ஏற்காமல் பிடிவாதமாக 'நடிச்சா ஹீரோவா மட்டும்தான்' என்று கெத்து காட்டுகிறார்.

ராமராஜனின் மீள் வருகையையொட்டி அவர் நடிப்பில் 'சூப்பர் ஹிட்' திரைப்படமாக அமைந்த 'கரகாட்டக்காரன்' பற்றிய இந்தக் கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...கரகாட்டக்காரன்