Published:Updated:

Evening Post:RSS:விசிக-வைத் தூண்டியதா திமுக?என்னவாகும் OPS எதிர்காலம்- பணத்தைத் திருடும் வைரஸ்...

Vikatan Highlights September 29
Listicle
Vikatan Highlights September 29

வி.சி.க-வைத் திமுக தூண்டிவிட்டதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? என்னவாகும் பன்னீரின் எதிர்காலம்?, நயினார் நாகேந்திரன் குமுறல் எதனால்? - கழுகார் அப்டேட்ஸ், ஆண்ட்ராய்டு மொபைல்... பணத்தைத் திருடும் 'பலே' வைரஸ்... 'நானே வருவேன்' விமர்சனம்...


1
தொல் திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: வி.சி.க-வைத் தூண்டிவிட்டதா திமுக?

மிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், நாம் தமிழர், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் திமுக-வின் தூண்டுதல் இருப்பதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

* தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அன்று சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லுபுத்தூர் உள்பட 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி, காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தன.

* இதற்கு காவல்துறை தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

* அவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஊர்வலத்திற்கு வரும் 28 ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

திருமாவளவனின் திடீர் பேரணி அறிவிப்பு

இதனிடையே, காந்தி ஜெயந்தி அன்று வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நினைப்பதாக விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில்,

* அதே அக்டோபர் 2 அன்று சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலிப் பேரணி நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

* இதனைத் தொடர்ந்து அந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, பேரணியில் தாங்களும் கலந்துகொள்வதாக நாம் தமிழர், திராவிடர் கழகம், மே17 இயக்கம், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

அனுமதி மறுத்த காவல்துறை

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் உட்பட எந்த ஒரு அமைப்பினரின் ஊர்வலத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்க இன்று மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,

* "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் அன்றைய தினம் நாளில் சமூக நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகளும் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியுள்ளன.

* சட்டம் - ஒழுங்கை காக்க காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.

* எனவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பும் எதிர்ப்பும்

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி வி.சி.க தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார். மேல்முறையீடு செய்யுமாறும் திருமாவளவனை அறிவுறுத்தி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

திமுக தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு

இந்த நிலையில், நடந்த அனைத்து நிகழ்வுகளின் பின்னணியில் திமுக இருப்பதாகவும், அந்தக் கட்சிதான் வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தூண்டிவிட்டு வழக்குப்போட வைத்ததோடு, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்குப் போட்டியாக அதே தினத்தன்று சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலிப் பேரணி நடத்தப்போவதாக அறிவிப்பை வெளியிட வைத்ததாகவும் பாஜக-வினரும், இந்து அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

* " ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திபடுத்தும் உள்நோக்கம் கொண்டது.

தடை செய்யப்பட்டதால் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால், அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல், அதை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தடை செய்வது, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முடியாத மாநில அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பதிவு

* அதே நாளில் வேறு சில அமைப்புகள் சங்கிலி தொடருக்கு அனுமதி கேட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

* ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதிமறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த அமைப்புகளை திமுக-வே தூண்டி விட்டு அனுமதி கேட்க வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

* அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் செயல்படுவார்களேயானால், அவர்கள் நீதியால் தோற்கடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்" எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தங்களது ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.


2
சசிகலா, பன்னீர்

சசிகலா காட்டிய வழி... என்னவாகும் பன்னீரின் எதிர்காலம்?!

ஜெயலலிதா இருந்தபோது திரைமறைவில் அசுர பலத்துடன் இருந்த சசிகலாவை, அவரின் மறைவுக்குப் பின்னர் செல்லாக் காசாக்கியதில் பெரும் பங்கு பன்னீருக்கு உண்டு. அதேபோல, முதல்வர் அரியணையில் இருந்த பன்னீரை, கீழே இழுத்துவிட்டதில் சசிகலாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது. "உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட..." என்று பாதிக்கப்பட்ட இருவரையும் ஒரே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது காலம்!

பன்னீர்செல்வத்தின் சமீபக்கால அரசியல் நடவடிக்கைகள் எல்லாம், அப்படியே சசிகலாவை ஒத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ‘சசிகலா’ நடந்து காட்டிய வழியில் நடக்கும் பன்னீரின் எதிர்காலம் என்னாகும்?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
அண்ணா அறிவாலயம்

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்... ஜனநாயக முறைப்படிதான் நடந்ததா?!

அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் எடப்பாடி - பன்னீர் ஒன்றாக இருந்தபோதே நடந்துமுடிந்துவிட்டது. தி.மு.க-விலோ இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கி, தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது தேர்தல்.

இந்த நிலையில், உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்திருக்கிறதா?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்: பாஜக-வை நிராகரித்த சுப்புலட்சுமி முதல் குமுறும் நயினார் நாகேந்திரன் வரை..!

காலைவாரிய மோடி கபடி லீக்... பதவி விலகிய பா.ஜ.க நிர்வாகி!

தமிழ்நாடு முழுவதும் 'மோடி கபடி லீக்' போட்டிகள் நடந்துவந்த வேளையில், தமிழக பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்கிறார்...

----------------

மேலும், 'பா.ஜ.க-வை நிராகரித்த சுப்புலட்சுமி, தேர்தலுக்குத் தயாராகிறாரா கனிமொழி, குமுறும் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க-வின் 'ஷாக்' ட்ரீட்மென்ட்' என கழுகார் தரும் அப்டேட்ஸை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஹேக்கிங்

ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? உங்கள் பணத்தைத் திருடும் 'பலே' வைரஸ்... உஷார்!

புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்.

அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
நானே வருவேன்

சினிமா விமர்சனம்:  நானே வருவேன்

திர், பிரபு என இருவேறு வேடங்களில் தனுஷ். குடும்பமே கண்ணாக, எதிர்த்து நிற்கும் பலமே இல்லாத பயந்த சுபாவம் கொண்ட மனிதராய் பிரபு; தன் வாழ்க்கையிலிருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டாலும், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் ஏதோவொன்றை ஒளித்துவைத்துக்கொண்டு இயல்பாய் வாழ்வதாய் நடித்துக்கொண்டிருக்கும் கதிர் என இரு துருவங்களான கேரக்டர்களுக்குக் கச்சிதமாய் உயிர்கொடுத்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

யுவனின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். கதிர் கதாபாத்திர தீம் மியூசிக்கான 'வீரா சூரா' திரையரங்கம் முழுக்க நிரம்பி அதிரச் செய்கிறது. படத்தைப் பெருமளவு காப்பாற்றியிருப்பதே யுவனின் பின்னணி இசைதான்.

விரிவான விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...