Published:Updated:

Evening Post: 5 ஜி சேவை: நகரங்களுக்கு மட்டும்தானா?-ஆம்னி பஸ் சர்ச்சை- அமலான Credit Card மாற்றங்கள்

Vikatan Highlights October 1
Listicle
Vikatan Highlights October 1

5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை கிராமப்புறங்களுக்கு அத்தனை சுலபத்தில் கிடைக்குமா?, ஆம்னி பஸ் கட்டணமும் அமைச்சரின் முரணான பேச்சும், நாப்கின் பற்றி துணிச்சலாக பேசிய மாணவிக்கு கிடைத்த சர்ப்ரைஸ், கிரெடிட், டெபிட் கார்டு மாற்றங்கள், தீபாவளி ஷாப்பிங் டிப்ஸ்...


1

5G  சேவை கிராமங்களுக்கும் கிடைக்குமா?

மொபைல் போன்களில் அதிவேக இணையத்தை கொடுக்கக்கூடிய 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த 5ஜி சேவையின் தொடக்கம், ஒரு புதிய அத்தியாயத்துக்கான தொடக்கமாக கருதப்படுகிறது.

தற்போது இந்த 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பின்னர், இந்த ஆண்டு இறுதிக்குள் பெங்களூரு, காந்தி நகர், சண்டிகர், அகமதாபாத், குருகிராம், புனே, ஹைதராபாத், ஜாம்நகர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த அதிவேக 5ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் கொண்டுவந்த மாற்றம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிவேக இணைய சேவை என்பது வசதி படைத்தவர்களுக்கும் தொழில்நுட்ப சேவைகள் அதிகம் தேவைப்படும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அவசியமாக இருந்தது.

* இந்த நிலையில், 2020 ல் வந்த 'கோவிட்' முடக்கத்தினால் மருத்துவ ஆலோசனைகள், கல்வி, வேலை மற்றும் இதர தேவைகளுக்காக குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அதிவேக இணைய சேவை என்பது கட்டாயமாக்கிவிட்டது.

* ஆனால், அந்த சமயத்தில் நகரங்களில் கிடைத்த அளவுக்கு கிராமப்புறங்களில் இணைய சேவை கிடைக்கவில்லை.

* பல கிராமங்களில் டவர்களே இல்லாத நிலையில், பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான இணையத்தொடர்பு சரிவர கிடைக்காமல் திணறித்தான் போயினர்.

* இதன் காரணமாகவே பலர், இணைய இணைப்பு கிடைக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.

செல்போன் டவர்

டிஜிட்டலில் இந்தியாவின் ஏற்றத்தாழ்வு

இது, டிஜிட்டல் ரீதியாக இந்தியா எந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுடன் உள்ளது என்பதையும், நாட்டின் பெரும்பகுதி எவ்வாறு டிஜிட்டல் முறையில் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இணைய இணைப்பு இல்லாமை, தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் எல்லோராலும் பயன்படுத்த முடியாத நிலை போன்றவை டிஜிட்டல் இந்தியா குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

* சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 1.10 கோடியாக உள்ளது.

* இதில் சுமார் 66 லட்சம் பேரிடம்தான் இணைய இணைப்பு உள்ளது. மீதமுள்ளவர்கள் அனைவரும் இன்னும் 2ஜி சேவையையே தங்களது போன்களில் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

* மேலும், மொத்த இணையப் பயனாளர்களில் 20 லட்சம் பேர் மட்டுமே கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நிறுவனங்களின் ஆர்வமின்மை

இந்தியாவைப் பொறுத்தவரை இதுபோன்ற இணையசேவைகளை உடனடியாகப் பெறுவதற்கு தடையாக கவரேஜ் பிரச்னைக்கு முக்கிய காரணமே, அச்சேவை தொழில் ஈடுபடும் நிறுவனங்களின் ஆர்வமின்மைதான்.

* 2016 ல் நடந்த 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதிக அளவில் அலைக்கற்றைகள் விற்பனையாகவில்லை.

* இத்தகைய சேவை வழங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தொலைதூரமாக உள்ள கிராமப்புறங்களில் டவர் நிறுவுவது, பணியாளர்களை அனுப்புவது, பராமரிப்பு போன்றவற்றுக்கு ஆகும் செலவினங்களைக் கருத்தில்கொண்டு அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

* மற்றொரு பெரிய சவால் 5 ஜி சேவையை பயன்படுத்தக்கூடிய மொபைல்போன்களின் விலை, சாமான்ய மக்களால் வாங்கக்கூடிய அளவில் இல்லாதது.

இத்தகைய அம்சங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது , கிராமப்புறங்கள் மற்று டவர்கள் அமைப்பது போன்ற சேவை குறைந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு 5ஜி சேவை என்பது தொலைதூர கனவாகவே உள்ளது.

இந்த நிலையில், 5ஜி சேவை மலிவு விலையில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
ஆம்னி பஸ்

ஆம்னி பேருந்துக் கட்டணம்: - அமைச்சரின் 'முரண்' ஸ்டேட்மென்ட்ஸ்

வார இறுதி நாள்கள், தொடர் விடுமுறை, பண்டிகள் தினங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையான விஷயமாகிப்போனது. ஒவ்வொரு முறையும், அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பிலும், அமைச்சர் தரப்பிலும் கூறப்படும். ஆனால், இதுநாள் வரை இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு என்பதே எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
Sanitary Napkin ( Pixabay )

நாப்கின் பற்றி துணிச்சல் கேள்வி: மாணவிக்கு கல்விச்செலவுடன் நாப்கின் வழங்கும் தயாரிப்பு நிறுவனம்

பீகார் தலைநகர் பாட்னாவில், கடந்த 27 ம் தேதி, 'அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில், 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுர் கலந்துரையாடினார்.

அப்போது, பள்ளி மாணவி ரியா கேட்ட கேள்விக்குப் பதிலளித்த கவுர், "இன்று நாப்கின் கேட்பீர்கள். நாளைக்கே ஆணுறைகளைக்கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்" என்று, முகம் சுளிக்கச் செய்யும் வகையில் பதிலளித்தார்.

அவரது பொறுப்பற்ற இந்த பதிலும், அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு - டெபிட் கார்டு: இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!

டீமேட் கணக்கு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 2 அடுக்கு பாதுகாப்பு (factor Authentication) முறையில் தமது கணக்கிற்குள் லாகின் செய்யும்பொழுது கடவுச்சொல்லுடன் பயோமெட்ரிக் முறையிலோ அல்லது otp அல்லது பின் முறையிலோ லாகின் செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவை செபி பிறப்பித்துள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடுகளில் முக்கிய மூன்று மாற்றங்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி முதல் மாறுதலாக புதிய கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினால் அந்த அட்டையை ஆக்டிவேட் செய்ய...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
தீபாவளி ஷாப்பிங்...

தீபாவளி ஷாப்பிங் … எது தேவை, எது தேவையில்லை... சூப்பர் டிப்ஸ்.!

ன்றைய சமூக வலைதளக் கலாசாரத்தில், முன்பு போல ஏதோ ஒரு சட்டைத் துணி, கொஞ்சம் பட்டாசு என்று இருந்துவிடாமல் கடன் வாங்கியாவது நன்றாகச் செலவு செய்யும் அளவுக்கு அப்கிரேட் ஆகிவிட்டன நம்முடைய கொண்டாட்டங்கள்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் இருக்கும் நிலையில், எப்படி நம்முடைய நிதிநிலையை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் ஸ்மார்ட்டாக திட்டமிட்டு இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது எப்படி? தீபாவளி செலவுகளை எப்படித் திட்டமிடுவது?

நிதி ஆலோசகர்கள் தரும் சூப்பரான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
துஷாரா விஜயன்

மிஸ்டர் மியாவ்: மெர்சலான நடிகருக்கு பிரமாண்டத் தொகை!

னுமார் வாலாக நீண்டுகொண்டே போகும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, வெற்றிகரமான இயக்குநருக்கு இன்னும் பிடிபடவில்லையாம். வடபழனி பக்கமுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் ரூம் போட்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம். ஒரு படம், ரெண்டு பார்ட் ஆனதன் அதிர்ச்சியிலிருந்தே மீளாத தயாரிப்பாளர், எங்கு பார்ட் மூன்றையும் எடுக்க வேண்டுமென்பாரோ என்று கதறிக்கொண்டிருக்கிறாராம்!

'மிஸ்டர் மியாவ்' தரும் மேலும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...