Published:Updated:

Evening Post: கர்நாடகாவை அதிரவைத்த ராகுல் யாத்திரை-அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்- OPS 'பகீர்' ஆடியோ

Vikatan Highlights October 3
Listicle
Vikatan Highlights October 3

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா கர்நாடகா பாஜக தரப்பில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது ஏன், அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின், பன்னீர் தரப்பிடம் சிக்கி உள்ள வில்லங்க ஆடியோ, பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா? ஹாலிவுட்டுக்குப் பதிலாக தென்னிந்தியா வரவிரும்பும் சல்மான் கான்...


1
ராகுல் யாத்திரை

கர்நாடக பாஜக-வை அதிரவைத்த ராகுல் யாத்திரை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினர்.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாள் 3,570 கிலோ மீட்டர் பயணம் செய்து ஸ்ரீநகரில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. யாத்திரை தொடங்கிய மூன்று நாள்களில் ராகுல் கேரளாவுக்கு வந்தடைந்தார். கேரளாவில் கடந்த 18 தினங்களாக பல்வேறு இடங்களில் யாத்திரை மேற்கொண்டார் ராகுல்.

கவனம் ஈர்த்த கர்நாடகா யாத்திரை

தற்போது கேரளாவிலிருந்து கூடலூர் வழியாக, கர்நாடக சென்றார் ராகுல். கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், ராகுல் கர்நாடகாவில் மேற்கொள்ளும் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி நேற்று உரையாற்றிய நிகழ்வு, அந்த மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது.

கடும் மழையிலும் கலையாத கூட்டம்

அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் கடுமையான மழை கொட்டியது. இருப்பினும் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்த அவர், "இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும், ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது.

பாஜக-ஆர்எஸ்எஸ்ஸால் பரப்பிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நடைப்பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் நாம் போராடிகொண்டிருக்கிறோம். இந்த சித்தாந்தம் கடந்த 8 ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை கொடுத்துள்ளது. அதனை இந்த நடைப்பயணம் ஒன்றிணைக்கும்" என்று பேசினார்.

நெருங்கும் தேர்தல்... கலங்கும் பாஜக

அவரது இந்த உரையை கடுமையான மழைக்கு இடையேயும் மக்கள் கலைந்து செல்லாமல் அமர்ந்து இருந்து கேட்டதுதான் கவனம் ஈர்த்ததாக அமைந்தது. இது பாஜக-வுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

* தென்னிந்தியாவில் பாஜக தனித்து ஆட்சியில் இருப்பது கர்நாடகாவில் மட்டும்தான்.

* ஏற்கெனவே கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனாலும், பின்னர் அந்த கூட்டணியிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியமைத்தது.

* இருப்பினும் இங்கு காங்கிரஸ் கட்சி. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் சற்று வலுவாகவே உள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 மாதங்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி யாத்திரைக்கு இங்கு கிடைத்த வரவேற்பு, பாஜக தரப்புக்கு கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

கர்நாடகாவில் அதிகம் கவனிக்கப்படும் ராகுல் யாத்திரை குறித்த விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

'பேச்சில் கவனம் தேவை...' அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே, திமுக அமைச்சர்கள் ஆங்காங்கே பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலகிவருகின்றன. அதிலும் அமைச்சர் பொன்முடி, ஒருவிழாவில் அரசுப்பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாக பயணம் செய்வதை, `ஓசி' எனக் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் தலைவர்கள் பலராலும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுகவில் நடைபெறவிருக்கும் உள்கட்சி தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரையோடு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் மடலில், " ‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், ‘சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.

நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்.

அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.


3
ஓபிஎஸ்

'இன்னும் ஒரு ஆடியோ இருக்கு..!' - பகீர் கிளப்பும் பன்னீர் தரப்பு

திமுக-வின் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 'விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கும் வரையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது. அதனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது' என அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடை எடப்பாடி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், பன்னீர் தரப்பிடம் உள்ள ஆடியோ ஒன்றில்...

முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம்

10 ரூபாய் நோட்டு சீக்ரெட் கோடு; கை மாறிய பல கோடி பணம்; களமிறங்குகிறதா என்.ஐ.ஏ?

செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு, வேலூர் அருகே சின்னகோவிந்தம்பாடி பகுதியில், கார் ஒன்றிலிருந்து 48 பணப் பண்டல்களை கேரளப் பதிவெண் கொண்ட லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது 4 பேர் கும்பல். அந்தக் கும்பலை பள்ளிகொண்டா போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதில், 14,70,85,400 ரூபாய் பணம் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னணியில் 'துபாய்' சீக்ரெட் இருப்பதாக வந்த தகவலால், என்.ஐ.ஏ 'டீம்' விசாரணையில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
Baby(Representational image) ( Pexels )

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டலாமா?

பிறந்த குழந்தைக்கு நலங்குமாவு தேய்த்துக் குளிப்பாட்டலாமா? குழந்தையின் சருமத்தில் எண்ணெய் தடவி, பிறகு குளிப்பாட்டுவது சரியா?

" பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்..."

சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சொல்லும் பதிலை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
சிரஞ்சீவியுடன் சல்மான் கான்

"பலர் ஹாலிவுட் செல்ல விரும்புவர்; நான் தென்னிந்தியாவிற்கு செல்ல விரும்புகிறேன்"- சல்மான் கான்

பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பவர் சல்மான் கான். பிக் பாஸ் படப்பிடிப்பு படங்களுக்கான படப்பிடிப்புகளில் தீவிரமாக இருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவியும், சல்மான் கானும் இணைந்து நடித்துள்ள காட் ஃபாதர் படம் வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் வேலையில் இரு நடிகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் நடிகர் சல்மான் கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...