Published:Updated:

Evening Post: தேசிய கட்சியான TRS.. திருமா சென்றது ஏன்?- EC கிடுக்குப்பிடி- கைமாறும் ட்விட்டர்...

Vikatan Highlights October 5
Listicle
Vikatan Highlights October 5

தேசிய அரசியலில் குதித்துள்ளார் TRS தலைவர் சந்திரசேகர ராவ். அவரது முடிவுக்கு என்ன காரணம், திருமாவளவனை அழைத்தது ஏன், தேர்தல் வாக்குறுதி குறித்து ஆணையத்தின் கிடுக்குப்பிடி , எலான் மஸ்க் வசமாகும் ட்விட்டர், M.R ராதா குடும்ப பின்னணி கொண்ட மர்மதேசம் லோகேஷ் தற்கொலை ஏன்,


1
சந்திரசேகர ராவ்

தேசிய கட்சியாக மாறியது TRS... திருமாவளவனுக்கு அழைப்பு ஏன்? 

ரவிருக்கும் 2024 நாளுமன்ற தேர்தலில் எப்படியேனும் மூன்றாவது அணியை அமைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்த தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) தலைவருமான சந்திரசேகர ராவ், இன்று அதிரடியாக தனது கட்சியின் பெயரை 'பாரத் ராஷ்டிர சமிதி' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஒன்றுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான என்.டி.ராமாராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் தேசிய அரசியலில் கடந்த காலங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்கள் கட்சியை தேசிய கட்சியாக மாற்றியதில்லை. ஆனால், சந்திரசேகர ராவ் மிக துணிச்சலாக தேசிய அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.

'பா.ஜ.க இல்லாத இந்தியா'

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே நாட்டைத் தோல்வியடைய செய்துவிட்டன எனக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே குற்றம் சாட்டி வந்த சந்திரசேகர ராவ், அப்போது முதலே தேசிய அரசியல் மீதான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அதே சமயம் காங்கிரஸ் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நிலையில், 'பா.ஜ.க இல்லாத இந்தியாவே நோக்கம்' எனக் கூறி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அக்கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

* இதைத் தொடர்ந்து பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களையும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து வந்தார் சந்திரசேகர ராவ்.

* பீகாரில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகியிருக்கும் நிதிஷ் குமாரைச் சந்தித்தார்.

* மேலும், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும், அவரின் தந்தை லாலு பிரசாத் யாதவையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

* அதேபோன்று கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி போன்றவர்களையும் தன்னுடன் கைகோக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

* அதற்கு முன்னதாகவே கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நேரில் சந்தித்தார். அப்போது பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

தேசிய கட்சியாக மாற்றம்

* இந்த நிலையில்தான், இன்று காலை தசரா பண்டிகை கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேசிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

* இதன்படி தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிர சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

* இதற்காக அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தேசிய கட்சிக்கு, தற்போதைய தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு உள்ள கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்?

* சந்திரசேகர ராவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமே, தெலங்கானா மாநிலத்தைக் குறிவைத்து பாஜக சமீப காலமாக மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள்தான்.

* வட மாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்கள் மீது தனது அரசியல் பார்வையைத் திருப்பி உள்ள பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தில் அடுத்ததாக இடம்பெற்றிருப்பது தெலங்கானா மாநிலம்தான் எனக் கூறப்படுகிறது.

* கர்நாடகாவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனை முறியடிக்கும் விதமாகவும், பாஜக-வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட ஏதுவாக சந்திரசேகர ராவ், தனது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோட் இடைத்தேர்தல் நவம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், 'பாரத் ராஷ்டிர சமிதி' போட்டியிடும் முதல் தேர்தலாக இது இருக்கும்.

திருமாவளவனுக்கு அழைப்பு

திருமாவளவனை அழைத்தது ஏன்?

* இதனிடையே தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அறிவிக்கும் நிகழ்வையொட்டி, பல்வேறு மாநிலத் தலைவர்களை அழைத்திருந்த சந்திரசேகர ராவ், தமிழகத்திலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேரில் அழைத்தது தமிழக அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

* பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களை ஒன்று திரட்டும் முயற்சிக்கான நடவடிக்கையாகவே திருமாவளவனை சந்திரசேகர ராவ் அழைத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், "தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர். கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்களும் பங்கேற்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


2
வைத்திலிங்கம்

"அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!" - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்

திமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தொடர் சரிவில் இருந்த பன்னீரின் தரப்புக்கு ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது.

பன்னீரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அவருக்கு உறுதுணையாக இருக்கும் வைத்திலிங்கத்துடனான பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
திருமா, ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, முத்தரசன்

அக்டோபர் 11 : 'சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி'... விடாத கட்சிகள் - பின்னணி என்ன?

மிழகம் முழுவதும் 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' நடத்த விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 11-ம் தேதி அதைத் தள்ளிவைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியில் கைகோத்திருக்கும் நிலையில் இது தமிழக அரசியல் களத்தில் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது.

இப்படி விடாப்பிடியாக நின்று மனிதச் சங்கிலியை நடத்தவேண்டிய அவசியம் தற்போது என்ன என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைத்தலைவர் வன்னி அரசுவிடம் பேசினோம்...

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
தேர்தல் ஆணையம்

"வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?!" - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

ந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகள் குறித்து வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதியிருக்கும் கடிதத்தில்,

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
எலான் மஸ்க், ட்விட்டர்

முடிவுக்கு வந்த பனிப்போர்... எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர்!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழுப் பங்கையும் எலான் மஸ்க் வாங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால்...

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
லோகேஷ்

'பணக் கஷ்டம்... M.R ராதா குடும்ப பின்னணி.. ' - 'மர்ம தேசம்' லோகேஷ் தற்கொலை குறித்து அவரின் தந்தை வேதனை!

`மர்ம தேசம்' தொடரில் ராசுவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ். இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் பயணித்தவர் அந்த கனவை எட்டிப் பிடிக்கும் முன்பே தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

" சமீபத்தில் லோகேஷூக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அப்ப கூட பண உதவி கேட்டு தன்னுடன் நடித்த பல நடிகர்களுக்கு ஃபோன் பண்ணிப் பேசியிருக்கான். அவங்களும் அவங்களால முடிஞ்ச உதவியை செய்திருக்காங்க. வேலை வேணும்னும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியலைன்னும் லோகேஷ்..."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...