Published:Updated:

Evening Post:ரம்மி தற்கொலை.. ஆளுநர் மீது குற்றச்சாட்டு-துரைமுருகனுக்குஎதிர்ப்பு-மோடிக்குRSSஅழுத்தம்?

Vikatan Highlights October 7
Listicle
Vikatan Highlights October 7

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தொடருவதற்கு ஆளுநர் ரவி மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்?, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கொதிக்கும் மருத்துவர்கள் சங்கம், மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்?, 'கர்மா' அடிப்படையிலான தீர்ப்புக்கு தடை, ரீ-கிரியேட் ஆகும் அவள் அப்படித்தான்...


1
ஆன்லைன் ரம்மி

தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்... ஆளுநரை நோக்கி நீளும் குற்றச்சாட்டு!

மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்களின் தற்கொலை நிகழ்வுகள் தொடரும் சூழலில், இதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் மெத்தனபோக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீதிமன்றம் ரத்து செய்த தடைச்சட்டம்

* ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் நோக்கில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தமிழக அரசு ஒரு அவசரத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

அந்த சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

பணம் வைத்து விளையாடும் நபர்களின் கணினி, கைபேசி, மற்றும் அது தொடர்பான பிற உபகரணங்கள் பறிமுதல்செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் 5,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் என்றும், 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* இதனையடுத்து இந்த தடைச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் சர்வதேச நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

"இது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு தானே தவிரம் சூதாட்டம் அல்ல" என்று அந்த நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,

* "போதுமான காரணங்களின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை; உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது.

* ஆகவே, உரிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்" என்று கூறித் தமிழக அரசின் சட்டத்தை ரத்துசெய்தது.

முதல்வர் ஸ்டாலின்

ஆட்சி மாற்றமும் கோரிக்கையும்

இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது.

* அதே சமயம், ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வதும், சிலர் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்ந்தது.

* அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், 'ஆன்லைன் சூதாட்டத்தில் விட்டதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்' என பணம் கையாடல் செய்து மாட்டிக்கொள்வதும் தொடர்கதையானது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசை வலியுறுத்தின.

பாதிப்புகளை ஆய்வு செய்யக் குழு

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இக்குழு ஆன்லைன் விளையாட்டுகள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது மட்டுமில்லாமல், ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து அக்குழு கடந்த ஜூன் மாதம், தனது அறிக்கையினை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பது குறித்து பொதுமக்களிடமும் தமிழ்நாடு அரசு கருத்து கேட்டது.

அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

இதனையடுத்து, குழுவின் அறிக்கை, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக்கூடிய ஒரு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

ஆளுநர் ரவி

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

அதனைத் தொடர்ந்து அந்த சட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்பட்ட நிலையில்,

* 10 நாட்களுக்கு மேலாகியும் அவர் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

* ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 21 சட்டமுன்வடிவுகளில் 6 க்கு மட்டும் கடந்த ஜூலை மாத கடைசியில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச்சட்டம் இன்னமும் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால், அந்த சட்டம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆளுநரைக் குற்றம் சாட்டும் அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

இந்தச் சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்களின் தற்கொலை நிகழ்வுகள் மீண்டும் தொடர்கின்றன. இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் தற்கொலை நிகழ்வுகள் நடந்திருக்காது என்றும், இதற்கு ஆளுநர் ரவியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

" ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாததுதான் தற்போது இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ள குற்றச்சாட்டை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
துரைமுருகன், மா.சுப்பிரமணியன்

துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... கொதிக்கும் மருத்துவர்கள் சங்கம்... முதல்வருக்குப் பறந்த கண்டனக் கடிதம்!

மிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த தொகுதியான காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர், மற்றும் மருத்துவர்களை கடிந்து கொண்ட துரைமுருகன், ``நீங்க எல்லாம் எந்த ஊரு, முதல்ல இவங்கள பணியிடை நீக்கம் செய்யுங்க அப்படி இல்லன்னா கன்னியாகுமரிக்கு தூக்கியடிங்க" என்று ஆவேசமாக கூறினார்.

இந்த விவகாரம் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில்...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
பிரதமர் மோடி, மோகன் பகவத்

மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்?

க்கள்தொகை கட்டுப்பாடு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்றும் சொல்லும் ஆர்.எஸ்.எஸ், 'இந்தியாவில் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டுமென்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்' என வலியுறுத்துகிறது.

'இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது' என்கிற கோணத்திலான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பார்வை, பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

'கர்மா' அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை! 

ணியிட மாற்றத்துக்கு எதிராக காவலர் தாக்கல் செய்த வழக்கில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், "காவல்துறையில் 2003-ல் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவ விடுப்பில் இருந்தேன். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டதால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது..."

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
உயிரிழந்த சிறுவனின் தாய்

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்கள்... "நான் கேட்டபோதே என்னுடன் அனுப்பிருந்தால்...!" - கதறும் தாய்!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகமான விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்: "ரீமேக் இல்லை, ரீ-கிரியேட் செய்கிறேன்... 2040-க்கான கதை இது!"

ஒரு காலத்தில் தமிழ் சினிமா பெண்களைப் பற்றி உருவாக்கிய பிம்பங்கள் எண்ணிடலங்காதவை. அன்றைய தமிழ் சினிமாவும் மக்களின் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கும் படமாக வந்து நின்றதுதான் 'அவள் அப்படித்தான்'.

இந்த படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். `பாணா காத்தாடி, `செம போத ஆகாதே', `பிளான் பண்ணி பண்ணனும்' ஆகிய படங்களை இயக்கியவர். ருத்ரைய்யாவின் குடும்பத்தினர் இதற்கு என்.ஓ.சி.யும் வழங்கிவிட்டனர்.

இது தொடர்பாக பத்ரி வெங்கடேஷ் பகிர்ந்துகொண்டதைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...