Published:Updated:

Evening Post:ராகுல் யாத்திரைக்கு தடை வருமா?எடப்பாடியின்'தில்' பேச்சு-DMK:உண்மை நிலை-ஸ்வப்னா சுயசரிதை

Vikatan Highlights October 11
Listicle
Vikatan Highlights October 11

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொடுத்த புகார் காரணமாக ராகுல் காந்தி யாத்திரைக்கு தடை வருமா?, டெல்லிக்கு தெரியட்டும் என 'தில்'ல்லாக பேசிய எடப்பாடி, திமுக தனித்துப் போட்டியிட முடியுமா? புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை, இரவு 7 மணிக்குள் டின்னர்.. நன்மைகள் என்ன?


1
ராகுல் காந்தி

குழந்தைகள் ஆணையம் புகார்: ராகுல் யாத்திரைக்கு தடை வருமா?

ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்ரா' -வில் குழந்தைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொடுத்த புகாரும், இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸும் காங்கிரஸ் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாள் 3,570 கிலோ மீட்டர் பயணம் செய்து ஸ்ரீநகரில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடகாவில் தற்போது தனது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பு

காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இருப்பது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும்தான். இந்த நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ராகுலுக்கு யாத்திரையின்போது கிடைத்த வரவேற்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், கர்நாடகாவில் கிடைத்த வரவேற்புதான் அந்த கட்சியினரே எதிர்பார்க்காத வகையில் அமைந்தது.

ராகுல் செல்லும் வழியெங்கும் பெண்களும், குழந்தைகளும் ஓடி வந்து அன்பாக கட்டிக்கொள்வதும், செல்ஃபி எடுத்துக்கொள்வதும் அரசியல் பார்வையாளர்களைத் திரும்பி பார்க்க வைத்தன.

குழந்தைகளுடன் ராகுல்

ராகுல் காந்தியின் யாத்திரை இன்றுடன் 34 வது நாளை எட்டியுள்ள நிலையில்,

* இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்துள்ளதாகவும்,

* கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள ஒருவரை மக்களிடையே நேரடியாக நெருக்கமாக பேச வைத்துள்ளதாகவும்,

* இதனால் ஏற்பட்ட உற்சாகத்தில் பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த கட்சி நிர்வாகிகள் களத்துக்கு வந்திருப்பதாகவும் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் கருதுகின்றனர்.

குழந்தை உரிமைகள் ஆணையம் புகார்

இந்த நிலையில்தான்,

* ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் யாத்திரையில், குழந்தைகள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும்,

* எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (NCPCR) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்... காங். விளக்கம்

இதைத் தொடர்ந்து இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

* இதனையடுத்து தேர்தல் ஆணையர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்,

* காங்கிரஸுக்கு எதிரான புகார் "அற்பத்தனமானது" என்றும், தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் போலியான குற்றச்சாட்டுகளை அரசியல் செய்வதாகவும் கூறி, அதனை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், "ராகுல் காந்தியுடன் குழந்தைகள் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து இதில் மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டமோ, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவோ இல்லை என்று விளக்கம் அளித்தோம்.

ராகுல் காந்தி ஒரு ஓவியப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஒரு 15 நிமிடம் கலந்து கொள்ள சென்றிருந்தார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். தாய், தந்தை குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் ராகுல் காந்தியுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒன்றும் சட்டவிரோதம் இல்லை என்று" தெரிவித்தார்.

'பாஜக - ஆர்.எஸ்.எஸ் பின்னணி'

மேலும் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருப்பது பாஜக -ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய தலைவர் பிரியன்ங் கானுங்கோ, "காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் பொய் சொல்கிறது. அக்கட்சி, 7-17 வயது வரையிலான குழந்தைகளை குறிவைத்து "ஜவஹர் பால மஞ்ச்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதை மறைக்கிறது. 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு அரசியல் கட்சிகள் உகந்தது இல்லை என்பதால் இது மிகவும் தவறானது" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தால், ராகுல் காந்தி யாத்திரையின்போது குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லக்கூடாது என்பதுபோன்ற தடைகளோ அல்லது சில கட்டுப்பாடுகளோ விதிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,


2
எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: டெல்லிக்கு தெரியட்டும் என 'தில்'ல்லாக பேசிய எடப்பாடி! 

ட்டமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பு, சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம், பன்னீரின் போட்டி நிர்வாகிகள் நியமனம் என அ.தி.மு.க-வை உலுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையே, சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்திருக்கும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பரபரப்பை எகிற வைத்துவிட்டது. கூட்டத்தில், எடப்பாடி பேசியிருக்கும் சில விஷயங்கள்தான் நிர்வாகிகள் மத்தியில் 'ஹாட் டாபிக்'.

15 நிமிடமே பேசினாலும், பேச்சில் பட்டாசைக் கொளுத்திவிட்டாராம் எடப்பாடி. விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
திமுக பொதுக்குழு கூட்டம்

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால்?... அமைச்சரின் சவாலும் உண்மை நிலையும்!

"வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். சவாலாகச் சொல்கிறேன். மேடைப்பேச்சுக்காக நான் சொல்லவில்லை'' என திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கும் கருத்து தமிழக அரசியல் களத்தில் பல விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்வதைப்போல, 2024 தேர்தலில் திமுக தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய அரசியல் சூழல் நிலவுகிறதா..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஸ்வப்னாவின் சுயசரிதை

`முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் பார்சலை எடுக்கச் சென்ற ஸரித், பார்சலை விடுவிக்க முயன்ற கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், சந்தீப் நாயர் என பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார் ஸ்வப்னா. 'சதியுடே பத்ம வியூகம்' என்ற அந்த புத்தகத்தில்...

இந்த செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஒமிக்ரான்

சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு BF.7, BA.5.1.7 - மீண்டும் ஆபத்து? WHO சொல்வதென்ன?

கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது என்று மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
இரவு உணவு ( விகடன் )

இரவு 7 மணிக்குள் டின்னர்... சாத்தியமும் நன்மைகளும்!

தினமும் மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துவிடும் பழக்கமே தன் ஃபிட்னெஸ் சீக்ரெட் என நடிகர் விஜய் ஒருமுறை சொல்லியிருந்தார்.

6 - 7 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா... இதை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன..?

வாழ்க்கை விதிமுறை மற்றும் ஆன்டி ஏஜிங் ஆலோசகரான டாக்டர் கெளசல்யா நாதன் அளிக்கும் விரிவான விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
K. B. Sundarambal

'லட்ச ரூபாய் நட்சத்திரம்' கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கைக்குப் பின்னால்...

15.08.1965 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

"குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார்.

தாயைப் பின் தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) "எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?" என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் "என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை..."

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் இங்கே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.