Published:Updated:

Evening Post: ஆளுநரை வெளியேற்ற தீர்மானம்?-முடிந்ததா கனிமொழி- உதயநிதி மோதல்?- 'நிலவில் முட்டைகோஸ்'

Vikatan Highlights October 12
Listicle
Vikatan Highlights October 12

தமிழக ஆளுநரை வெளியேற்றக்கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்படுமா?, முடிவுக்கு வந்ததா கனிமொழி - உதயநிதி மோதல்?, தேவர் குருபூஜைக்கு வருகிறாரா மோடி?, கேரளா நரபலி குறித்த அதிர்ச்சி தகவல்கள், கிசுகிசு: நல்லநேரம் பார்த்த முதன்மையானவர், 'நிலவில் ப்ரோக்கோலி பயிரிடலாம்'...


1
ஆளுநர் ஆர்.என் ரவி

மீண்டும் வெடித்த மோதல்: சட்டசபையில் ஆளுநரை வெளியேற்ற தீர்மானம்?

மிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுகவுக்கும் இடையே மீண்டும் உரசல் தலைதூக்கி உள்ள நிலையில், வருகிற 17 ஆம் தேதியன்று கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கோரிக்கை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக

மாநில அரசின் நிர்வாக விஷயங்களில் தலையிடுவது உட்பட பல்வேறு விதங்களில் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு தங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக தமிழகம், டெல்லி, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாகவே

* கடந்த குடியரசு தினத்தின்போது, ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

* அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மோடி - ஸ்டாலின்

மோடி வருகையால் ஏற்பட்ட சமாதானம்

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்ததும், சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் மேடையில் அவர் நெருக்கமாக உரையாடியதும் கவனம் ஈர்த்தன.

இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் கவர்னர் ரவி சற்று அடக்கி வாசித்த நிலையில்,

* கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று, சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல்கள் சற்று அடங்கி காணப்பட்டன.

மீண்டும் சீண்டிய ஆளுநர்

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சில மூத்த பத்திரிகையாளர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பேட்டி கொடுத்த ஆளுநர் ரவி, கிடப்பில் போடப்பட்டிருக்கும் சில மசோதாக்கள் மீதான தனது எதிர் கருத்துகளை அரசுக்கு தெரியப்படுத்தும் முன்னரே, செய்தியாளர்களிடம் கூறியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், கடந்த 7 ஆம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கவர்னர் ரவி, "திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. திருக்குறளைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்" எனப் பேசியது மீண்டும் சர்ச்சையானது.

காட்டமாக விமர்சித்த 'முரசொலி'

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுக-வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி'-யில் " திருக்குறளை தீர்த்துக் கட்டி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல மேதகு ஆளுநர் அவர்கள். தினந்தோறும் திருக்குறளை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார்" என இன்று கவர்னரை மிகக் காட்டமாக விமர்சித்து தலையங்கம் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் திட்டத்தின் கீழ் 2 நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநர் ரவி, " தற்போது திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டும் அல்ல. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது" என கூறியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கொந்தளிக்கும் கூட்டணி கட்சிகள்

" ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மாணவர்களிடம் விஷக்கருத்தை போதிக்கிறார். இது மிகவும் தவறானது. தமிழ் கலாச்சாரம் இதனை ஏற்றுக்கொள்ளாது" என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையேதான், வருகிற 17 ஆம் தேதியன்று தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம்?

இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதவில்,

* " ஆளுனர் மாளிகை என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் அலுவலகமல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனை,உரிமைகளை பாதுகாக்க தங்கி பணி செய்யும் இடம்.

* ஆனால் ஆளுனரான ரவி, அதை தவிர மற்ற சங்கத்துவ பணிகளை செய்வது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும்.

* ஆகவே, வரும் 17 ம்தேதி கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

வன்னி அரசு

கூட்டணிக் கட்சிகளைத் தூண்டும் உத்தி

* அரசியலில் சில நேரம் ஆட்சியில் இருக்கும் பெரிய கட்சிகள், சில கோரிக்கைகளை கூட்டணி கட்சிகளை விட்டு எழுப்பச் சொல்வதோ அல்லது பேசுவதோ வழக்கமாக கடைப்பிடிக்கும் உத்திதான்.

* அதே உத்தியை திமுகவும் பின்பற்றினால், ஆளுனரை வெளியேற்றும் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்லாது, காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் எழுப்பக்கூடும். அப்படி எழுப்பப்பட்டால், அது கவர்னருக்கு எதிரான 'மூவ்' ஆகவே கருதப்படும்.

அதே சமயம் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளும் இதை இலேசில் விட்டுவிடாது என்பதால், விரைவில் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கலாம்.


2
கனிமொழி - ஸ்டாலின்

முடிவுக்கு வந்ததா கனிமொழி- உதயநிதி மோதல்?

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பொதுக்குழுவிலேயே கனிமொழியை வானாளாவ வாழ்த்துப் பேசியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதுவரை உதயநிதிக்கும், கனிமொழிக்கும் இடையே மறைமுக மோதல் இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென இணைந்தது எப்படி என்று விசாரித்தோம்...

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
பிரதமர் மோடி

தேவர் குருபூஜைக்கு வருகிறாரா பிரதமர் மோடி? - தமிழக பாஜக சொல்வதென்ன?!

ந்த ஆண்டு தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளன.

அப்படி வந்தால், " அது சாதி ரீதியில் மக்களை பிளவுப்படுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே இருக்கும்” என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில்...

இச்செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
நரபலி வழக்கில் கைதான லைலா - பகவல் சிங்

கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர் - அதிர்ச்சித் தகவல்கள்!

கல்வியறிவில் முதலிடத்திலுள்ள கேரள மாநிலத்தில் மூட நம்பிக்கையால் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கிசுகிசு

கிசுகிசு: நல்லநேரம் பார்த்த முதன்மையானவர்!

சட்டமும் சவடாலுமாகப் பேசும் மாஜியிடம் இடைவெளியைக் கடைப்பிடித்த இலைக் கட்சியின் துணிவானவர், அவரை வீட்டுக்கே வரவழைத்துத் தனி ஆலோசனை நடத்துகிற அளவுக்கு இப்போது நெருங்கியிருக்கிறார்.

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல அரசியல் சீக்ரெட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
சந்திரயான் 2 ( ISRO )

'நிலவில் தண்ணீர்... ப்ரோக்கோலி, முட்டைகோஸ் பயிரிடலாம்..' - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

'நிலவில் நீர் இருப்பது குறித்து கண்டுபிடித்திருப்பது மிக முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். இதனால் மக்கள் நிலவிலேயே குடியேறி விவசாயம் கூட செய்யமுடியும்' என்று கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசினோம்... அவர் அளித்த விரிவான விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
தீபாவளி ரேஸில் இருக்கும் இந்திய படங்கள் !

`சர்தார்', `பிரின்ஸ்' முதல் 'ஹர ஹர மகாதேவ்' வரை... தீபாவளி ரேஸில் இருக்கும் இந்தியப் படங்கள்!

வ்வொரு வருடமும் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு.

அந்த வகையில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இந்திய படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...