Published:Updated:

Evening Post: அதிமுகவின் பொன்விழா சோகம்!-திமுக ரியாக்‌ஷன்-மாறாத தமிழிசை-சினிமா:பாண்டிராஜ் அட்வைஸ்!

Vikatan Highlights October 17
Listicle
Vikatan Highlights October 17

பொன்விழா கொண்டாட்டத்தில் பிளவுபட்டு நிற்கும் அதிமுக, தொடர்ந்து அரசியல் பேசும் தமிழிசை, அண்ணாமலை கருத்தும் திமுக ரியாக்‌ஷனும், தீபாவளியும் சென்னையும், மும்பை இடைத்தேர்தலில் போட்டியிடாத பாஜக, ரஷ்யா மீதான வயாகரா குற்றச்சாட்டு, தமிழ் சினிமா... பாண்டிராஜ் அட்வைஸ்!


1
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ் Vs ஓபிஎஸ்: அதிமுக-வின் பொன்விழா சோகம்!  

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 -ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்ட அதிமுக, இன்று தனது 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூழலில், அதனை முழு உற்சாகத்துடன் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிளவுபட்டு நிற்கும் அதிமுக

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததிலிருந்தே அதிமுக தொடர்ந்து பிளவுகளைச் சந்தித்து வருகிறது.

* 2021 ஆம் ஆண்டு சட்டமன்றதேர்தலுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் இருந்ததால், அதிகாரத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் தங்களுக்கு இடையேயான மோதலை பகிரங்கப்படுத்தாமல் இருந்துவந்தனர்.

* ஆனால், 2021 தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் இரு தரப்புக்குமிடையேயான மோதல் வெளிப்படையாக வெடித்தது. அதிலும், ஒற்றைத்தலைமையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சி ஓபிஎஸ்-ஸுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், இரு தரப்பினரும் பரஸ்பரம் கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவிப்பதும், அந்த பதவிகளில் தங்களது ஆதரவாளர்களை நியமிப்பதுமாகவும் மோதல் உச்சத்தை எட்டியது.

* இதன் விளைவு, அதிமுக யாருக்கு என்பதை தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இன்னொரு பக்கம் பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

களையிழந்த பொன்விழா கொண்டாட்டம்

இந்த சூழ்நிலையில்தான், அதிமு.க. பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா இன்று அணியினராலும் தனித்தனியாக கொண்டாடப்பட்ட போதிலும், அது களையிழந்தே காணப்பட்டது.

* சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு.க தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர், அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

* அதிமுக ஆண்டு விழாவின்போது விழா மலர் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் மலர் எதுவும் வெளியிடப்படவில்லை.

பன்னீர்செல்வம்

தனியாக கொண்டாடிய ஓபிஎஸ் அணியினர்

அதேபோன்று சென்னை, தியாகராய நகரில் உள்ள எம்.ஜிஆர். நினைவு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடியை ஏற்றி எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து சமாதான புறாக்களை ஓ.பன்னீர்செல்வம் பறக்கவிட்டார்.

இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களில் காணப்பட்டது. இருதரப்பு ஆதரவாளர்களும் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை தனித்தனியாகவே கொண்டாடினர்.

* "கட்சியின் பொன்விழா கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல, விரைவில் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ள சூழ்நிலையில், கட்சி இப்படி ஒரு சோதனையான நிலையை எதிர்கொண்டுள்ளதே, இதனால் கட்சியின் சின்னம் முடங்கிவிடுமோ..." என்று இரு அணியிலும் உள்ள அக்கட்சித் தொண்டர்கள் வேதனையுடன் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித்தொண்டர்கள் விரும்புகிறபோதிலும் அது சாத்தியமில்லாததாகவே தெரிகிறது.

எடப்பாடி காட்டும் உறுதி

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதில்லை என்பதில் எடப்பாடி மிக உறுதியாக உள்ளார்.

அதன் இன்னொரு வெளிப்பாடுதான், இன்று கூடிய தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், ஓபிஎஸ் அருகில் அமரவேண்டியது வரும் என்பதால், இன்றைய கூட்டத்தை எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களாக உள்ள பெரும்பான்மையாக உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களும் புறக்கணித்தது.

இது குறித்த செய்தியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
தமிழிசை செளந்தரராஜன்

'காவியின் பலம்..' -  தொடர்ந்து அரசியல் பேசும் தமிழிசை! 

ன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.

தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், ``தமிழகத்தில் இந்து தர்மத்தைப்பற்றி பேசுவதும், ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான் ஒரு நிகழ்வு போலவும், பேசக்கூடாத ஒன்றை பேசுவதுபோலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. ஆன்மீகம்தான் நம் அடிப்படை. ஆனால்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
அண்ணாமலை

'இந்தி திணிப்பை தமிழக பாஜக எதிர்க்கும்' - அண்ணாமலை கருத்தும் திமுக ரியாக்‌ஷனும்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுகையில், "இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்று மொழியைக் கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கையாக இருக்கிறது. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால் அதைத் தமிழக பா.ஜ.க எதிர்க்கும்" எனக் கூறியிருந்தார் .

இதுகுறித்து, தி.மு.க...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
மெரினா கடற்கரை

தீபாவளியும் சென்னையும்! #Deepawali2022

தீபாவளிக்கு, தொழில், வேலை காரணமாக குடிகொண்ட ஊரிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் மனிதர்களின் அனுபவங்களே பெரும்பாலும் பகிரப்படும்.

ஆனால், மதுரை, கோவை, சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தையே தீபாவளிக்கு தத்தமது ஊர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு பெருமூச்சுவிடும் சென்னையின், சென்னைவாசியின் அனுபவம் இது!

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

மும்பை சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்பாளரை பாஜக திரும்ப பெற்றது ஏன்?

மும்பையில் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷ் காலமானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே முடிந்திருந்தது.

இன்று வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வரும் 3-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. சிவசேனா சார்பாக ரமேஷ் மனைவி ருதுஜாவும், பாஜக சார்பாக முர்ஜி பட்டேலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ரஷ்யா - உக்ரைன்

"வீரர்களுக்கு வயாகரா கொடுத்தனுப்பும் ரஷ்யா" - ஐ.நா பிரதிநிதி குற்றச்சாட்டு!

ந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், போரில் பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய செய்தி ஊடகமான AFP-க்கு ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பாட்டன் அளித்த பேட்டியில், "ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து உக்ரைன் கொடூரமாகக் காட்சியளிக்கிறது..."

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
director pandiraj

தமிழ் சினிமா இனி எப்படி எடுக்கப்பட வேண்டும்?- இயக்குநர் பாண்டிராஜ் 'பொளேர்'! 

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் உலகத் திரைப்பட விழா நிகழ்ச்சி புதுக்கோட்டையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 3-ம் நாளான நேற்று, திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் கலந்துகொண்டு இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்தும் பேசினார்.

அவர் தனது பேச்சில், "கோவிட் தொற்று காலத்திற்குப் பிறகு திரைப்பட ரசிகர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...