Evening Post:சசிகலா மீது குற்றச்சாட்டு-அதிமுக வெளியேற்றம்-WhatsApp-ல் 5 அப்டேட்கள்,லைலா பேட்டி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆணையம் சசிகலாவைக் குற்றம் சாட்டுவது ஏன்?, சட்டசபையில் அதிமுக வெளியேற்றத்துக்கு 3 காரணங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை சொல்வதென்ன?WhatsApp -ல் 5 புதிய அப்டேட்கள், முதலிரவில் முழுமையான உறவு நிகழாததற்கு என்ன காரணம்? லைலா ரீ என்ட்ரி

ஜெயலலிதா மரணம்: சசிகலாவை ஆணையம் குற்றம் சாட்டுவது ஏன்?
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்'... மறுக்காத சசிகலா
ஆனால், அதற்கு இடைப்பட்ட அந்த 75 நாட்களும், " அம்மாவை பார்த்தோம்... இட்லி சாப்பிட்டார்... ஜூஸ் குடித்தார்... டாக்டர்களிடம் நலமாக இருப்பதாக தெரிவிக்க கட்டை விரலைக் கண்பித்தார், டி.வி பார்த்தார், கிச்சடி சாப்பிட்டார், பந்தை தூக்கிப்போட்டார், நர்ஸ்களுடன் சிரித்தார், பேசினார், அவர்களுக்குப் பரிசு கொடுத்தார், 'போயஸ் கார்டன் வந்தால் காபி எப்படிப் போடணும் எனச் சொல்லித் தருகிறேன்' என்றார், டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார் என்றெல்லாம் ஏராளமான விஷயங்கள் வெளியே பத்திரிகையாளர்களிடம் சொல்லப்பட்டன.
* இப்படி வெளிவந்த செய்திகளையெல்லாம் ஜெயலலிதாவை உடன் இருந்து கவனித்த சசிகலா மறுக்கவில்லை.
* போதாதற்கு வெங்கையா நாயுடு உட்பட அப்போதைய மத்திய பாஜக அரசின் அதிகார முகங்கள் பலரும் ஜெயலலிதாவை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.
* ஆனாலும் "நன்றாக இருந்த ஜெயலலிதாவை, யாருக்குமே காட்டாமல் மறைத்துவைத்திருக்கவேண்டிய மர்மம் என்ன?" என்ற கேள்விகள் அப்போது எழாமல் இல்லை.
சந்தேகமும் ஆணையத்தின் குற்றச்சாட்டுகளும்
இந்த நிலையில், ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் சசிகலா குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை கமிஷன் வேண்டும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் எழுப்பிய குரலால், சந்தேக விரல் அப்போது சசிகலாவை நோக்கி நீண்டது.
ஆனால், தன்னை நோக்கி களங்கம் கற்பிக்கப்படுவதாக உருக்கமான கண்ணீர் அறிக்கைகள் அவரது தரப்பிலிருந்து வெளிவந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் சசிகலாவைக் குற்றம் சாட்டுகிறது.
* " ஜெயலலிதா மரண தேதியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா போன்றவர்கள், ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரை செய்திருந்தபோதிலும், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அது நடக்காதது ஏன்?
* அவர் மருத்துவமனையிலிருந்த சமயத்தில் அவர் எந்த நேரத்திலும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது..." என்றெல்லாம் நீளும் அந்த அறிக்கை,
" ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை தரப்படவில்லை. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அன்றைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளது.

சட்டசபை: அதிமுக வெளியேற்றத்துக்கு துரைமுருகன் சொன்ன 3 காரணங்கள்!
சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளான நேற்று, அவையை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தரப்பு எம்.எல்.ஏ-க்கள், இன்று சட்டமன்றம் கூட்டம் கூடுவதற்கு முன்பே காலை சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து, "எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு, "சட்டப்பேரவையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார். இதனால் எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று கூட்டம் ஆரம்பித்ததும்...

'வேட்டையாடுவது போல்...' - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை சொல்வதென்ன?
நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட பல்வேறு தகவல்களில் கசிந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

WhatsApp:மெசேஜ் எடிட் உள்பட 5 புதிய அப்டேட்கள்...
வாட்ஸ் அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து புதிய அப்டேட்டுகளை வழங்கவிருக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்காக வாட்ஸ் அப்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறது.
அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

பெரும்பாலான முதலிரவில் முழுமையான உறவு நிகழ்வதில்லை; காரணங்களும் தீர்வுகளும்! #VisualStory
முதலிரவில் முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லையென்றால், அது குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் பலர் மிகவும் அச்சம், சோர்வு கொள்கிறார்கள்.

ஜோதிகா - சூர்யா லவ் ஸ்டோரி... ஃப்ளாஷ்பேக் பகிரும் ரீ என்ட்ரி லைலா!
16 வருஷமாச்சு. ஹீரோயினோட அம்மா, சிஸ்டர் ரோல்கள்ல நடிக்கக் கேட்டாங்க. சீரியல் வாய்ப்பும் வந்தது. ஆனா, நல்ல கதையம்சம் உள்ள படத்துல முக்கியமான ரோல்ல நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அது நிறைவேறியிருக்கு. `சர்தார்' படத்தின் மூலமா ரீ என்ட்ரி கொடுக்குறேன்" எனக் கன்னக்குழி சிரிப்புடன் பேசத் தொடங்கினார் நடிகை லைலா. `
நந்தா', `பிதாமகன்' எனப் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது `சர்தார்' படத்தில்...