Published:Updated:

Evening Post:கார்கே: மோடியை வீழ்த்த முடியுமா?-மீண்டும் கோவிட்- 'இலவசம்' சர்ச்சை- நடிகரின் மறுமணம்!

Vikatan Highlights October 19
Listicle
Vikatan Highlights October 19

காங்கிரஸ் புதிய தலைவராகி உள்ள மல்லிகார்ஜுன கார்கேவால் மோடியை வீழ்த்த முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணைய அறிக்கையின் தாக்கம் என்ன? குஜராத்தில் இலவச வாக்குறுதிக்கு மோடியின் பதில் என்ன?கிசுகிசு, மீண்டும் அச்சுறுத்தும் கோவிட், 56 வயதில் மறுமணம் செய்த நடிகர்


1
மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் புதிய தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே: மோடியை வீழ்த்த முடியுமா?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றுள்ளதன் மூலம், அந்தக் கட்சியின் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகி உள்ளார்.

காங்கிரஸில் எழுந்த கலகக்குரல்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இருப்பினும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், கட்சிக்கு முழு நேர தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சியில் எழுந்தன.

* மேலும், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாகச் சீா்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற அப்போதைய ஜி-23 காங்கிரஸ் தலைவா்கள் வலியுறுத்தினர்.

* மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தல்

* இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த அக்கட்சி முடிவு செய்தது. கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 9, 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். கடந்த 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லியில் உள்ளகாங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே

இதில், மல்லிகார்ஜுன கார்கே 7, 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோடியை வீழ்த்த முடியுமா?

* கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 545 இடங்களில் 53 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. ஆனால், பாஜகவோ 303 இடங்களில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தொடர்ந்து மாநில தேர்தல்களிலும் வெற்றியை குவித்து வருகிறது.

* 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு தேர்தல் வரை உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் என பெரும்பாலான இந்தி பேசும் மாநிலங்களில் தலித்துகள், பழங்குடியினர், யாதவ சமூகத்தினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் வாக்குகளே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தன.

அப்போது முதல் பிராந்திய கட்சிகள் செல்வாக்குப்பெற்று வளரத்தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத்தொடங்கியது.

* 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது கூட பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன்தான்.

இந்த நிலையில்தான், 'இந்து' என்ற பிரசாரத்தை முன்னிறுத்தி இந்து வாக்குகளை அறுவடை செய்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, தொடர்ந்து இந்து வாக்குகளை ஒன்று திரட்டி வைத்துள்ளது. தற்போது 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இன்னொரு பக்கம் மோடி - அமித் ஷா என்ற பலமான கூட்டணியை காங்கிரஸ் குடும்பத்தைச் சாராத மல்லிகார்ஜுன கார்கேவால் வீழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

* இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகமாக இன்னும் சோனியாவும், ராகுலுமே அறியப்படுகின்றனர்.

* இன்னொன்று 'இந்திய ஒற்றுமைப்பயணம்' என்ற பெயரில் ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் யாத்திரைக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பும் அந்தக் கட்சிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.

இந்த இரண்டு அம்சங்களும், தன்னிடம் இருக்கும் கடந்தகால அரசியல் அனுபவமும்தான் பாஜக-வை எதிர்கொள்ள மல்லிகார்ஜுன கார்கே-வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை!


2
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

ஜெ. மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணைய அறிக்கைகளால் ஏற்படும் தாக்கம் என்ன?

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த இரண்டு அறிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


3
ரேஷன் கடை

இலவசங்களுக்கு எதிராக பேசும் மோடி! - குஜராத் அரசின் இலவச வாக்குறுதிக்கு என்ன பதில்?!

லவசங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அது உச்சத்தைத் தொட்டது பிரதமர் மோடி இலவசங்கள் பற்றி பேசியபோது தான். அவர், "இலவசங்கள் நமது குழந்தைகளின் உரிமையைப் பறித்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்" என்றார்.

ஆனால் தற்போது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலேயே இலவசங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கிசுகிசு

கிசுகிசு: - விளக்கம் சொல்லியே ஓய்ந்துபோன மாஜி காக்கி!

றுமும் கட்சித் தலைவரின் பிறந்தநாள் விழா, சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. நேரில் போய் வாழ்த்திவிட்டு வந்தார் முதன்மையானவர். அவர் சென்ற பிறகும் தொடர்ந்த விழா நிகழ்வில், உறுமும் தலைவரை 'வருங்கால முதல்வர்' எனப் புகழ்ந்து பலரும் வாழ்த்து மழை பொழிந்தார்களாம். விஷயம் முதன்மையானவர் கவனத்துக்கு தாமதமாகச் சொல்லப்பட அந்த நிகழ்வின் மொத்த வீடியோ பதிவையும் தன் பார்வைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறாராம்.

மேலும், 'பசைக்கு மசிந்தாரா செம்மையான சீனியர் புள்ளி?, பணிவானவரின் வாரிசின் வருத்தம், காக்கி வட்டாரத்தில் வெடிக்கக் காத்திருக்கும் சரவெடி...' உள்ளிட்ட பல அரசியல் சீக்ரெட்ஸ்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கோவிட்-19 தொற்று

" மறுபடியும் முகக்கவசம் கட்டாயம்... எச்சரிக்கையாக இருங்கள்!" - மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்!

கோவிட் - 19 தொடர்ந்து பல புதிய திரிபுகளாக உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

ஒமிக்ரானின் உருமாறிய திரிபு BF.7 மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
பப்லு

56 வயதில் 23 வயது மலேசிய பெண்ணை மறுமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு?

டிகர் பப்லு என்கிற பிருத்வி ராஜ் தன்னுடைய 56 வது வயதில் 23 வயது நிரம்பிய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை வட்டாரத்தில் இந்த விவகாரம்தான் இப்போது பரபரப்புச் செய்தி.

சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் 57 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் தன்னுடைய மனைவிதான் என அந்தப் பெண்ணை மேடை ஏற்றிய போது பப்லுவைத் தெரிந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்கள்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...