Published:Updated:

Evening Post:ஆளுநர்களின் அடங்காத 'அட்டாக்!'-ஜகா வாங்கிய இந்து முன்னணி-கபிலனுக்காக வாதாடிய மிஷ்கின்!

Vikatan Highlights October 20
Listicle
Vikatan Highlights October 20

தமிழக விவகாரங்களில் தொடர்ந்து மூக்கை நுழைப்பேன் எனச் சொல்லும் தமிழிசை, போக்குவரத்து விதியில் வந்த மாற்றம், ஜகா வாங்கிய இந்து முன்னணி, உருவான திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு, தீபாவளி தாத்பரியங்கள், கபிலனுக்காக இளையராஜாவிடம் வாதாடிய மிஷ்கின்...


1
தமிழிசை

தமிழகம்: ஆளுநர்களின் அடங்காத  'அட்டாக்!'

மிழக ஆளுநர் ஆர்.என். ரவிதான் திமுக அரசுக்கு குடைச்சலைக் கொடுத்து வருகிறார் என்றால், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனும் தன் பங்குக்கு மீண்டும் மீண்டும் தமிழக விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் விதமாக பேசிவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழக ஆளுநராக ஆ.என். ரவி பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுடனான மோதல் போக்கு தொடர ஆரம்பித்துவிட்டது. தமிழக அரசின் 'நீட்' விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக பேசுவது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தன்னிச்சையாக செயல்படுவது என இரு தரப்புக்குமிடையேயான மோதல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எதிர்ப்பை பல விதமாக வெளிப்படுத்தினாலும் ஆளுநர் ரவியின் போக்கில் மாற்றம் எதுவும் இல்லை.

ஆளுநர் ரவியின் தொடர் தாக்குதல்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற 75-வது சுதந்திர விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி,

* " தமிழ்நாட்டில் 24 சதவிகிதம் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், பட்டியலின குழந்தைகளில் வெறும் 13 முதல் 14 சதவீத குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர்.

* சில சமூகத்தினரால் மட்டுமே 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வியில் வளர்ச்சி அடைய முடிகிறது" எனக் குற்றம் சாட்டி இருந்தார்.

ஆளுநர் ரவி

தவறாக பேசுவதாக கொதித்த திமுக

ஆனால், ஆளுநரின் இந்தக் குற்றச்சாட்டு தவறானது என திமுக தரப்பில் உடனடியாக பதிலடி தரப்பட்டது.

* திமுக எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் இது குறித்து நேற்று சட்டசபையில் பேசுகையில்," 51.7 சதவிகிதம் என்பதுதான் நம்முடைய தமிழ் நாட்டின் உயர் கல்வி சதவிகிதம் ஆகும். அதில் பட்டியலின மாணவ, மாணவியரின் எண்ணிக்கை என்பது 39.6.

* ஆனால், நியமன தலைமைகளை இதை தவறாக பேசுகிறார்கள். இந்த விவரத்தை பேசாமல் நியமன தலைமலைகள் தவறான விஷயங்களை பேசுகிறார்கள்" எனக் கூறினார்.

அதேபோன்று திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமாரும், ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளதாக கூறி, இதே தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

செந்தில்குமார் எம்.பி

கைகோத்த தமிழிசை

இது ஒரு பக்கம் இருக்க, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனும் தன் பங்குக்கு திமுக-வைச் சீண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

அண்மையில் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், " காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக் கூடாது. ஆளுநர் இப்படிப் பேசலாமா என ஒரு பெரிய கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும், நான் தமிழகத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துகிறேன்" எனக் கூறி இருந்தார்.

அதற்கு முன்னதாக ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்ற சர்ச்சை எழுந்தபோது, "தமிழ்நாட்டின் அடையாளம் இறைவழிபாடு. சைவம், வைணவம் இரண்டும் இந்து மதத்தின் அடையாளங்கள்தான். இனியும் அடையாளத்தை மறைக்க முயற்சி செய்தால் அது சரியாக இருக்காது" எனக் கூறி இருந்தார்.

'தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன்'

இந்த நிலையில், தமிழிசையின் இத்தகைய பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அவர் தேவையில்லாமல் தமிழக விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால்,

* " யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல,தலையையும் நுழைப்பேன்,வாலையும் நுழைப்பேன்.

* என்னை யாரும் தடுக்க முடியாது அத்துடன் தமிழ்நாட்டில் காலும் வைப்பேன்" என தமிழிசை சௌந்தரராஜன் இன்று பேசி உள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பயணம் நிறைவுபெற்று, 4-ம் ஆண்டு தொடக்க விழா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கொதிக்கும் திமுக...

இப்படி தமிழக ஆளுநர் மட்டுமல்ல, அண்டை மாநில ஆளுநர் கூட தமிழக விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கும், கருத்துகள் தெரிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர், " அரசியல் பேசுவதாக இருந்தால் தமிழிசை மட்டுமல்ல, ஆளுநர் ரவியும் கூட தங்களது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பேசட்டும்" எனக் காட்டமாக கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநர்களின் இத்தகைய பேச்சுகளுக்குப் பின்னால் மத்திய அரசு இருப்பதாகவும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை ஆயுதமாகக்கொண்டு, மோடி அரசு நெருக்கடி கொடுத்துவருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
புதிய போக்குவரத்து விதி அமல்

'மதுபோதை: இனி உடன் பயணிப்பவர் மீதும் வழக்குப் பாயும்!'  

குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 11,419 இறப்புகள் நிகழ்ந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: ஜகா வாங்கிய இந்து முன்னணி முதல் கறைபட்ட கைக்கு சிபாரிசு செய்த பி.டி.ஆர் வரை!

நேத்திக்கடனை நிறைவேற்றிய அமைச்சர்...

கொண்டாட்டத்தில் உடன்பிறப்புகள்!

சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் அமைச்சரானால், தூங்கா நகர முனீஸ்வரர் கோயிலுக்கு கிடா வெட்டி பொங்கல்வைப்பதாக வேண்டியிருந்தார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் அமைச்சர். வேண்டுதல் நிறைவேறினாலும், நேர்த்திக்கடனை நிறைவேற்ற நேரம் கிடைக்காமல்...

கழுகார் தரும் விறுவிறுப்பான பல அரசியல் அப்டேட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
அண்ணா அறிவாலயம்

திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌சன் என்ன?!

மிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருகின்றன. இந்தச்சூழலில், கடந்த சில மாதங்களாகவே திராவிடம் குறித்த கருத்துகள் திமுக-வினரால் அதிகம் பேசப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழலில், 59 சிறு சிறு இயக்கங்கள் இணைந்து திராவிட ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருக்கின்றன.

இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் இதற்கான திமுக-வின் ரியாக்சன் என்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
தீபாவளி

தீபாவளி தினத்தில் புத்தாடை எதற்கு? தீபம், பலகாரம், பட்டாசு - தீபாவளி தாத்பரியங்கள்!

தீபாவளியன்று அவசியம் புத்தாடை உடுத்தியே ஆகவேண்டுமா? அன்று எண்ணெய்க் குளியல் செய்வது ஏன், பலகாரங்கள் படைப்பதும் பட்டாசு வெடிப்பது எதற்காக? இதற்கெல்லாம் புராணங்கள் சொல்லும் காரணம் என்ன, தாத்பரியங்கள் என்ன தெரிந்துகொள்வோமா?

நல்லெண்ணெய்யில், மகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்துகிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
கபிலன்

"மிஷ்கின் என் பாடல் வரிகளுக்காக இளையராஜாவிடம் வாதிட்டார்!"- கபிலன் நெகிழ்ச்சி!

'மனைவி இறக்கி

வைத்ததிலிருந்து

நான்தான்

சுமந்துகொண்டிருந்தேன்...

கடைசியாய் சுமந்த தீச்சட்டி வரை!'

சமீபத்தில் மரணித்த தன் மகளின் நினைவுகளைக் கவிதைகளாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் கபிலன். மகளின் புகைப்படம், மகள் பயன்படுத்திய பொருள்கள், புத்தகங்களைத் தன் அலுவலகத்தில் அடுக்கிக்கொண்டிருந்தவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுப் பேசினோம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடல் எழுதிக்கொண்டிருப்பவரிடம் நடந்த உரையாடலை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...