Published:Updated:

Evening Post: கோவை:பாஜக-வுக்கு பணிந்ததா அரசு?-ஆபாச படங்கள்: போப் வேதனை-சீவலப்பேரி பாண்டி:80 & 90ஸ்

Vikatan Highlights October 27
Listicle
Vikatan Highlights October 27

கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது சரியான நடவடிக்கைதானா?, ஆபாச படங்கள் குறித்து போப் பிரான்சிஸ் வேதனை, கழுகார் அப்டேட்ஸ்: திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி... தொடரும் 'தேவதாசி' முறை, சீவலப்பேரி பாண்டி:80 & 90ஸ் 'நாஸ்டால்ஜியா கொண்டாட்டம்


1
கோவை கார் வெடிப்பு

என்.ஐ.ஏ-விடம் சென்ற கோவை வழக்கு: பாஜக-வுக்குப் பணிந்ததா அரசு? 

கோவை கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளுக்கு நாள் அதன் விசாரணையில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்தும் வருகிறது.

இதனால் இந்த வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து விளக்கியும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து இதன் விசாரணையை என்.ஐ.ஏ-க்கு பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

என்.ஐ.ஏ விசாரணை ஏன்?

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியிருக்கும் அறிக்கையில், " இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.

சீமான்

அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இதனிடையே, முதல்வரின் இந்த உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கோவை உக்கடம் அருகே, வாகனத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை, மிகத் தவறான நிர்வாக முடிவாகும்" எனக் கூறியுள்ளார்.

வேறு சில அமைப்புகளும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த மூவ் சரியானதுதானா..? இது குறித்து திமுக தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் உள்ளிட்டவற்றை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
போப் பிரான்சிஸ்

பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கூட ஆபாச படங்களைப் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை!

பாச படங்கள் பார்ப்பது ஆன்மாவை பலவீனமாக்கி விடும் என்றும், இதை பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கூட பார்ப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பாதிரியார்களுக்கு களங்கம்'

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கல்வி கற்கும் பாதிரியார்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடலின்போதே நடந்த உரையாடலின்போதே போப் ஆண்டவர் இவ்வாறு கூறினார்.

ஆபாச படம் பார்ப்பது பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உட்பட பலருக்கும் இருக்கும் ஒரு களங்கம் என்றும், ஆபாச பட நுகர்வுக்கு எதிராக தாம் தொடர்ந்து மக்களை எச்சரித்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த ஜூன் மாதம் கூட " ஆபாச படம் பொதுமக்களின் உடல் நலனுக்கு மிகவும் அச்சுறுத்தலானது" என அறிவிக்கப்பட வேண்டும் என போப் கூறியிருந்த நிலையிலேயே அவர், தற்போது அதற்கு எதிராக பேசி உள்ளார்.

இணையம் வழி ஆபாசங்கள்

'மொபைல் போனிலிருந்து நீக்க வேண்டும்!'

"டிஜிட்டல் ஆபாசத்தின் அனுபவம் உங்களுக்கு இருந்ததா அல்லது அதன் தூண்டல் இருந்ததா என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர்கள். இது பல மக்கள், பல சாமானியர்கள், பல சாதாரணப் பெண்கள், மற்றும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் கூட இருக்கும் ஒரு தீமையாகும்.

நான் குழந்தைகளைக் கொண்டு எடுக்கப்படும் குற்றவியல் ஆபாச படத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. வழக்கமான சில ஆபாச படங்களைப் பற்றியும்தான் பேசுகிறேன். சக கத்தோலிக்கர்கள் தங்களது போன்களில் இருந்து ஆபாசப் படங்களை நீக்க வேண்டும். இதன் மூலம் கையிலேயே சலனப்படும் விஷயங்கள் இல்லாமல் இருக்கும். ஆபாச படங்கள் ஆன்மாவை பலவீனப்படுத்துவதோடு பிசாசுக்கு இடமளிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.


3
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி! 

கோயில் நிலத்துக்கு முன்தேதியிட்டு பட்டா...

சொந்த மாவட்டத்திலேயே கோட்டைவிடும் அமைச்சர்!

சென்னை அம்பத்தூர் பகுதியிலிருக்கும் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வருகிறது. அந்த இடத்தை தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரும், அதே பகுதியைச் சேந்த கவுன்சிலர் ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்த இடத்தைத் தங்களுக்கு வேண்டப்பட்டவர் பெயர்களில் முன்தேதியிட்டு பட்டாவும் வாங்கியிருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவரும் உடந்தை.

கழுகார் தரும் மேலும் பல விறுவிறுப்பான அப்டேட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்

`வாட்ஸ் அப், மெசஞ்சர்'க்கு மட்டும் விதிவிலக்கா... அரசிடம் டெலிகாம் நிறுவனங்கள் கேள்வி

ந்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தொலைதொடர்பு மசோதா ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் அவற்றுக்கு டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பொருந்தாது என்ற நிலை இருப்பதால் அவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று டெலிகாம் நிறுவனங்கள் அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளன.

இது குறித்த விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஆரோக்கியம் ஒரு பிளேட்

குழந்தைகளுக்கான உணவில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

ணவு குறித்துத் தொடர்ந்து நிறைய பேசிவருகிறோம். அதுபற்றி இன்னொரு முக்கிய சந்தேகம் பல காலமாக நிலவிவருகிறது. குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

எல்லாப் பெற்றோருக்கும் அதுவும் நியூ ஏஜ் பெற்றோர் அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் இது.

பெரியவர்கள் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவில் அவர்களுக்கு எது நல்லது, எது பிடிக்கும், எது சத்தானது எனப் பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டும். இதுபற்றி நம்மிடம் பல குழப்பங்கள் இருக்கின்றன...

இது குறித்த தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
சீவலப்பேரி பாண்டி

சீவலப்பேரி பாண்டி: கிராமத்து ராபின்ஹூட்டின் கதை; அதிகம் கவனிக்கப்படாத திறமைசாலிகள் நிறைந்த படம்!

80 & 90ஸ் தமிழ் சினிமா 'நாஸ்டால்ஜியா கொண்டாட்ட' தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'சீவலப்பேரி பாண்டி'.

இது கிராமத்து 'ராபின்ஹூட்' பற்றிய படம். அது முற்றிலும் புனைவு. இது பெரும்பாலும் நிஜம். ஆம், திருநெல்வேலி மாவட்டத்தில் 'சீவலப்பேரி' என்னும் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பாண்டி என்கிற ஒரு உண்மையான நபரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழகக் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட ஆரம்பக்கால என்கவுன்ட்டர்களில் ஒன்று 'பாண்டி'யுடையது என்கிறார்கள்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


7
தேவதாசிகள்

தொடரும் `தேவதாசி' முறை; ஆடல், பாடல், பாலியல் தொழில் - இது மகாராஷ்டிரா `முரளி'களின் கதை!

தேவதாசிகள் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கடவுளுக்கு சேவை செய்பவர்கள். இந்த தேவதாசிகள் முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சில பகுதிகளில் தேவதாசி முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மகாராஷ்டிராவின் அகமத் நகர், பாலி, ஜிஜூரி, சாங்கிலி, கோலாப்பூர், கர்நாடகாவின் குல்பர்கா, ஆந்திராவின் சில இடங்களில் தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் இடத்துக்கு தக்கபடி தேவதாசிகள், முரளி, எல்லம்மா என அழைக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் பொதுவாக தேவதாசிகளை முரளி என்றே அழைக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...