Published:Updated:

Evening Post:கோவை பந்த்: முடிவை மாற்றிய BJP- இனி சசி தரூர் நிலை?ஆதார்: கவனிக்க...தீபாவளி ஹிட் படம்..

Vikatan Highlights October 28
Listicle
Vikatan Highlights October 28

கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பந்த் நடத்த அழைப்பு விடுத்த பாஜக, தற்போது அம்முடிவை கைவிட்டது ஏன்?, காங்கிரஸிலிருந்து ஓரங்கட்டப்படுகிறாரா சசி தரூர்?, ஆதார் கார்டு... உடனடியாக இதை கவனியுங்கள், உப்பில்லாத பழக்கம் ஆரோக்கியமா?,தீபாவளி ரிலீஸில் எந்த படத்துக்கு வரவேற்பு..?


1
கோவை கார் வெடிப்பு

கோவை பந்த்: ஒரே நாளில் முடிவை மாற்றிய பாஜக! 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து வருகிற 31 ம் தேதியன்று, கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதுபோன்ற போராட்டம் எதற்கும் அழைப்பு விடுவிக்கவில்லை என அக்கட்சி தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது.

என்.ஐ. ஏ-விடம் சென்ற கோவை கார் வெடிப்பு வழக்கு

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த காரை ஓட்டி வந்த ஐமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்துவந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் சிக்கின. அடுத்து, உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளைக் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளும் சிக்கின.

இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ-வுக்கு (NIA) மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ. ஏ கையிலெடுத்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.

முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த பாஜக

இதனிடையே,

* கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து வருகிற 31 ம் தேதியன்று, கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியானது.

* இதையடுத்து இதில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகளும் இதைக் கண்டித்து இருந்தன.

அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முக்கிய காவல் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

* " கார் வெடிப்பு சம்பவத்தின் மூலம் ஒரு சிலர் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர். அத்தகைய நபர்களுக்கு ஊடகங்கள் இடமளிக்க கூடாது" எனக் கூறியதோடு, பாஜக தலைவர் அண்ணாமலையை, அவரது பெயரைக் குறிப்பிடாமல் மிகக் கடுமையாக சாடி இருந்தார்.

முழு அடைப்பை உறுதிபடுத்திய வானதி சீனிவாசன்

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, " பாஜக மீதும், தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை மீதும் செந்தில் பாலாஜி பல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால்தான், அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது.

இதைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார். முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில்துறையினரை அமைச்சர் மிரட்டியிருப்பதாகவும் தகவல் வருகிறது.

முழு அடைப்புப் போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கெல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது" எனக் கூறியிருந்தார்.

தடை கோரி வழக்கு

இந்த நிலையில், பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி, கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

மறுத்த அண்ணாமலை

அதனைதொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " முழு அடைப்பு போராட்டம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை எனவும், அதை ஆதரிக்கவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருகிற 31-ம் தேதியன்று பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


2
சசி தரூர் - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸிலிருந்து ஓரங்கட்டப்படுகிறாரா சசி தரூர்?!

கில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே, நேற்று தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பிறகு, அவர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 47 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் கார்கே.

அந்தக் குழுவில், கார்கேவை எதிர்த்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க இந்த விஷயத்தைக் கையிலெடுத்து காங்கிரஸை விமர்சித்துவருகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
Elon Musk | எலான் மஸ்க்

ட்விட்டர் உயர் அதிகாரிகள் பணிநீக்கம்; அதிரடியைத் தொடங்கிய எலான் மஸ்க்

லகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ட்வீட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்திருந்தது.

ஆனால், அதன் பிறகு எலான் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கினார். இதனால் ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஆதார் அட்டை

ஆதார் கார்டு வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டனவா? - உடனடியாக இதைக் கவனியுங்கள்!

கிட்டத்தட்ட 650 மாநில திட்டங்களுக்கும், 315 ஒன்றிய திட்டங்களுக்கும் ஆதார், அடையாள அட்டையாகப் பயன்படுகிறது.

இந்த நிலையில், பலர் ஆதார் அட்டைகளில் தங்களது தகவல்களைப் புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர். பத்து வருடங்களுக்கும் மேலாக ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்கள், தங்களது ஆதாரை புதுப்பித்துக்கொள்ளுமாறு UIDAI கூறியுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
டேபிள் சால்ட், கல் உப்பு, இந்துப்பு, பிளாக் சால்ட்

Doctor Vikatan: உப்பில்லாத உணவுப்பழக்கம்... ஆரோக்கியமானதா?

யோடைஸ்டு உப்பு, சாதாரண உப்பு... எது சிறந்தது? உப்பு சேர்க்காத உணவுகள் ஆரோக்கியமானவையா? உணவில் உப்பை அறவே தவிர்ப்பது சரியானதா?

சென்னையைச் சேர்ந்த, இன்டெர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


6
சர்தார் - சினிமா விமர்சனம்

தீபாவளி ரிலீஸில் வரவேற்பைப் பெற்று வரும் படம் எது?

டந்த மாதம் 30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' ஆகிய படங்கள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு கார்த்தியின் 'சர்தார்', சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் வெளியானது.

லைகா தயாரித்த மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் மட்டும் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூலை ஈட்டிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். கன்னடப்படமான 'காந்தாரா' சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, இப்போது பான் இண்டியா படமாக 250 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது என்றும் தகவல்.

இந்நிலையில் தீபாவளி ரிலீஸ்களான 'பிரின்ஸ்', 'சர்தார்' வரவேற்பில் எப்படி இருக்கிறது? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...