Published:Updated:

Evening Post:இனி அரசின் பிடியில் ட்விட்டர், ஃபேஸ்புக்?-பாஜக மோதல் பின்னணி-கிசுகிசு-அலறும் டிஆர்எஸ்

Vikatan Highlights October 29
Listicle
Vikatan Highlights October 29

சமூகவலை தளங்கள் இனி இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்... ஏன்?, அண்ணாமலை Vs சீனியர்கள் மோதல் பின்னணி, கிசுகிசு: பழக் கட்சியில் 'காச் மூச்' சத்தம்,ஆபரேஷன் லோட்டஸால் அலறும் டிஆர்எஸ் கட்சி, கடனுக்காக மகள்கள் ஏலம், பராசக்தி 70...


1
பேஸ்புக்

IT விதிகளில் மாற்றம்: இனி மத்திய அரசின் பிடியில் ட்விட்டர், ஃபேஸ்புக்?

ருபுறம் உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலில், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் புதிய மாற்றம் செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்

இந்த புதிய விதிகளின்படி,

* இனிமேல் ட்விட்டர், ஃபேஸ்புக், யூ டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் இந்திய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டி உருவாக்கப்படும்.

காரணம் என்ன?

இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன என்றும், பொய்ச் செய்திகள், வெறுப்பைத் தூண்டும் பதிவுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொய்யான தகவல்கள், தனிநபர்கள் குறித்து அவதுாறான கருத்துகள், ஆபாசப் பதிவுகள் போன்றவை அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில், இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

பயனாளர்களின் புகார்கள்

அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், குறைதீர்ப்பு அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதை கண்காணிக்க தனி அதிகாரிகளை உள்நாட்டிலேயே நியமிப்பதை கட்டாயமாக்கியது.

ஆனால், இந்த குறைதீர்ப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் தீர்வுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயனாளர்களின் பதிவுகள் முறையான காரணம் இன்றி நீக்கப்படுவதாகவும், கணக்குகள் முடக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.

புதிய விதிகள் சொல்வது என்ன?

இதைத் தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தற்போது புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

* நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக ஊடக செயலிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக, குறைகேட்பு மேல்முறையீடு குழுக்களை மத்திய அரசு அமைக்கும்.

முன்னதாக பயனர்களின் புகார்கள் 3 மாத காலத்திற்குள் தீர்க்கப்பட்டு வந்த நிலையில், இனி பயனர்களின் புகார்கள் 30 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களைக் கைப்பற்றும் முயற்சியா?

இதனிடையே, சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முடக்கும் திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

கபில் சிபல்

இந்த நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பை, ராஜ்ய சபா எம்.பி-யும் முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த கபில் சிபல், " முதலில், அவர்கள் டிவி நெட்வொர்க்குகளைக் கைப்பற்றினர். இப்போது அவர்கள் சமூக ஊடகங்களைக் கைப்பற்றப் போகிறார்கள்" என மத்திய அரசை சாடியுள்ளார்.

* " நாம் ஒரே நடத்தை விதிகள், ஒரே அரசியல் கட்சி, ஒரே ஆட்சி முறை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லாத நிலையை நோக்கி நகர்கிறோம்.

* எப்போதுமே 'அரசுக்குப் பாதுகாப்பானது, மற்றவர்களுக்குப் பாதுகாப்பற்றது' என்பதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.

* சாதாரண குடிமக்களுக்கு எஞ்சியிருந்த ஒரே தளம் சமூக ஊடகங்கள்தான். அதிலும் இனி அவதூறு கருத்துகள் என மக்கள் மீது வழக்கு தொடரப்படும்" என்று கபில் சிபல் மேலும் கூறியுள்ளார்.


2
அண்ணாமலை

கோவை பந்த்: அண்ணாமலை Vs சீனியர்கள்   மோதல் பின்னணி!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பாஜக, திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நடுவே, கோவை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை மறுநாள் (31ம்தேதி) பந்த்க்கு அழைப்பு விடுத்தனர்.

இதுதொடர்பான அறிவிப்பை அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
கிசுகிசு

கிசுகிசு: பழக் கட்சியில் 'காச் மூச்' சத்தம்...

ழக் கட்சியின் இளைஞரணிப் பதவியை பெல் பிரமுகரின் மகனுக்குக் கொடுத்தது கட்சி வட்டாரத்துக்குள் கடுமையான சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. இதில் தனக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தனக்கும் தந்தைக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக, தோட்டத்துத் தலைவரின் மகனே செய்தி பரப்புகிறாராம்.

கட்சிக்குள் எதிரொலிக்கும் 'காச் மூச்' சத்தங்களுக்கும், "போய் அவர்கிட்டயே கேளுங்க…" எனத் தந்தையைக் கைகாட்டுகிறாராம். 'கட்சிப் பணிகளில் இறங்கி வேலை பார்க்காத ஒருவருக்கு இந்த அங்கீகாரம் தேவையா?' எனக் கேட்டுக் கொந்தளிக்கும் நிர்வாகிகள் சிலர், அணி மாறி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தவும் தயாராகிவிட்டார்களாம்.

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
சந்திரசேகர ராவ்

தெலங்கானா: 'ஒரு MLA-வுக்கு ரூ.100 கோடி'... ஆபரேஷன் லோட்டஸால் அலறும் டிஆர்எஸ் கட்சி!

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து, அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது பா.ஜ.க-வின் ஸ்டைல் என்கிற விமர்சனம் பா.ஜ.க மீது இருக்கிறது.

அந்த வகையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுத்து, தன் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க முயன்றதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
ஏலம்விடப்படும் மகள்கள்

பெற்றோர் கடனை அடைக்க ஏலம்விடப்படும் மகள்கள்... ராஜஸ்தானில் கொடூரம் 

நாட்டில் இன்னும் சில இடங்களில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள்.

அவர்களில் சிலரை அவர்களின் பெற்றோரே அனுப்பிவைத்திருக்கின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.

அதிரவைக்கும் இந்த செய்தியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
சிவாஜி

பராசக்தி 70

திரைப்பட வரலாற்றில் வெகுசில படங்களே அவை வெளிவந்து வெற்றிகரமாக ஓடியபோது உருவாக்கிய உணர்வுகள், அனுபவங்கள் வழியாகத் தொடர்ந்து நினைவில் நிற்பவை. தமிழில் அந்த வகையான சிறப்புப் பெற்ற படங்களில் முதன்மையானது ‘பராசக்தி.’

1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று வெளியானது ‘பராசக்தி.’ நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளுடன் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இணைந்து தயாரித்த படம் அது. திராவிடர் கழகச் செயற்பாட்டாளர் பாவலர் பாலசுந்தரத்தால் எழுதப்பட்டு நாடகமாக நிகழ்ந்து வந்ததைத் திரைப்படமாக்கினர்.

திரைப்படத்திற்குத் திரைக்கதை – வசனம் எழுதும் பொறுப்பு கலைஞர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு தனது 22-வது வயதில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ராஜகுமாரி’ (1947-ல் வெளிவந்தது) திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமான இளைஞர் அவர்.

வெளிச்சத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் எனும் நடிகரை ‘கதாநாயகனாக’ மாற்றிய பெருமையும் அவரையே சேரும்.

எனவே ‘பராசக்தி’ வெளியானபோது அவரது வசனம் பற்றிய பேரார்வம் திரைப்படப் பார்வையாளர்களுக்கு இருந்தது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...