Published:Updated:

Evening Post:'சொந்த நாட்டு மீனவரையே சுடலாமா?'-AIIMS: கைவிரிப்பு-மின்சாரம்: வாடகைதாரர் கவனத்துக்கு...

Vikatan Highlights October 21
Listicle
Vikatan Highlights October 21

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் என இந்திய கடற்படை அளித்துள்ள விளக்கம், அதற்கு எதிரான கண்டனங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?


1
தமிழக மீனவர் படகுகள்

"சொந்த நாட்டு மீனவரையே இந்திய கடற்படை சுடலாமா?!"

நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று முதலில் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது சுட்டது இந்திய கடற்படைதான் எனத் தெரியவந்துள்ளதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்

எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக்கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களை அடித்து உதைத்து படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று சிறையிலடைப்பதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுபவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதுவதும், நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது. மேலும் படகுகளையும் இலங்கையிடம் பறிகொடுக்கும் நிலை தொடர்கிறது. இதைத் தடுத்து நிறுத்த

* இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்பு காட்ட வேண்டும் எனத் தமிழக அரசும், அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தி வருகிறபோதிலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றபாடில்லை.

* கடந்த 20 ஆம் தேதியன்றுகூட புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக்கூறி அருள், ஐயப்பன், சுந்தரம் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்திய கடற்படை

இந்திய கடற்படையும் தாக்குதல்

இத்தகைய சூழ்நிலைகளுக்கு இடையேதான், காரைக்கால் மாவட்டம், அக்கரைப்பேட்டையிலிருந்து விசைப்படகில் தமிழகம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக, கடந்த 15-ம் தேதி புறப்பட்டு சென்றனர்.

கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு படகில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவர்கள்மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்த வீரவேல் (30) என்ற மீனவரின் இடது கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது.

இதனையடுத்து இந்திய கடற்படையினர்தான், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் பரவின. அதை இந்திய கடற்படை அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது தாங்கள்தான் என இந்தியக் கடற்படை ஒப்புக்கொண்டு, சுட்டது ஏன் என்பது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சுட்டது ஏன் என விளக்கம்

அதில், " இந்தியா- இலங்கையை பிரிக்கும் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லை கோட்டிற்கு அருகில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று காணப்பட்டது.

* பலமுறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை. வழக்கமான நடைமுறைகளின்படி எச்சரிக்கை மீறி சென்றதால் துப்பாக்கியால் சுடப்பட்டது.

* காயமடைந்த நபருக்கு கப்பல் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

* சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமான்

"சொந்த நாட்டு மீனவர்களையே சுடலாமா?"

இந்த நிலையில், சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தலாமா எனக் கேட்டு மிக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

* " இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது ஒரே ஒரு முறை கூடத் தடுத்துக் காப்பாற்ற வக்கற்ற உலகின் நான்காவது மிக வலிமையான ராணுவமான இந்தியக் கடற்படை, சொந்த நாட்டு மீனவர்களை மட்டும் குறி தவறாமல் சுடுவதென்பது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுப்புகிறது.

* உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரே கடற்படை இந்தியக் கடற்படையாகத்தான் இருக்க முடியும்.

* தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் நடவடிக்கை எடுப்பதோடு, சுடப்பட்ட வீரகுமார் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

அதேபோன்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், " சம்பந்தப்பட்ட படகு நிற்காததால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது" எனக் கூறியுள்ளார்.

இதனிடையே காயமடைந்த மீனவரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


2
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், எடப்பாடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதில் உள்ளநோக்கம் இருப்பதாக கூறுகிறார் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் ச.பாலமுருகன்.

மேலும், எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றம் சாட்டி இருப்பதால், அவர் மீதும் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கும் வழக்கறிஞர் ச.பாலமுருகன் அளித்த விரிவான பதிலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


3
மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்: கைவிரித்த அமைச்சகம்!

மீபகாலமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்பது காமெடியாகி வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பூர்வாங்கப்பணிகள் முடிந்து விட்டதாக கடந்த மாதம் மதுரை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உண்மையில் எப்போதுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
மின் கட்டணம்

ஆதார் இணைப்பு: வாடகைதாருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

கடந்த வாரம், இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் பெற ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தமிழக அரசின் மற்றொரு ஆணையில், ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் கிடைக்க...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


5
லிஸ் ட்ரஸ் ( ட்விட்டர் )

பதவி விலகிய பிரதமர் லிஸ் ட்ரஸ்... பரபரக்கும் பிரிட்டன் அரசியலில் அடுத்தது என்ன?

டந்த 2019-ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். மூன்று ஆண்டுக்காலம் ஆட்சியை வழிநடத்திய போரிஸ் ஜான்சன் பொருளாதாரத்தை சரியாகக் கையாளவில்லை என அவருக்கு எதிராக அமைச்சர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

அதன்பிறகு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பதவியேற்ற 45 நாள்களில் அவரும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
கங்கனா ரணாவத், பினோதினி தாஸி,

ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத்!

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சமீப காலமாகவே பயோபிக் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட `தலைவி' படத்தில் நடித்திருந்தார். பின் ஜான்சிராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `மணிகர்ணிகா' படத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி `எமர்ஜென்சி' எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...