ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் பொக்கிஷம் : மனிதன் கமல்... நடிகன் கமல்...

லா.ச.ரா.
பிரீமியம் ஸ்டோரி
News
லா.ச.ரா.

அமிர்தத்தைச் சுவைத்துப் பார்த்ததுண்டா நீங்கள்? லா.ச.ராவின் சிந்தா நதி, தாக்ஷாயணி, த்வனி, பாற்கடல், அபிதா, காயத்ரி என அவர் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள்; புரியும்!

28.08.1983 ஆனந்த விகடன் இதழில், நடிகர் கமல்ஹாசனின் பேட்டி வெளியானது. இந்தப் பேட்டியை எடுத்தவர் எழுத்தாளர் சிவசங்கரி. நீண்ட அந்தப் பேட்டியிலிருந்து சிறு பகுதி...

``வெகு சீக்கிரமே நீங்கள் அரசியலில் நுழையப்போகிறீர்கள். அதன் அஸ்திவாரம் தான் விரிவான ரசிகர் மன்ற நடவடிக்கைகள் என்கிறார்களே, இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் கமல்?’’

கமல்
கமல்

உதட்டைப் பிதுக்குகிறார். கைகளை விரித்து, தோளைக் குலுக்கி, நான் என்ன சொல்வேன் என்கிற பாவனையுடன் ஏறிடுகிறார்.

``லயன்ஸ் கிளப் போல முழுக்க முழுக்க சமூக சேவை பிரக்ஞை கொண்ட ஒரு அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவுதான் என் ரசிகர் மன்றம். எண்பதாம் ஆண்டு வரை ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்புணர்வு வந்த பிறகு ஏன் ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக்கூடாது என்று தோன்றியது. தயவுசெய்து என் ரசிகர் மன்ற அலுவலகத்துக்குப் போய் நாகராஜனை சந்தித்துப் பாருங்கள்.

முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் இந்த எண் பஸ், இந்த இடத்திற்குச் செல்லும் என்ற விவரம் அடங்கின பலகை மாட்டி, எங்களுக்குத் தெரிந்தவிதத்தில் சமூக சேவையை ஆரம்பித்ததைப் பற்றிக் கூறுவார்...’’

``அப்படியென்றால் நீங்கள் பணம் கொடுப்பதாகவும், அரசியலில் புக இதன்மூலம் படிக்கட்டுகள் கட்டுவதாகவும் கூறுவதில் நிஜம் இல்லையா?’’

``சத்தியமாக இல்லை. இன்று வரை என் ரசிகர் மன்றத்துக்காக நான் பைசா செலவழித்தது இல்லை. போன் பில்கூட அவர்களேதான் பார்த்துக் கொள்கிறார்கள்.

14.11.2007 ஆனந்த விகடன் இதழில்

தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் லா.ச.ரா. நனவோடை உத்தியைத் தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் அவர்தான். 90 வயதைக் கடந்து, தான் பிறந்த அதே நாளில், அக்டோபர் 30-ம் தேதி நம்மைப் பிரிந்து சென்றுவிட்டார் லா.ச.ரா.

லா.ச.ரா.
லா.ச.ரா.

அவர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார், அவரின் அபிமானியான நடிகர் சிவகுமார்.

‘‘நீ ஒரு காகிதத்தில், உன் எழுத்துத் திறமையின் முழுச் சக்திப் பிரயோகத்தோடு ‘நெருப்பு’ என்று எழுதினால், அந்தக் காகிதத்தில் பொசுங்கின வாடை வர வேண்டும் என்பார் லா.ச.ரா.

ஆங்கிலப் புலமை மிக்கவர். அவர் தமது 18-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதிய கதை ‘பாபுஜி.’ அதை வெளியிட்ட ஆங்கில இதழின் பெயர் ‘Short Story.’

25-12-2001-ல் லா.ச.ராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

‘உங்கள் ‘இது ராஜபாட்டை அல்ல’ தொகுதி படிக்க நேர்ந்தது. ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரி கேட்கையில் அவர்கள் செங்கல் செங்கல்லாகக் கட்டடத்தை எழுப்புகையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்துவிடும். அந்த மாதிரி பிரமிப்புதான் உங்களது தொகுதி படிக்கையில் எனக்கு ஏற்பட்டது’ என்று எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய எழுத்தாளர்! ஓடிச் சென்று, அவரை அவரது வீட்டில் சந்தித்துப் பாதம் தொட்டு வணங்கினேன்.

அமிர்தத்தைச் சுவைத்துப் பார்த்ததுண்டா நீங்கள்? லா.ச.ராவின் சிந்தா நதி, தாக்ஷாயணி, த்வனி, பாற்கடல், அபிதா, காயத்ரி என அவர் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள்; புரியும்!

‘தாக்ஷாயணி’யில் அவள் அவனிடம் சொல்கிறாள்... ‘எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!’ அது லா.ச.ராவுக்கும் பொருந்தும்.’’

- தளவாய்

12.11.2000 ஆனந்த விகடன் இதழில்

ஜெயம் வேண்டாம், வெற்றிதான் வேண்டும்!

விகடன் பொக்கிஷம் :  மனிதன் கமல்... நடிகன் கமல்...

“எனக்குப் பார்த்த பெண்ணின் பெயர் ஜெயலட்சுமி. அவரைத் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பினாலும் ஜெயலட்சுமி என்ற பெயர் வேண்டாம் என்றேன். பெண் தன் பெயரைத் தமிழ்ப்பெயராக மாற்றிக்கொண்டால் அவளைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னேன். பெண்ணும் ஒப்புக்கொள்ள, ஜெயலட்சுமியை வெற்றிச்செல்வியாக்கி திருமணம் செய்துகொண்டேன்.''

- அமைச்சர் தா.கிருஷ்ணன் மகன் திருமண விழாவில், அமைச்சர் அன்பழகன்.

- திருமா