Published:Updated:

முதலிடம் பெற்றது விகடன் இணையதளம்... வாசகர்கள், விளம்பரதாரர்களுக்கு நன்றி!

விகடன் இணையதளம் முதலிடம்
News
விகடன் இணையதளம் முதலிடம்

இணையதளப் பரப்பில் தமிழ் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்தித்தளங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விகடன்.

Published:Updated:

முதலிடம் பெற்றது விகடன் இணையதளம்... வாசகர்கள், விளம்பரதாரர்களுக்கு நன்றி!

இணையதளப் பரப்பில் தமிழ் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்தித்தளங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விகடன்.

விகடன் இணையதளம் முதலிடம்
News
விகடன் இணையதளம் முதலிடம்

காம்ஸ்கோர் அமைப்பு இணையதளங்களை ஆய்வு செய்து, எந்த இணையதளம் வாசகர்களால் அதிகம் படிக்கப்படுகிறது, எந்த இணையதளத்தில் வாசகர்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற தகவல்களை மாதந்தோறும் வெளியிடுகிறது.

இதன்படி 2021 ஜனவரி மாதம், அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்பட்ட தளமாக விகடன் திகழ்கிறது. அதில் மட்டும் முதலிடம் அல்ல, தமிழ் வாசகர்கள் அதிக நேரம் செலவிட்ட தளமாகவும் விகடனே முதலிடம் பிடித்துள்ளது.

62 லட்சம் வாசகர்கள், 53 மில்லியன் மணித்துளிகள்

காம்ஸ்கோர் அளித்துள்ள தகவல்களின் படி, ஜனவரி மாதம் மட்டும் 62 லட்சம் வாசகர்கள் விகடன் தளத்தைப் பார்வையிட்டுள்ளனர். இவர்கள் 5.3 கோடி மணித்துளிகள் விகடன் தளத்தில் செலவிட்டுள்ளனர்.

இதைப் போலவே இன்னொரு சாதனையாக, வீடியோக்கள் பிரிவில் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் விகடன் இடம் பிடித்திருக்கிறது. டிசம்பர் மாதம், இந்திய அளவில் வாசகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களுக்கான செய்தித் தளங்கள் பட்டியலில் விகடன் 10வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவிலான பட்டியலில் ஒரு மாநில மொழி செய்தித்தளம் இடம்பிடித்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை தரும் விஷயம்.

வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் செயலியாக (App) விகடன் செயலி இருப்பதற்கு நீங்கள் அளித்திருக்கும் ரேட்டிங்கே சான்று. ஆம், 4.7/5 ரேட்டிங்குடன் தமிழ் செய்தி செயலிகளுக்கான பட்டியலிலும் விகடன் செயலி முதல் இடத்தில் இருக்கிறது.

உங்களால் சாத்தியமானது!

ஆம், இது வாசகர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியமானது.

இது தொடர்பாக விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “நீங்கள் விகடன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கான சான்று இது. இந்த நம்பிக்கையை என்றும் காப்போம். வாசகர்களுடனான இந்தப் பந்தம் இன்னும் வலுபெறச் செய்ய தொடர்ந்து உழைப்போம். உங்களுக்குத் தேவையான, உங்களுக்குப் பயன்படும், உங்களை வியக்க வைக்கும் செய்திகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி புதிய புதிய வடிவில் கொண்டு வர இருக்கிறோம்” என்றார்.

விகடன் குழுமத்தின் தலைமை வணிக திட்டங்களுக்கான தலைவர் மஜீத் கான், “இந்த நேரத்தில் எங்கள் வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வாசகர்களை, அவர்களின் தேவைகளை இன்னும் புரிந்து கொண்டு 360 டிகிரியில் முழுமையான செய்திகளை வழங்குவதே எங்கள் நோக்கம். அந்த திசையிலேயே நாங்கள் பயணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.