Published:Updated:

விருதுநகர்: மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.9 லட்சம் பண மோசடி - பாஜக மாவட்டச் செயலாளர்‌ கைது

மாவட்ட காவல் அலுவலகம்
News
மாவட்ட காவல் அலுவலகம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பா.ஜ.க மேற்கு மாவட்டச் செயலாளர் கலையரசன் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

விருதுநகர்: மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.9 லட்சம் பண மோசடி - பாஜக மாவட்டச் செயலாளர்‌ கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பா.ஜ.க மேற்கு மாவட்டச் செயலாளர் கலையரசன் கைதுசெய்யப்பட்டார்.

மாவட்ட காவல் அலுவலகம்
News
மாவட்ட காவல் அலுவலகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியைச் சேர்ந்தவர் பாண்டியன்.‌ இவர், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க-வில் நிர்வாகியாக இருக்கிறார். இவர், தன்னுடைய மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித்தர வேண்டும் என விருதுநகர் பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவராக இருக்கும் வி.கே.சுரேஷ், செயலாளராகப் பணியாற்றிவரும் கலையரசனிடம் பேசியிருக்கிறார். பாண்டியனின் பேச்சின் மூலம் அவரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்ட இருவரும், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பேசி, மத்திய அரசின் ரயில்வேதுறை அல்லது துறைமுகத்தில் உங்களின் மகனுக்கு வேலை வாங்கித் தருகிறோம், ஆனால் அதற்குப் பணம் செலவாகும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

தலைமறைவாக இருக்கும் மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ்
தலைமறைவாக இருக்கும் மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ்

தொடர்ந்து மகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி கடந்த 2017-ம் ஆண்டில் பாண்டியனிடமிருந்து 11 லட்சம் ரூபாயை வி.கே.சுரேஷும் கலையரசனும் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொடுத்த வாக்குறுதியின்படி அரசு வேலை வாங்கித்தராமல் அவர்கள் இருவரும் இழுத்தடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பாண்டியன், தனது மகனுக்கு அரசு வேலைகூட வாங்கித்தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தையாவது என்னிடம் திருப்பிக்கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதேபோல் பலமுறை கெஞ்சி கேட்ட பிறகு, அரசு வேலைக்காக அவர் கொடுத்த பணத்திலிருந்து 2 லட்ச ரூபாயை மட்டும் இருவரும் சேர்ந்து பாண்டியனுக்கு திருப்பிக்கொடுத்திருக்கின்றனர். ஆனால், மீதிப் பணம் ரூ.9 லட்சத்தைத் திருப்பிக்கொடுக்காமல் தொடர்ந்து பாண்டியனை ஏமாற்றிவந்திருக்கிறார்கள்.

கைதான கலையரசன்
கைதான கலையரசன்

இந்த நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ், செயலாளராக இருக்கும் கலையரசன் ஆகியோர் தன்னிடம் 9 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர்‌ ராதிகா தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க செயலாளராக இருக்கும் கலையரசனை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசா கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷைத் தேடிவருகின்றனர்.