Published:Updated:

`படுக்கையறைகள் முதல் வாஷிங் மெஷின் வரை!' - ட்விட்டர் அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க்

அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க்
News
அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க் ( ட்விட்டர் )

ட்விட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலுள்ள சில அலுவலக அறைகளை, படுக்கையறைகளாக எலான் மஸ்க் மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:

`படுக்கையறைகள் முதல் வாஷிங் மெஷின் வரை!' - ட்விட்டர் அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலுள்ள சில அலுவலக அறைகளை, படுக்கையறைகளாக எலான் மஸ்க் மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க்
News
அலுவலக செட்டப்பை மாற்றிய எலான் மஸ்க் ( ட்விட்டர் )

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இமெயில் மூலம் தன் நிறுவன ஊழியர்களிடம், ``நீண்ட நேரம் வேலை செய்யவும், தேவைப்படும் நேரங்களில் அலுவலகத்தில் தங்கவும் நேரும்" என அண்மையில் அறிவுறுத்தியிருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் ஊழியர்கள் சிலர் தாமாகவே முன்வந்து வேலையிலிருந்து விலகினர். ஆனாலும் எலான் மஸ்க் தன்னுடைய நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலுள்ள சில அலுவலக அறைகளை படுக்கையறைகளாக எலான் மஸ்க் மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த அறைகள், அலுவலக ஊழியர்கள் தங்குவதற்கு எனக் கூறப்படுகிறது. ஒரு மாடிக்கு நான்கு முதல் எட்டு படுக்கையறைகள் வரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த அறைகள் தொடர்பான புகைப்படங்களில், ஃபுட்டான் படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், திரைச்சீலைகள் மற்றும் மாபெரும் கான்ஃபரென்ஸிங் ஹால், துணிகளைத் துவைக்கும் வாஷிங் மெஷின் எனச் சகல வசதிகளுடன் அறைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில், அறையில் ஆரஞ்சு நிற தரைவிரிப்பு, ஒரு மரப் படுக்கை, ஒரு மேஜை விளக்கு மற்றும் இரண்டு அலுவலக நாற்காலிகள் இருக்கின்றன.

இந்தப் புகைப்படங்கள் வெளியானதிலிருந்து எலான் மஸ்க்குக்கும் புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது. அதாவது சான் பிரான்சிஸ்கோ கட்டடம் வணிகரீதியாக மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருப்பதால், அந்த நிறுவனத்தின் மீது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது கட்டட ஆய்வுத்துறை. இதற்கு பதிலளிக்கும்விதமாக ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், ``சோர்வான ஊழியர்களுக்கு படுக்கைகளை வழங்கியதற்காக எனது நிறுவனம் நியாயமற்ற முறையில் தாக்கப்படுகிறது" என சான்பிரான்சிஸ்கோ மேயர் லண்டன் ஃப்ரீடை விமர்சித்திருக்கிறார்.