Published:Updated:

``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல!" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

கடந்த காலத்தில் நாங்கள் பதவியில் இருந்தோமா... இல்லையே? ஆனால், அதிக காலம் தி.மு.க-தான் மத்திய ஆட்சியில் பங்குபெற்றது. பதவியும் அதிகாரமும் அவர்களிடம்தான் இருந்தது

Published:Updated:

``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல!" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive

கடந்த காலத்தில் நாங்கள் பதவியில் இருந்தோமா... இல்லையே? ஆனால், அதிக காலம் தி.மு.க-தான் மத்திய ஆட்சியில் பங்குபெற்றது. பதவியும் அதிகாரமும் அவர்களிடம்தான் இருந்தது

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைந்து மூன்றாவது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாமலே மூன்று ஆண்டு காலத்தை ஆளுங்கட்சியாக நகர்த்தியிருக்கிறது அ.தி.மு.க. 'பெரிய ஆளுமை இல்லை, ஆட்சி அனுபவமும் இல்லை' என்றெல்லாம் ஒருபக்கம் விமர்சனங்கள் றெக்கைக் கட்டினாலும், எல்லாவற்றையும் அனாயசமாக எதிர்கொண்டபடி தமிழக முதல்வராக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனந்த விகடனுக்காக அவரைப் பிரத்யேகமாக பேட்டி எடுக்க நேரம் கேட்டோம். முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரும்படி அழைப்புவந்தது. 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் ச.அறிவழகன், 'செய்தி ஆசிரியர்' ஆர்.பாலகிருஷ்ணன் இருவரும் முதல்வரைச் சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டியிலிருந்து... விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2r8MnWG

கடந்த முறை வந்தபோது, வீட்டின் பின்புறத்தில் இருக்கும் காய்கறித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று காட்டினீர்களே... இப்போது எப்படி இருக்கிறது தோட்டம்?

''எங்கே... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதையெல்லாம் பராமரிக்க முடியவில்லை. இங்கே நான் தனியாகத்தான் இருக்கிறேன்.அவ்வப்போது, குடும்பத்தினர் வந்துசெல்கிறார்கள். அதனால் பராமரிப்பதும் சிரமமாக இருந்தது. நிலத்தடிநீர் உப்பாக இருக்கிறது. அதை ஊற்றினால், செடிகள் பட்டுப்போய்விடும். அதனால் தோட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்'' என்று வருத்தத்துடன் முதல்வர் சொன்னபோது, அவர் முகத்தில் கவலை ரேகைகள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார் எடப்பாடி. அவற்றின் முட்டைகளை பத்திரப்படுத்தி, சொந்த ஊருக்குச் எடுத்துச் சென்று, மகன் வயிற்றுப் பேரனுக்குத் தருகிறாராம். ஊரில் நாட்டுக்கோழி முட்டை கிடைத்தாலும், தனக்காகவே தாத்தா கொண்டுவருவதை ரசித்துச் சாப்பிடுவாராம் பேரன். இதை அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிச் சொல்லிப் பூரிக்கும் எடப்பாடி, எங்களிடமும் சொன்னார், பாசமுள்ள தாத்தாவாக!

இடையில் உதவியாளர் போனை நீட்ட, வாங்கிப் பேசிவிட்டு நம் பக்கம் திரும்பினார். அப்போதும் சரி, இப்போதும் சரி செல்போனை கையில் வைத்துக்கொள்வதில்லை! 63 வயதில் சந்தித்தது... இப்போது 65 வயதில். அப்போது 89 கிலோவாக இருந்த உடல் எடையை 80 கிலோவாகக் குறைத்தி ருக்கிறார், இந்த 5 அடி 10 அங்குல உயர மனிதர். ''சர்க்கரை, பிளட் பிரஷர் என எதுவும் இல்லை'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

வீட்டுக்குப் பின்னால் பெரிதாக எட்டு வரைந்துவைத்து அதில் நடந்து கொண்டிருந்தீர்களே... இப்போதும் தொடர்கிறது தானே?

''இல்லை. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், எட்டு போடுவதிலிருந்து புரமோஷன் கொடுத்துவிட்டார். அவருடைய வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அதற்குப் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் அளவுக்கு காலியிடம் இருக்கிறது. புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தை சுத்தம்செய்து, மண்ணைக் கொட்டி நடைப்பயிற்சிக்கான பாதையாக மாற்றி வைத்துள்ளார். இருவரும் அங்கேதான் வாக்கிங் செல்கிறோம்.''

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `அடிமை அரசு' என்றே விமர்சிக்கிறார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், பி.ஜே.பி-தான் உங்கள் அரசைப் பின்னணியில் இயக்குவதாகவும் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறாரே?

``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல!" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive

''நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல! ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார். அரசியலில் எங்களைவிட்டால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ முயன்று பார்த்தார். எங்கெங்கோ தூண்டிவிட்டுப்பார்த்தார். அதையெல்லாம் சமாளித்தோம். எங்கள் அரசு மீது வேறு குற்றம்சாட்டுகளை வைக்க முடியவில்லை. அதனால் இப்படிப் பேசுகிறார். எங்களைப் பொறுத்தவரையில், தமிழகத்துக்கு நன்மை கிடைக்கிறபோது ஆதரிப்போம். மாநிலத்துக்குப் பிரச்னை என்கிறபோது எதிர்க்கிறோம். இதுதான் எம்.ஜி.ஆர் காலத்திலும், அம்மா காலத்திலும் பின்பற்றப்பட்ட கொள்கை. முத்தலாக் பிரச்னை, காவிரிப் பிரச்னை வந்தபோது நாங்கள் எப்படிக் கையாண்டோம் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால், தி.மு.க. அப்படி அணுகியதா?

பதவி அதிகாரம்தான் அவர்கள் குறிக்கோள். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கும் அதிகாரத்துக்கும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நாங்கள் பதவியில் இருந்தோமா... இல்லையே? ஆனால், அதிக காலம் தி.மு.க-தான் மத்திய ஆட்சியில் பங்குபெற்றது. பதவியும் அதிகாரமும் அவர்களிடம்தான் இருந்தது. அதைவைத்து முல்லை பெரியாறு, காவிரிப் பிரச்னைகளைத் தீர்த்தார்களா... பாலாறு பிரச்னையைத் தீர்த்தார்களா? எந்தப் பெரிய திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டுவர முயலவே இல்லை.

சுயநலம்தான் அவர்களுக்கு முக்கியம். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது ஐந்து ஆண்டுகாலமும் அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. அப்போதெல்லாம் அது மதவாதக் கட்சி என்று தெரியாதா? முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஓராண்டுக்காலம் முழுக்க மந்திரி பதவியைக் கொடுத்துதானே வைத்திருந்தது பி.ஜே.பி. ஆக, மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் தி.மு.க. நாங்கள் அப்படி அல்ல. மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்குதான் முழு அக்கறையைச் செலுத்துகிறோம்.''

> நீங்கள் சொல்லும் அரசியல் இருக்கட்டும். மக்கள் திட்டங்களில் உதாரணத்துக்கு, நீட் தேர்வு போன்ற சில திட்டங்களில் பி.ஜே.பி-யின் ஊதுகுழலாக அவர்கள் சொல்வதைத்தானே ஃபாலோ செய்கிறீர்கள்?

> நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முடியாதா என்று உங்கள் அரசைப் பார்த்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் கேட்டிருக்கிறதே?

> கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி. ஆனால், தற்போது சட்டமன்றத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. எப்படிச் சாத்தியமானது?

> ``ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு அதிக சுமை கொடுப்பதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறதே... உங்கள் கருத்து என்ன?

- இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பதில்களுடனான சிறப்பு நேர்காணலை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "நான் முதலமைச்சரே இல்லை!" - எடப்பாடி பழனிசாமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-chief-minister-edappadi-k-palaniswami

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo