Published:Updated:

அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..? #DoubtOfCommonMan

அரசு பேருந்து
News
அரசு பேருந்து

அரசுப் பேருந்துகளில் வைக்கப்படும் விளம்பரங்களுக்குக் கட்டணம் உண்டா, அதற்கான நிபந்தனைகள் என்னென்ன?

Published:Updated:

அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..? #DoubtOfCommonMan

அரசுப் பேருந்துகளில் வைக்கப்படும் விளம்பரங்களுக்குக் கட்டணம் உண்டா, அதற்கான நிபந்தனைகள் என்னென்ன?

அரசு பேருந்து
News
அரசு பேருந்து

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பிரதான வருமானங்களில் விளம்பரம் மூலம் வரும் வருவாயும் அடங்கும். பேருந்துகளின் இரு பக்கக் கண்ணாடிகள், பின்புறம், உள்ளேயென பயணிகளின் வசதிகளைப் பாதிக்காதவாறு விளம்பரங்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறது. ``இப்படி வைக்கப்படும் விளம்பரங்களுக்குக் கட்டணம் உண்டா, அதற்கான நிபந்தனைகள் என்னென்ன" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் இளவேந்தன் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

இந்தக் கேள்வியை அரசுப் போக்குவரத்துக்கழக வணிகம் மற்றும் கூட்டாண்மைப் பிரிவு துணை மேலாளர் சீ.நெடுஞ்செழியன் முன் வைத்தோம்.

``அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்வது வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கென நிறைய நடைமுறைகளும் உண்டு. பேருந்துகளில் விளம்பரம் செய்ய, போக்குவரத்துக் கழகத்தின்மூலம் அந்தந்த சரகங்களில் முறைப்படி டெண்டர் விடப்படும். அதில் யார் அதிகத் தொகைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கு பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதியளிக்கப்படும். டெண்டரில், எத்தனை மாதங்கள், எத்தனை பேருந்துகளில் விளம்பரம் செய்யலாம் என்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டெண்டர் தொகை இருக்கும். டெண்டர் எடுத்தவர்கள் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். அதோடு, மாதாமாதம் வாடகையையும் செலுத்த வேண்டும். டெண்டர் தொகை மற்றும் வாடகை தொகை அனைத்தும் போக்குவரத்துக் கழகத்துக்கே போகும். பேருந்துகளில் என்ன விளம்பரம் பிரசுரிக்கப் போகிறோம் என்பதை, ஒப்பந்ததாரர்கள் போக்குவரத்துத்துறையிடம் சமர்ப்பித்து அனுமதிபெற வேண்டும். அதன்பிறகே விளம்பரம் வைக்க அனுமதிக்கப்படுவார்கள். பேருந்தின் பின்புறம், ஜன்னல் மேலுள்ள கண்ணாடிகள், ஓட்டுநர் இருக்கையின் பின்புறம், கைப்பிடிகள் என்று பேருந்துக்கு சேதம் ஏற்படாதவாறு ஒப்பந்ததாரர்கள் விளம்பரங்களை வைக்கலாம்..." என்கிறார் அவர்.

அரசு பேருந்து
அரசு பேருந்து
பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கான காலம், மாத வாடகை, வைப்புத்தொகை அனைத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டங்களைப் பொறுத்து மாறுபடும்!

உதாரணத்துக்கு, சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனம் கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள 2,000 அரசுப் பேருந்துகளில் 3 வருடங்களுக்கு விளம்பரம்செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் முன்பணமாகவும். ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் வாடகையாகவும் செலுத்துகின்றது. இந்தத்தொகை மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை டெண்டருக்கு டெண்டர் மாறுபடும்.