Published:Updated:

உங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்..! என்னென்ன நடைமுறைகள்?#DoubtOfCommonMan

ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்
News
ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்

தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு அந்தப் பகுதி மக்கள் விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

உங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்..! என்னென்ன நடைமுறைகள்?#DoubtOfCommonMan

தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு அந்தப் பகுதி மக்கள் விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்
News
ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சுந்தரேசன் என்ற வாசகர், `நீர்நிலைகளை, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தூர்வார ஏதேனும் அனுமதி வாங்க வேண்டுமா... அதற்கான நடைமுறைகள் என்னென்ன?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
doubt of a common man
doubt of a common man

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்தித்திருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகப் தூர்வாரிப் பராமரிக்காமல் இருந்ததும், பல நீர்நிலைகள்மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளும்தான். பருவநிலை மாற்றங்களால் பல நேரங்களிலும் மழை பெய்வதில்லை.

மாடம்பாக்கம் ஏரி
மாடம்பாக்கம் ஏரி

அபூர்வமாக மழை பெய்யும் தருணங்களிலும். மழைநீர் முறையாகச் சேமிக்கப்படாமல், வீணாகக் கழிவுநீர்களுடனும் கடல்நீருடனும்தான் கலந்துகொண்டிருக்கிறது. பெய்யும் மழைநீரைச் சேமிப்பதும். அதோடு, நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரிப் பராமரிப்பதுமே இதற்கு ஒற்றைத் தீர்வு.

`#DoubtOfCommonMan’ பகுதிக்கு விகடன் வாசகர் அனுப்பிய கேள்விக்குப் பதில்...

Doubt of a common man
Doubt of a common man

யாரெல்லாம் நீர்நிலைகளைச் சரிசெய்ய முடியும்..?

`மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே, நீர்நிலைகளைச் சரிசெய்ய இயலும் என்ற கட்டாய விதிகள் முன்னர் நடைமுறையிலிருந்தன. இந்த வருடம் ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை திட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், `தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வாரத் தாமாக முன்வந்தால் அனுமதி வழங்க அரசு தயாராக உள்ளது; அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று, அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்கள்
நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்கள்

யாரிடம் அனுமதி வாங்குவது..?

தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்களைத் தூர்வாருதல் போன்ற பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 2017 - 18-ம் ஆண்டு 1,511 ஏரிகளில் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் சுமார் 1,311 ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் 2018 - 19-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 1,829 பணிகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உலக வங்கி நிதியுதவியுடன், 22 மாவட்டங்களில் 1,325 ஏரிகள் மற்றும் 107 அணைக்கட்டுகளைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Doubt of a common man
Doubt of a common man

மீதமுள்ள ஏரிகளையும் தூர்வார, அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதோடு, `தனியார் நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வார முன்வந்தால், அனுமதி வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

போரூர் ஏரி
போரூர் ஏரி

இதன்படி, அந்தந்தப் பகுதி மக்கள் தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும்.

அல்லது தாங்களாகவே நீர்நிலைகளைச் சரிசெய்யத் தயாராக இருந்தால். தூர்வாரப்போகும் நீர்நிலை பற்றிய விவரங்களோடு. அந்தப் பகுதி பொதுப்பணித்துறை அல்லது கிராம அதிகாரியிடம் மனு அளித்தால், அவர் அந்த நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்டு சில நிபந்தனைகளோடு ஒப்புதல் அளிப்பார்.

அதேபோல் வண்டல்மண் தேவைப்படுபவர்கள், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னர், அரசு நிர்ணயித்த அளவான நஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 25 டிராக்டர்களும், புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 30 டிராக்டர் என்ற அளவிலும் மண் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். மண்பாண்டம் செய்பவர்களாக இருந்தால் 10 முதல் 20 டிராக்டர் அளவுக்கு மண் அள்ளிக்கொள்ளலாம்.

Doubt of Common Man
Doubt of Common Man

நடைமுறையில் என்ன நடக்கிறது..?

கடந்த இரண்டு வருடங்களாக, கோவையைச் சுற்றியிருக்கும் பல்வேறு நீர்நிலைகளைச் சீரமைத்துவரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரிடம் இது குறித்துப் பேசினோம். ``தூர்வார வேண்டிய அல்லது சீரமைக்க வேண்டிய நீர்நிலைகளைத் தேர்வுசெய்த பின்னர், அந்த நீர்நிலைகளின் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வழித்தடம், நீர்நிலைகளின் விவரங்களைச் சேகரித்து, அந்த நீர்நிலை உள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்போம். அவர்கள் மனு விவரங்களைப் பார்த்துவிட்டு, விண்ணப்பம் ஒன்றைக் கொடுப்பார்கள்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்த பின்னர், விவரங்களைச் சரிபார்த்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும்... கரையை எவ்வளவு பலப்படுத்த வேண்டும்... நீர் வழித்தடம் மற்றும் கரைகள் எதையும் சேதப்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளோடு அனுமதியளிப்பார்கள். நீர் வரும் அல்லது செல்லும் நீர்வழித் தடங்களைக் கண்டறிய உதவியும் செய்வார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், பல ஆலோசனைகளும் கிடைத்துள்ளன. எவ்வித இடையூறும் இதுவரை எங்களுக்கு வந்ததில்லை’’ என்று சொன்னார்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!