Published:Updated:

500 அட்டைதாரர்கள் கொண்ட ரேஷன் கடைக்கு வாட்ஸ்அப் குரூப் - மாற்றுத்திறனாளி ஊழியரின் அசத்தல் ஐடியா!

சரவணன்
News
சரவணன்

ரேஷன் கடை ஊழியர்கள் என்றாலே எரிந்துவிழுவார்கள், முறையாக பதில் சொல்ல மாட்டார்கள், பொருளைக் குறித்த நேரத்தில் வழங்காமல் மக்களை அலைக்கழிப்பார்கள் போன்றவற்றை உடைத்து, மக்கள் பணியை எளிமைப்படுத்தியுள்ளார் சரவணன்.

Published:Updated:

500 அட்டைதாரர்கள் கொண்ட ரேஷன் கடைக்கு வாட்ஸ்அப் குரூப் - மாற்றுத்திறனாளி ஊழியரின் அசத்தல் ஐடியா!

ரேஷன் கடை ஊழியர்கள் என்றாலே எரிந்துவிழுவார்கள், முறையாக பதில் சொல்ல மாட்டார்கள், பொருளைக் குறித்த நேரத்தில் வழங்காமல் மக்களை அலைக்கழிப்பார்கள் போன்றவற்றை உடைத்து, மக்கள் பணியை எளிமைப்படுத்தியுள்ளார் சரவணன்.

சரவணன்
News
சரவணன்

குருவப்பநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிவரும் நியாய விலைக் கடையில் சரவணன் என்ற மாற்றுத்திறன் கொண்ட நபர் பணிபுரிந்துவருகிறார். அந்த ரேஷன் கடையின் கீழ் உள்ள 500 அட்டைதாரர்களையும் வாட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் இணைத்து, கடையில் உள்ள பொருள்களின் இருப்பு, எந்த நாளில் எந்தெந்த அட்டைதாரர்கள் பொருள் வாங்க வர வேண்டும், கடையின் விடுமுறை நாள் மற்றும் வேலை நாள் போன்றவை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து ரேஷன் பொருள்கள் வாங்கும் செயலை மக்களுக்கு எளிமைப்படுத்தியுள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்கள் என்றாலே எரிந்துவிழுவார்கள், முறையாக பதில் சொல்ல மாட்டார்கள், பொருளைக் குறித்த நேரத்தில் வழங்காமல் மக்களை அலைக்கழிப்பார்கள் போன்றவற்றை உடைத்து, மக்கள் பணியை எளிமைப்படுத்தியிருக்கும் இவரது செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சரவணன்
சரவணன்

இளம் வயதில் வறுமையில் வாடிய சரவணன் தன் நண்பர்களின் உதவியுடன் சென்னை SIVET கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்துள்ளார். பின் 2013-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் பல்லடம் பகுதியில் ரேஷன் கடை ஊழியராகப் பணியில் அமர்ந்தார். அதன் பின் மாடப்பட்டி பகுதியில் பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது அங்கு சில சமூக ஆர்வலர்கள் 'கிராம வளர்ச்சிக் குழு' என்ற வாட்ஸ்அப் குழுவின் மூலமாக மக்களுக்குப் பல உதவிகளைச் செய்து வருவதை அறிந்துகொண்டார். பின் 2014-ம் ஆண்டு குருவப்ப நாயக்கனூர் பகுதிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட போது, அப்பகுதியின் வார்டு உறுப்பினரான சிவக்குமார் என்பவருடன் இணைந்து மாடப்பட்டியில் இருப்பதுபோல ரேஷன் கடைக்கெனத் தனி ஒரு வாட்ஸ்அப் குழு அமைக்கலாம் எனத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளார்.

மொத்தமாக ஆறு வார்டுகள் அந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளன. அதை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பொருள் வழங்கி வருகின்றனர். அதாவது கிழக்குப் பகுதி, ஆதிதிராவிடர் காலனி, உச்சி மாகாளியம்மன் கோவில் வீதி ஆகிய மூன்று பகுதிகளையும் சுழற்சி முறையில் அமைத்துப் பொருள் வழங்கி வருகின்றனர். ரேஷன் பொருள் வழங்குவதற்கு முந்தைய நாள் எந்தெந்த அட்டைதாரர்கள் பொருள் வாங்க வர வேண்டும், என்னென்ன பொருள்கள் இருப்பில் உள்ளன, நிலுவையில் உள்ள பொருள்களை எப்போது வந்து வாங்கிக்கொள்ளலாம், கடையின் விடுமுறை நாள், வேலை நாள், மற்றும் கடை எத்தனை மணிக்குத் திறக்கப்படும் என அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "இது சின்ன கிராமம். அதனால 75% பேர மட்டும்தான் எங்களால வாட்ஸ்அப் குரூப்ல சேர்க்க முடிஞ்சது. மீதிப் பேருகிட்ட போன் இருக்காது. இருந்தாலும் வாட்ஸ்அப் இருக்காது. ஆனாலும் அவங்களுக்கும் எப்படியும் தகவல் போய்ச் சேந்துரும். ரேஷன் கடைக்கான தகவலையும் தாண்டி, தெளிவான முகவரி இல்லாத லெட்டர் எதுனா வந்தா போஸ்ட்மேன் நேரா எங்கிட்ட குடுத்துருவாரு. அது பத்துன தகவலை குரூப்ல போட்டதும் ஒரு மணி நேரத்துக்குள்ள உரியவங்க வந்து லெட்டர வாங்கிட்டுப் போய்டுவாங்க. இது போக பஞ்சாயத்து போர்டுல சொத்துவரி, தண்ணிவரி இதெல்லாம் கட்ட வேண்டிய தேதியையும், வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களையும் குரூப்ல போடுவேன்" என்றார்.

சரவணன்
சரவணன்

2016-ம் ஆண்டு அரசு உதவியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டி ஒன்றைப் பெற்றார். அதனால் அதுவரை அவர் பயன்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டரை செல்லம்பட்டியைச் சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பலருக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை வாங்குவதற்கும் உதவிகள் செய்துள்ளார். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு தன்னால் இயன்ற அளவு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "சின்ன வயசுல காசில்லாம, தங்குறதுக்கு வீடில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இப்போ மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிய பண்றப்போ சந்தோஷமா இருக்கு. அதனால, அந்த சந்தோஷத்துலயே அப்படியே வாழ்ந்துரணும். அவ்ளோதான்!" என்கிறார்.

- ரஞ்சித்