Published:Updated:

`ஷவர்மாவை தடை செய்ய நினைக்கும் நீங்கள் ஏன் மதுபானத்தை தடை செய்ய மறுக்கிறீர்கள்?’

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
News
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வரும் உணவு வகைகளை கூர்ந்து கவனித்தால் அதிலும் அரசியல் நெடி அடிக்கிறது என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.

`ஷவர்மாவை தடை செய்ய நினைக்கும் நீங்கள் ஏன் மதுபானத்தை தடை செய்ய மறுக்கிறீர்கள்?’

தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வரும் உணவு வகைகளை கூர்ந்து கவனித்தால் அதிலும் அரசியல் நெடி அடிக்கிறது என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.

Published:Updated:
தமிழக அரசு - தலைமைச் செயலகம்
News
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

தமிழக உணவகங்கள் முதல் டீக்கடைகள் வரை வட இந்தியர்கள்தான் வேலைபார்க்கின்றனர். இட்லி முதல் தோசை வரை அவர்கள்தான் தயாரிக்கின்றனர். இவ்வளவு ஏன்...? தஞ்சாவூர் ,செட்டிநாடு, கொங்குநாடு, மதுரை உணவுகள் மட்டுமன்றி, பரோட்டா, பீட்சா, பர்கர் என அனைத்தையும் வட இந்தியர்கள்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த உணவுகளின் பாரம்பர்யம், தரம், சுவை ஏதாவது தெரியுமா? உணவகங்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, சாப்பிடுபவர்களும் வயிறு நிறைந்தால் போதுமென எதையோ சாப்பிட்டுவிட்டுச் செல்கின்றனர்.

துறைசார்ந்த அதிகாரிகள் இதுபற்றி கேள்வி எழுப்பியதும் இல்லை. நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. உணவுகளின் விலையும் இடத்திற்கு தகுந்தாற்போல் இருக்கிறது. ஆனால், விற்கப்படும் உணவுகளுக்கு அளவும் தரமும்கூட நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாநகராட்சி என்ன செய்கிறது, சுகாதார செயலாளர் என்ன செய்கிறார்? உணவகங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் தரச் சான்றிதழ் வழங்கி உணவகத்தின் தரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தலாமே?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஷவர்மா சரியில்லை என்றால் பரிமாறும் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை விடுத்து அந்த உணவையே தடை செய்கிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்று தடைசெய்யப்பட்டு வரும் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் அதிலும் அரசியல் நெடி அடிக்கிறது என்கின்றனர் உணவக உரிமையாளர்கள். இது என்ன வகை அரசியல் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.

நாளை தயிர் சாதமோ, சாம்பார் சாதமோ, தக்காளி சாதமோ சரியாக இருப்பதாக அமைச்சர் சான்றிதழ் கொடுக்க முடியுமா? பல உணவகங்களில் மார்க்கெட்டில் விற்காமல் தேங்கிக்கிடக்கும் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிச் சமைக்கும் கொடுமையும் நடக்கிறது. இது சுகாதார அமைச்சருக்குத் தெரியாமலா இருக்கும்? இப்படிச் சமைக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு யாருக்கேனும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்தால், அந்த உணவு வகைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்படுமா... அது சாத்தியம்தானா?

ஷவர்மா
ஷவர்மா

சுகாதாரத்துறை அமைச்சர் இதையும் சிந்தித்தால் நல்லது. ஏனெனில் புகார் வருகிறது என்றால், Process Streamlining செய்து guideline follow செய்ய வலியுறுத்துவது, continuous monitoring செய்வது, பின்பு process improvement செய்வதுதான் ஓர் அரசின் சிறப்பான செயல்பாடு. அதை விடுத்து இப்படி ஒவ்வோர் உணவாகத் தடை செய்துவந்தால், நாளை மக்கள் உண்பதற்கு ஒன்றுமே இருக்காதே.

இது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், செயலருக்கும் தெரியுமா? இல்லை இனி மக்களின் உணவை அரசுதான் தீர்மானிக்குமா? இது ஒருபக்கம் இருக்கட்டும்... ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை விநியோகம் செய்யும் ரேஷன் கடை பொருள்களில் பூச்சிகள், புழுக்கள் உள்ளன என்று பல வருடங்களாக புகார் வருகிறதே அதெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டதா? தரமற்ற பொருள்களை விநியோகிப்பதற்காக ரேஷன் கடைகளைத் தடை செய்யமுடியுமா... அது தர்மமாகுமா?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுவிலக்கு கொண்டு வந்து மதுக் கடைகளை மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினீர்களே, அந்த நல்ல காரியத்தைச் செய்து மக்கள் வயிற்றில் பீருக்கு பதில் பால் வார்க்கலாமே? மதுவால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து போகின்றன.

இந்த அக்கறையில் கொஞ்சம் அங்கே காட்டுங்களேன்... மக்கள் பார்க்கட்டும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்கள் எத்தனையோ தடை செய்யப்படாமல் விற்பனையில் உள்ளன. கலப்படமும் உள்ளது. எண்ணெயில் மரச் செக்கு எண்ணெய் என்ற ஏமாற்றும் போக்கு இருக்கிறது அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ஏதோ உணவு அரசியல் செய்கிறது அரசு என மக்களை யோசிக்க வைத்துவிடாதீர்கள்.

-மணி ஷ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism