Published:Updated:

முதுமலை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் சடலமாக மீட்பு! - தொடரும் மீட்புப்பணி

மீட்பு குழுவினர்
News
மீட்பு குழுவினர்

நேற்று மாலை மசினகுடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Published:Updated:

முதுமலை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் சடலமாக மீட்பு! - தொடரும் மீட்புப்பணி

நேற்று மாலை மசினகுடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மீட்பு குழுவினர்
News
மீட்பு குழுவினர்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் அமைந்திருக்கிறது ஆனிக்கல் மாரியம்மன் கோயில். சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதில் நீலகிரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். நேற்று மாலை மசினகுடி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதை அறிந்திராத பெண் பக்தர்கள் சிலர் கோயில் அருகில் உள்ள ஆற்றை தரப்பாலம் வழியாக கடக்க முயன்றனர். முதலில் சென்ற 4 பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மீட்புpபணிகள்
மீட்புpபணிகள்

உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அந்தக் கரையில் தவித்த நூற்றுக்கணக்கான பக்தர்களை இன்று காலை வரை போராடி பத்திரமாக மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் நேற்று இரவே ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதலில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை மீண்டும் தேடுதல் பணியைத் தொடங்கினர். மாயமான 4 பெண்களில் 3 பேரை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. மேலும் ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் குறித்து தெரிவித்த மாவட்ட நிர்வாகம், "ஆனிக்கல் கோயில் அருகில் உள்ள கெதறள்ளா ஆற்றைக் கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்களில் ஜக்கலோரை கிராமத்தைச் சேர்ந்த விமலா, சரோஜா, வாசுகி ஆகிய மூன்று பேரின் உடல்கள் இன்று காலை 9:30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டன.

மீட்புக்குழுவினர்
மீட்புக்குழுவினர்

அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த 3 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுசிலாவின் உடலை தேடும் பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகள் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.