Published:Updated:

தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!

ஜி ஜின்பிங்
News
ஜி ஜின்பிங்

``சீனாவின் தேசிய பாதுகாப்பு உறுதியற்ற தன்மையை சந்தித்துவருவதால், போரை எதிர்த்து போராடி வெற்றிபெறுவதற்கான திறனை மேம்படுத்த வேண்டும்." அதிபர் ஜி ஜின்பிங்

Published:Updated:

தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!

``சீனாவின் தேசிய பாதுகாப்பு உறுதியற்ற தன்மையை சந்தித்துவருவதால், போரை எதிர்த்து போராடி வெற்றிபெறுவதற்கான திறனை மேம்படுத்த வேண்டும்." அதிபர் ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்
News
ஜி ஜின்பிங்

தைவானுக்கு எதிராக தற்போது சீனா ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், `போருக்குத் தயாராகுங்கள்’ என ராணுவத்தினருக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார்.

சீனாவில் ஒற்றை ஆட்சி முறை அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்றுக் கட்சிகளும் இல்லை, தேர்தலும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கு ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தே சீன அதிபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறும். அதன் அடிப்படையில், கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த மாநாட்டில் பொலிட்பீரோ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்வுசெய்யப்பட்டார்.

சீன ராணுவம்
சீன ராணுவம்

தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராகப் பொறுப்பேற்ற ஜி ஜின்பிங், மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். கட்சியின் தலைவர், சீனாவின் அதிபர், ராணுவத் தலைவர் ஆகிய மூன்று சக்திவாய்ந்த பதவிகளை வகித்துவருகிறார். அவர் தலைநகர் பீஜிங்கிலுள்ள கூட்டு ராணுவத் தலைமையகம் அமைந்திருக்கும் மத்திய ராணுவ ஆணையகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.

அப்போது சீன ராணுவத்தினரிடம் , "உலகம் கடந்த நூற்றாண்டில் காணாத அளவு ஆழமான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு உறுதியற்ற, நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. மேலும் ராணுவப் பணிகளும் கடினமானதாகவே உள்ளன. ஆனாலும், முழு ராணுவமும் போருக்குத் தயாராகுங்கள்... போராடி வெற்றிபெறுங்கள்... அதற்கான திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். அதற்காக ராணுவத்தின் முழு ஆற்றலையும் செலவிடுங்கள்.

சீனா
சீனா

தேசிய இறையாண்மை, வளர்ச்சி நலன்களை உறுதியுடன் நமது ராணுவம் பாதுகாக்க வேண்டும். அரசால் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். 2027-ம் ஆண்டுக்குள் PLA (People's Liberation Army)வை உலகத் தரம் வாய்ந்த ஆயுதப் படையாக மாற்றுவதிலும், PLA -வின் நூற்றாண்டு கால இலக்கை நிறைவேற்றுவதிலும் ராணுவத் தலைமை கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என அவர் பேசியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.