Published:Updated:

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்... இருவருக்கும் தந்தை வேறு- மருத்துவ உலகில் விந்தை!

சித்தரிப்பு பட
News
சித்தரிப்பு பட

இதில் அதிசயம் என்னவென்றால், அவரின் இரட்டைக் குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பதுதான். அதாவது, ஒரே கருவில் இரு வேறு ஆண்களின் உயிரணுக்கள் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 9வது மாதத்தில் பிரசவம் நிகழ்ந்துள்ளது.

Published:Updated:

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்... இருவருக்கும் தந்தை வேறு- மருத்துவ உலகில் விந்தை!

இதில் அதிசயம் என்னவென்றால், அவரின் இரட்டைக் குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பதுதான். அதாவது, ஒரே கருவில் இரு வேறு ஆண்களின் உயிரணுக்கள் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 9வது மாதத்தில் பிரசவம் நிகழ்ந்துள்ளது.

சித்தரிப்பு பட
News
சித்தரிப்பு பட

பிரேசிலில் இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்துள்ளனர்; இதில் அதிசயம் என்னவென்றால், இரு குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பதுதான். அரிதான இந்த அதிசய நிகழ்வு, மருத்துவ உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மருத்துவ உலகில் பல்வேறு விந்தைகள், அறிவியல் அற்புதங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரேசிலில் நடந்துள்ள சம்பவம், மருத்துவ உலகினரை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

விந்தணு மாதிரி
விந்தணு மாதிரி

பிரேசிலின் தென்மேற்கில் உள்ள குயாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

இதில் அதிசயம் என்னவென்றால், அவரின் இரட்டைக் குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பதுதான். அதாவது, ஒரே கருவில் இரு வேறு ஆண்களின் உயிரணுக்கள் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 9வது மாதத்தில் பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர் பூரித்துப் போயுள்ளார்.

அதே நேரம், குழந்தைகளின் தந்தை குறித்து அறிய விரும்பிய அவர், இதுதொடர்பாக மரபணு சோதனை நடத்தியுள்ளார். இதில், மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இருவரின் மரபணுவும் வெவ்வேறாக இருந்தது. ஒரு குழந்தையின் மரபணு மட்டுமே தந்தையுடன் பொருந்தியுள்ளது.

இது பற்றி அறிந்ததும் அப்பெண் திகைப்பில் ஆழ்ந்தார். மருத்துவர்கள் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ஒரே நாளில் இருவேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டதை, அப்பெண் நினைவுகூர்ந்தார். இதையடுத்து, அவர் குறிப்பிட்ட மற்றோர் ஆணிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது மரபணு, இன்னொரு குழந்தையுடன் ஒத்துப் போயிருந்தது. இந்த நிகழ்வை, மருத்துவ உலகில் Heteroparental Superfecundation என்கின்றனர்.

மரபணுச் சோதனை!
மரபணுச் சோதனை!

மிகமிக அரிதாக, 10 லட்சத்தில் ஒருவருக்கு இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மகப்பேறு மருத்துவ நிபுணர் துலியோ ஜார்ஜ் ஃப்ரான்கோ கூறுகையில், பெண்ணின் இரு கருக்கள், இருவேறு ஆண்களின் விந்தணுக்கள் மூலம் கருத்தரிக்கும் போது, மிகவும் அரிதாக இப்படி நடக்கிறது. இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அரிதுதான் என்றாலும் சாத்தியமற்றது என்று கூற முடியாது. உலகில் இதுவரை 20 சம்பவங்களே இப்படி நடந்துள்ளதாகக் கூறுகிறார்.

தற்போது அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு 16 மாதங்கள் ஆகின்றன. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகளை ஒரே தந்தையே, பாகுபாடு இல்லாமல் அன்புடன் பராமரித்து வருவதாக பிரேசில் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.