Published:Updated:

காளை முட்டியதில் பறிபோன கண்பார்வை; படுகாயமடைந்த மாடுபிடி வீரர் மரணம்! - கரூர் ஜல்லிக்கட்டில் சோகம்

கரூர் - மாடுபிடி வீரர் பலி
News
கரூர் - மாடுபிடி வீரர் பலி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டி படுகாயமடைந்த மாடுபிடி வீரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே அமைந்திருக்கிறது ராசாண்டர் திருமலை எனும் ஆர்.டி.மலை. இந்தக் கிராமத்தில், வருடாவருடம் பொங்கல் திருநாளையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் பொங்கலையொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காவல்காரன்பட்டி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 21) என்ற மாடுபிடி வீரர் கலந்துகொண்டார். அப்போது, அவரை காளை மாடு முட்டியதில், அவருக்கு வலது கண்பார்வை பறிபோய், படுகாயமடைந்தார்.

சிவக்குமார்
சிவக்குமார்

படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு, திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம், கரூர் காவல்காரன்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.