மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

டாக்டர்.கு.கணேசன்

பேரிக்காய் அளவில் இருக்கின்ற கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்பு உறுப்பு இணைகின்ற இடத்தில் கர்ப்பப்பை வாய் (செர்விக்ஸ்) உள்ளது. 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus (HPV) ) என்கிற கிருமி இந்த இடத்தைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது. இந்த வைரஸ் கிருமி பாலுறவு மூலமே பரவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பவருக்கு, புற்றுநோய் வராது. எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்த வைரஸ் கிருமி கர்ப்பப்பை வாயை ஆக்கிரமித்து, அங்குள்ள செல்களைத் தாக்கிப் புற்றுநோயை உருவாக்குகிறது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

அறிகுறிகள்:

அடிவயிறு கனமாக இருப்பது, மாதவிலக்கின்போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு,  கட்டிகட்டியாக ரத்தப்போக்கு போன்றவை அறிகுறிகள். சிலருக்கு அசாதாரணமான வயிற்றுவலி அடிக்கடி வரும். பாலுறவின்போது அதிக வலி ஏற்படுவதும், ரத்தக்கசிவு உண்டாவதும், இரண்டு மாதவிலக்கின்  இடையில் திடீரென ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோயின்  அறிகுறிகள்தான்.  துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றியுள்ளதைத் தெரிவிக்கும் அறிகுறி. மாதவிலக்கு நின்ற பிறகு, திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ,  பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.

என்னென்ன பரிசோதனைகள்?

திருமணமான எல்லாப் பெண்களும் 'பாப் ஸ்மியர்’(Pap smear) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் இதைச் செய்துகொள்வது நல்லது. மாதவிலக்கு முடிந்து ஏழு முதல் 14 நாட்களுக்குள் செய்துகொள்ளலாம். செலவு குறைந்த, வலி இல்லாத பரிசோதனை இது. மேலும் விஐஏ (VIA) விஐஎல்ஐ (VILI)  என்று  பல பரிசோதனைகள் மூலம்  புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

தடுக்க முடியுமா?

இந்த புற்றுநோய் வராமல் தடுக்க, குவாட்ரிவேலன்ட்' மற்றும்

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

பைவேலன்ட்' என இருவகை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. வைரஸின் புரதப்பொருளை மட்டும் பிரித்தெடுத்து, அதை ஆன்டிஜெனாகப் பயன்படுத்தி டி.என்.ஏ மறுசேர்க்கை செய்து இதைத்  தயாரிக்கிறார்கள்.

போடப்படும்முறை

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 10 வயது முடிந்த சிறுமிகள் முதல் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

குவாட்ரிவேலன்ட்' போடுவதாக இருந்தால், முதல் ஊசிக்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாவது தவணையையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையையும் போட வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

பைவேலன்ட்' போடுவதாக இருந்தால் முதல் ஊசிக்குப் பிறகு ஒருமாதம் கழித்து இரண்டாவது தவணையையும் ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையையும் போட்டுக்கொள்ள வேண்டும்.பத்து வயதில் இதைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், 45 வயது வரை எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், 100 சதவிகிதம் பாதுகாப்பு என்று சொல்ல முடியாது.

கூடுதல் நன்மைகள்:

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், பிறப்பு உறுப்பின் வெளிப்பகுதி, ஆசனவாய் போன்றவற்றில் ஹெச்.பி.வி கிருமியால் ஏற்படும் புற்றுநோய்கள் வராது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

யார் போடக்கூடாது?

கர்ப்பிணிகள் போட்டுக்கொள்ளக்கூடாது. தாய்ப்பால்  கொடுத்துக் கொண்டிருக்கும்போதுகூட முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, வழக்கம்போல அடுத்த தவணைகளைப் போட்டுக்கொள்ளலாம். அலர்ஜி உள்ளவர்கள் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது.

இப்போது ஆண்களும் போட்டுக்கொள்ளலாம்!

ஹெச்.பி.வி. தடுப்பூசியை இப்போது ஆண்களும் போட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் மரு தோன்றுவது தடுக்கப்படுகிறது. வாய், தொண்டை, ஆசனவாய் போன்ற இடங்களில் ஹெச்.பி.வி. கிருமிகளால் ஏற்படும் புற்றுநோய் வராது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாருக்கு ஆபத்து அதிகம்?

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  இளம் வயதில் (15 வயது முதல் அல்லது அதற்குக் கீழே) பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  பல பெண்களிடம் பாலுறவு வைத்திருக்கும் கணவர்களால், மனைவிகளுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  கொனோரியா, எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் உள்ள பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  15லிருந்து 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு.

தடுப்பூசி ரகசியங்கள்! - 15

  புகைபிடிக்கும் பெண்களுக்கு.

போர் ஓயாது

படம்: வீ.சக்தி அருணகிரி