ஸ்பெஷல்
Published:Updated:

சத்தான சுருள்பாசி!

சாரங்கம் பாபு, கடற்பாசியியல் துறை ஆராய்ச்சியாளர்உணவு

சத்தான சுருள்பாசி!

திர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது  ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி. மிகக் குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி.

ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, 1,000 கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

சத்தான சுருள்பாசி!

யார் சாப்பிடலாம்?

மூன்று வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 4 - 6  கிராமும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 - 2 கிராமும் எடுத்துக்கொள்ளலாம். 

சத்தான சுருள்பாசி!

எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?

பவுடர் மற்றும் கேப்ஸ்யூல் வடிவத்தில் கிடைக்கிறது. எலுமிச்சை, கரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழச்சாறுகளுடன் கலந்து அருந்துவதே நல்லது. வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம். சாக்லேட், பிஸ்கட், கேக் போன்றவற்றுடன் ஃபிளேவராக இணைத்துக்கொள்ளலாம்.

பயன்கள்:  இதில் உள்ள பீட்டாகரோட்டின், தோல் சுருக்கத்தைத் தடுத்து, பொலிவாக வைக்கிறது. நிறைவுறாத கொழுப்பு அமிலமான, காமா லைனோலெனிக் அமிலம் (Gamma linolenic acid) உடல் பருமனைக் குறைக்கக்கூடியது. ரத்தக் குழாய் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது. சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூடேஸ் (Superoxide dismutase- (SOD) என்ற என்சைம் செல்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. பி12 கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மக்னீசியம், கால்சியம், பொட்டாஷியம் போன்ற இதர சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் அதிகம் உள்ள குளோரோபில், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகைக்கு மருந்தாக இருக்கிறது. இதை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

- க.பிரபாகரன்