ஸ்பெஷல்
Published:Updated:

ஆதலால் காதல் செய்வீர்!

கெளஷாலி மணிகண்டன், மூளை நரம்பியல் மருத்துவர்குடும்பம்

ஆதலால் காதல் செய்வீர்!

காதல் எப்படித் தோன்றுகிறது...

‌ஒரு நொடியில் தோன்றிவிடுகிறது காதல். ஏன், எதற்கு? என்கிற எந்தக் கேள்விக்கும் பதில் தெரிவது இல்லை. காதலிக்கும் நேரங்களில் பார்க்கும் எல்லாமும் அழகாய்த் தெரிகிறது. வீட்டை, வேலையை, எதிர்ப்படுபவர்களை என அனைத்தையும் நேசிக்கத் தோன்றுகிறது. காதலில் பிரிவு ஏற்படும்போது, உலகமே வெறுத்துப்போகிறது. நமக்குள் எப்படி இத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றன? காதலிக்கும்போது நமக்குள் என்னதான் நடக்கிறது?

ஏன் மகிழ்ச்சிகரமாக உணர்கிறோம்?

நாம் கோபப்படுவதற்கு, சிரிப்பதற்கு, அழுவதற்கு என எல்லா உணர்வு வெளிப்பாட்டுக்கும் காரணமாக விளங்குவது நம் உடலில் உள்ள ஹார்மோன்கள். அந்த வகையில் நம்மை மகிழ்ச்சியாக இருக்கவைப்பது நம் உடலில் இருக்கும் டோபோமைன் (Dopomine) என்னும் ஹார்மோன். இந்த ஹார்மோன் செயல்பட, ஆக்ஸிடோஸின் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிடோஸின், மூளையின் ஹைப்போதாலமஸில் சுரக்கிறது. காதலில் இருக்கும்போது இந்த ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், பெண்கள் தங்களது துணைவருடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர்
களின் உடலில் ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹார்மோனால், ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டம் நிகழ்ந்து ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் குறைகிறது என்கிறது இந்த ஆய்வு.

ஆதலால் காதல் செய்வீர்!

இந்த ஹார்மோன் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. நம்பிக்கை அதிகரித்து, துணிச்சலான முடிவு எடுக்கும் தைரியம் தருகிறது.

ஒரு பெண் ஒரு பையைனைப் பார்த்து சிரித்துவிட்டால், அவனுக்குள் டெஸ்டொஸ்டிரான் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது. தன்னை ஒரு சாகசக்காரனாக அந்தப் பெண் முன் நிரூபிக்க வேண்டும் எனும் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. காதலிக்கும்போது பெண்ணுக்கு ஈஸ்ட்ரொஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அது குறைக்கிறது.

கட்டிப்பிடி வைத்தியம்

‘வசூல் ராஜா’ படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் என்ற ஒன்றைச் சொல்வார் கமல். அது உண்மையிலேயே பலன் தரக்கூடியது. தம்பதியரில் யாரோ ஒருவ
ருக்குப் பய உணர்வோ, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளோ வரும்போது, கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் அதைச் சரிப்படுத்தலாம். வெளிநாடுகளில் “ஹக் டே” என்றே ஒரு தினத்தைக் கொண்டாடுவார்கள். ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொள்வதால் உற்பத்தியாகும் ஆக்ஸிடாஸின், மன அழுத்தம், கோபம் ஏற்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டாமல் பார்த்துக்கொள்ளும். கட்டிப்பிடி வைத்தியத்தால் பல மனப் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க முடியும். காதலிக்கும்போது கட்டிப்பிடி வைத்தியம் அதிகம் நடக்கும் என்பதால், ஆக்ஸிடாஸின் ஏகத்துக்கும் சுரந்து, காதலர்கள் சொர்க்கத்தில் மிதக்கிறார்கள்.

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே!

- குரு அஸ்வின்