ஸ்பெஷல்
Published:Updated:

நம்மால் முடியும்!

வெங்டேஷ், புற்றுநோய் மருத்துவர்உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஹெல்த்

நம்மால் முடியும்!

ண்டுதோறும் 1.6 கோடி உயிர்களை புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட தொற்றாநோய்கள் பறிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  இதில் மிக மோசமான, தவிர்க்கக்கூடிய உயிரிழப்பை ஏற்படுத்துவது புற்றுநோய்.  ‘நம்மால் முடியாதது இல்லை’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினம் நடத்தப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைத் தேர்வு,    புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது, அனைவருக்கும் சிகிச்சைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதன் மூலம் புற்றுநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்

நம்முடைய உடலில் உள்ள சில திசுக்கள், வழக்கத்துக்கு மாறாக வளர்ச்சி அடைந்து, கட்டுப்பாடு இன்றி பல்கிப் பெருகுவதுடன், மற்ற நல்ல திசுக்களைத் தாக்குவதையே புற்றுநோய் என்கிறோம். செல்களில் உள்ள டி.என்.ஏ குறியீட்டில் ஏற்படும் மாற்றமே புற்றுநோயைத் தொடங்கிவைக்கிறது. இந்த டி.என்.ஏ குறியீடுகள்தான் திசு எப்படி வளர வேண்டும், எப்படிப் பெருக வேண்டும், எவ்வளவு வேகத்தில் இந்த செயல்பாடு நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்த டி.என்.ஏ குறியீட்டில் ஏற்படும் மாற்றமே புற்றுநோய் செல்கள் உருவாகக் காரணம்.

அறிகுறிகள்

உடல் எடை திடீரென குறைதல், சோர்வு, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்னை, நீடித்த இருமல், உணவு விழுங்குதலில் பிரச்னை, செரிமானத்தில் பிரச்னை போன்றவை பொதுவான அறிகுறிகள்.

மரபியல்ரீதியாக புற்றுநோய் தங்களின் வாரிசுகளுக்குக் கடத்தப்படுவது உண்மைதான். ஆனால், அதை முறையான வாழ்வியல் பழக்கத்தினால் 5-10 சதவிகிதம் தடுக்க முடியும். உங்களுடைய பயம் புற்றுநோயைப் பற்றியதாக இருக்க வேண்டாம். காலதாமதத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

நம்மால் முடியும்!

புற்றுநோயைத் தவிர்க்க

•  புகையிலை, மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

•  உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பி.எம்.ஐ 20 முதல் 23-க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

•  புறஊதாக் கதிர்வீச்சை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

•  ரசாயனம், பூச்சி மருந்துகள் இல்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரம்பநிலையில் கண்டறிய...

வந்த பின் சரி செய்வதைவிட, வரும் முன் தடுக்கும் வழிகள் புற்றுநோயின் வாய்ப்பைக் குறைத்துவிடும்.

•  மார்பகப் புற்றுநோயை தடுக்க 35 வயதிற்கு மேல் பெண்கள் மேமோகிராம் பரிசோதனை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

•  கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய, பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

•  வருடத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

•  புற்றுநோயைக் கண்டறியும் ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள்

•  பச்சை, மஞ்சள், சிவப்பு நிறக் காய்களும் பழங்களும் அதிகமாகச் சாப்பிடலாம். புரோகோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், பூசணிக்காய், கீரைகள் ஆகியவை, கட்டுப்பாடின்றி வளரும் செல்களைத் தடுக்கும்.

•  ஆப்பிள், வால்நட், கிரீன் டீ, திராட்சை, செர்ரி, பெர்ரி வகைப் பழங்கள், கிழங்கு வகைகள், வைட்டமின் சி அடங்கிய உணவுகள், வெங்காயம், பூண்டு புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்தவை.

- ப்ரீத்தி