பரவசம் தந்த பிரண்டைத் திருவிழா!
கோடை லீவு என்றாலே ஜாலிதான்.ஆனா, ‘வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு வீடியோ கேம்ஸ் விளையாடுறதுல என்ன பயன்? அதில் கிடைக்கும் த்ரில்லைவிட பல மடங்கு விறுவிறுப்புக்கும் உற்சாகத்துக்கும் நாங்க கியாரண்டி. வாங்க இங்கே’ என அழைத்தனர், ‘செம்மை நலம்’ குழுவினர். சென்னை ஜெம் சயின்ஸ் பார்க் மெட்ரிக் பள்ளியில் ‘பிரண்டைத் திருவிழா’ எனும் குதூகலமான விளையாட்டுக் கொண்டாட்டத்தை நடத்தினார்கள்.




கபடி, கிட்டிப் புல், கோலி, உறி அடித்தல், நாயும் எலும்புத் துண்டும்... என வித்தியாசமான விளையாட்டுகளில் புகுந்து, புரட்டி எடுத்தார்கள். மரப்பாச்சிப் பொம்மைகள், அழகான தொப்பிகள், பறவைக் கூடுகள், கிலுகிலுப்பைகள், புத்தகங்கள், இயற்கை உணவு, நாடகம், நடனம், பாடல்... என உற்சாகப்படுத்தினர்.
ஆரோக்கியமான உணவு, கூடி மகிழ்தல் என அட்டகாசமாக அமைந்தது பிரண்டைத் திருவிழா.
வி.எஸ்.சரவணன்
எம்.உசேன், ரா.சதானந்த்