இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

பதநீர்... சில துளிகள்!

பதநீர்... சில துளிகள்!

• கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க, சிறந்த இயற்கை பானம், பதநீர் இதன் சுவை அபாரமானது.

• சித்த மருத்துவத்தில் பதநீர் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது.

பதநீர்... சில துளிகள்!

• 50 கிராம் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்து, 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி, காலை மற்றும் மாலையில் அருந்தினால், ரத்தக் கடுப்பு தணியும்.

• வயிற்றுப் புண், தொண்டைப் புண், மலச் சிக்கல் போன்றவற்றை நீக்கும் திறன் பதநீருக்கு உண்டு.

• நார்ச் சத்து மிகுந்தது. இதயத்தை வலுப்படுத்தும். இதில் உள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகளை வலுப்படுத்தும்.

• கோடை காலங்களில் பதநீர் குடிப்பதால் நீர்ச்சுருக்கு, அடிவயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் நீங்கும்.

வீ.சக்தி அருணகிரி