Published:Updated:

பஸ்திரிகா, நாடிசுத்தி, பிராமரி, கபாலபதி... மழைக்கால நோய்களிலிருந்து காக்கும் மூச்சுப்பயிற்சிகள்! #HealthTips

பஸ்திரிகா, நாடிசுத்தி, பிராமரி, கபாலபதி... மழைக்கால நோய்களிலிருந்து காக்கும் மூச்சுப்பயிற்சிகள்! #HealthTips
News

ழைக்காலம் வந்தாலே சிலர் பரிதவித்துப் போய்விடுவார்கள். சளி, இருமல், காய்ச்சல், வீசிங் என ஏகப்பட்ட பிரச்னைகள் சூழ்ந்து கொள்ளும்.  மாத்திரைகளைக் கொத்துக் கொத்தாக சாப்பிடுவார்கள். 'இதுபோன்ற மழைக்காலப் பிரச்னைகளை மாத்திரைகள் இல்லாமலே சரி செய்யலாம்' என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் அகில் ஷர்மிளா.

“மழைக் காலங்களில்  மிகச்சாதாரணமாக வரக்கூடியவை சளி, இருமல் மற்றும் அதனால் வரக்கூடிய காய்ச்சல் போன்றவை. அத்துடன் மூச்சுத்திணறல் (வீசிங்), ஆஸ்துமா போன்றவையும் தலைதூக்க ஆரம்பிக்கும். இதனால் சிலருக்கு அதிகாலை, இரவு நேரங்களில் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். எப்போதும் ஏதோ ஒரு நோயுடன் வாழ்வது போன்ற உணர்வு இருக்கும். எளிமையான சில சுவாசப் பயிற்சிகள், சில யோகா பயிற்சிகள் மூலம்  இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

மூச்சுப்பயிற்சிகளான பஸ்திரிகா (bastrika) பிரணாயாமம், நாடிசுத்தி பிரணாயாமம், பிராமரி பிரணாயாமம் (brahmari piranayamam), கபாலபதி கிரிய பயிற்சிகள் போன்றவை சுவாசப் பிரச்னைகளில் இருந்து விடுதலை தரும். 

பஸ்திரிகா பிரணாயாமம்

தரையில் சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு நேராக வைத்துக் கண்களை மூடிய நிலையில் கைகளை நேராக வைத்து வேகமாக மூச்சை உள்ளிழுத்து வேகமாக வெளியிட வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும். இதை செய்வதன்மூலம், நெஞ்சில் கட்டி இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கடைத்துக் கொண்டு சுவாசம் விட சிரமப்பட்டு வாயினால் சுவாசம் எடுப்பவர்கள் இதைச் செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம். அடிக்கடி சளித்தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் அந்தத் தொந்தரவில் இருந்து விடுபடலாம். அனைவரும் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.

நாடி சுத்தி பிரணாயாமம்

வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்துக்கொண்டு, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலையும் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். இடப் பக்க நாசியின் வழியே மூச்சை உள்ளிழுத்து வலப் பக்க நாசியின் வழியே வெளியிட வேண்டும். பின் வலப் பக்க நாசியின் வழியே மூச்சை உள்ளிழுத்து இடப்பக்க நாசியின் வழியே வெளியிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியானது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்குகிறது. மேலும், நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது. மனதை ஒரு நிலைப்படுத்த உதவும் இந்தப் பயிற்சியை அனைத்து வயதினரும் செய்யலாம்.

பிராமரி பிரணாயாமம்

இரண்டு கைகளின் ஆள்காட்டி விரல்களையும் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார' (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், அடிக்கடி தொண்டையில் உண்டாகும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும். பிராமரி பிரணாயாமம் தொடர்ந்து செய்வதன்மூலம் தொண்டைக் கரகரப்பு, தொண்டையில் சளி அடைத்துக்கொள்வது போன்றவற்றில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். 

கபாலபதி கிரியா 

நுரையீரலில்  தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற கபாலபதி கிரியா என்ற பயிற்சி உதவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தொடர்ந்து வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியானது உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளையும் வெளியேற்றும். தினமும் நாம்

சுவாசிக்கும் அசுத்தக் காற்றில் இருக்கும் தூசிகள் கழிவுகளாக தேங்கி இருக்கும். இவை அனைத்தும் வெளியேறும். நாள்பட்ட சளி மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவர்கள் இதை தொடர்ந்து செய்யலாம். 

மழை மற்றும் குளிர் காலங்களில் சுக்கு மல்லி காபி, துளசி டீ, இஞ்சி டீ, மூலிகை டீ, அதிமதுரம் டீ போன்றவற்றை அருந்தலாம். இஞ்சி கசாயமும் உடனடியாக சளியிலிருந்து விடுபட உதவும். அதிமதுரம் பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம். இவை நாள்பட்ட சளி, ஆஸ்துமா போன்றவற்றைக் குணப்படுத்தும். தூதுவளை சூப் , தூதுவளை ரசம் உள்ளிட்ட தூதுவளை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் மிளகுப் பொடியை தேனில் கலந்து நக்கிச் சாப்பிடலாம். கொள்ளு கஞ்சி, உளுந்தங் கஞ்சி  போன்றவையும் மழைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளாகும். தினமும் நான்கு துளசி இலைகளை நன்றாக மென்று தின்னலாம். அவ்வப்போது நிலவேம்பு கசாயம் அருந்துவதும் நல்லது. சுடு தண்ணீரிலும் துளசி இலைகளைப் போட்டுக் குடிக்கலாம். வெளியே செல்லும்போது காதுகளை அதிகம் பனி பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பனி மற்றும் மழைக் காலங்களில் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பியதும் சுடுதண்ணீரில் குளித்துவிட்டு மற்ற வேலைகளைத் தொடர வேண்டும்.  இவை மற்ற கிருமித் தொற்றுகளில் இருந்து  நோய் வராமல் பாதுகாக்கும். 

இதுபோன்ற எளிய வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவதன்மூலம் மழைக்கால நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.''