Published:Updated:

``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress
News
``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

Published:Updated:
``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress
News
``இந்த ரெண்டு விஷயத்தை மேனேஜ் பண்ணிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் #LetsRelieveStress

குடும்பங்களுக்கு இடையிலான உறவுச்  சிக்கல்களைத் தமிழ் சினிமாவில் கதைகளாகச் சொன்னவர்களில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், இராம.நாராயணன், விசு, வி.சேகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் கே.பாலசந்தர், விசு, இராம.நாராயணன் மூவரிடமும் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் டி.பி.கஜேந்திரன். 24 படங்களையும் இயக்கியிருப்பவர். இவரது சினிமாப் பயணம், கிட்டதட்ட 40 ஆண்டுகளைக் கடந்து இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ``இந்த நெடிய பயணத்தில் ஏகப்பட்ட டென்ஷன், கோபதாபங்களால் ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டிருக்குமே... அவற்றை எப்படிக் கடந்து வந்தீர்கள், கடந்துவருகிறீர்கள்?'' என்ற கேள்வியோடு அவரிடம் பேச்சைத் தொடங்கினோம். இப்போது பெய்துகொண்டிருக்கும் பருவமழைபோல் நிறுத்தாமல் பேசுகிறார் டி.பி.கஜேந்திரன்... 

``டென்ஷன் இல்லாத வாழ்க்கை இன்னிக்கு யாருக்கு சார் இருக்கு? அம்மா, எல்.கே.ஜி படிக்கும் பையனைப் பார்த்து, `கண்ணு... வாடா... ரசம் பூவா சாப்பிடுறா’ன்னு கூப்பிடுறங்க. பையன் சொல்றான், 'போம்மா. காலையில ஹோம்வொர்க் பண்ணலைனு ஹரிணியைவெச்சிக்கிட்டே மிஸ் திட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப ஷேம் ஆகிடுச்சு. நானே ஹோம்வொர்க் பண்ணணுமேனு டென்ஷனா இருக்கேன். நீ என்னடானு ரசம் பூவா, மல்லியப்பூன்னுக்கிட்டு இருக்கே...'' அப்படிங்கிறான். ஆக, இன்னிக்கு எல்லாருக்குமே அவங்க அவங்க லெவெல்ல டென்ஷன் இருக்கத்தான் செய்யுது.  

டென்ஷனை அப்படியே பத்திரப்படுத்திவெச்சிருந்தோம்னா, அது அப்படியே கம்ப்ரஸ் ஆகி, வேறோர் இடத்துல எதிர்பாராதவிதமா வெடிக்கும். இதுல வேடிக்கை என்னன்னா, அவங்க நம்ம மேல ரொம்பப் பிரியமானவங்களா இருப்பாங்க. இத்தனைக்கும் அவங்க சின்னத் தப்புதான் பண்ணியிருப்பாங்க. தேவையே இல்லாம அவங்க மேல அளவுக்கதிகமா கோபப்பட்டுட்டு, அப்புறம் அவங்ககிட்டயே எக்ஸ்யூஸ் கேட்டுக்கிட்டு இருப்போம். எதுக்கு இந்த டபுள் வேலை? 

புருஷன் மேல உள்ள கோபத்துல புள்ளைங்களைப் போட்டு அடிக்கிற மாதிரி, அப்போல்லாம், வாத்தியாருங்க யார் மேலயோ இருக்குற கோபத்தை பசங்க மேல காண்பிப்பாங்க. இந்தக் காலத்துல அப்படியெல்லாம் முடியாது. 
பொதுவாகவே மனிதர்கள் தன்னைவிட பலமானவங்க மேல கோபப்படாம, பலவீனமானவங்க மேல கோபப்படுறவங்களாத்தான் இருக்கோம். சினிமாவுல இதை அதிகம் பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரை டென்ஷனை பத்திரப்படுத்தவே மாட்டேன். அப்பப்போ நேர்லேயே கேட்டுடுவேன். இதுல சில சிரமங்களும் இருக்கு. நாம யார்கிட்ட நம்மக் கோபத்தை வெளிப்படுத்துகிறோம்ங்கிறது முக்கியம். நம்மைவிட பலசாலிங்ககிட்ட நம்ம கோபத்தைக் காட்டினோம்னா, நாம மாட்டிக்குவோம். அதனால அப்படி எதிர்ப்புகள் வந்தா, அதை எதிர்கொள்றதுக்கும் நாம தயாராக இருக்கணும். 
நமக்கு டென்ஷன் எப்படி, எங்கே வரும்? ரெண்டு இடத்துலதான் வரும். ஒண்ணு வீட்டுல வரும். இல்லைனா, தொழில் செய்யுற இடத்துல வரும். ஷூட்டிங்ல ஹீரோ, ஹீரோயின் லேட்டா வந்தாங்கன்னா, டென்ஷனாயிடும். அந்த நேரத்துல கோபத்தை நேரடியாகக் காண்பிக்க முடியாது. வேற யார் மேலயாவது ஜாடை, மாடையாத்தான் காட்டவேண்டியிருக்கும். மறுநாள்லேர்ந்து ஹீரோவா இருந்தாலும் ஹீரோயினா இருந்தாலும், கரெக்ட் டயத்துக்கு வந்துடுவாங்க. இப்படியெல்லாம் இருக்கலைனா என்னால 24 படம் டைரக்ட் பண்ணி இருக்க முடியாது.

கே.பி.சார்ல்லாம் அவர் ஆபீஸ்லேயே 'ஐ யம் நாட் இன்ட்ரெஸ்ட்டட் இன் எக்ஸ்யூஸஸ்'னு போர்டுலயே எழுதிப் போட்டிருப்பார். அவர்கிட்ட இருந்து வந்ததுனாலதான் என்னாலயும் சிக்கல் இல்லாம படங்கள் பண்ண முடிஞ்சுது. சினிமாவைப் பொறுத்தவரை நேரமும் பணமும் சமம். (Time and Money, both are equal). 

இந்த ரெண்டு விஷயம்தான் சினிமாவுல நம்மை டென்ஷனாக்கும். இதை கரெக்ட்டா மேனேஜ் பண்ணிட்டோம்னா எந்தப் பிரச்னையும் இல்லை. நம்மால ஒருத்தர் நஷ்டமடையக் கூடாது. அப்புறம் நம்ம தூக்கம் போயிடும்; நல்ல சோறும் சாப்பிட முடியாது. விசு, இராம.நாராயணன் இவங்க ரெண்டு பேரும் கத்துக்கொடுத்த பால பாடம் இது.

அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுல பெரிய வெற்றிடம் ஏற்பட்டுச்சு. எந்த மாதிரிப் படங்கள் வெற்றி பெறும், ஓடும்னே சொல்ல முடியலை. அது இப்போ வரைக்கும் தொடருதுனுவெச்சுக்கங்க. சின்னப் புள்ளையிலேர்ந்து சினிமா சினிமானு சுற்றி வந்தவனுக்கு திடுதிடுப்புனு ஒரு வெற்றிடம் ஏற்பட்டா எப்படி இருக்கும். அதுலயும் சினிமாத் தொழிலாளிங்க ராத்திரி, பகல்னு பார்க்காம உழைச்சுக் கஷ்டப்படுறதைப் பார்த்தா ரத்தக்கண்ணீர் வந்துடும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எடுக்கிற படம் ஓடாமப் போகும்போது இன்னும் கஷ்டமாகிடும். 

எனக்கும் அந்த நேரத்துல மனசளவுல ஒரு பிடிமானம் இல்லாமப் போயிடுச்சு. மனசு அப்படியே வெறுமையாகிடுச்சு. அப்போ என் ஃபேமிலி ஃப்ரெண்ட் ஒருத்தர். `ஷீரடி போயிட்டு வரலாம் வா’னு கூப்பிட்டார். அங்கே போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பெரிய மாறுதல். என்னுடைய லைனையே பாபா மாத்திவிட்டுட்டார். சாலிகிராமத்துல எனக்கு இருந்த இடத்துல சின்னதா லாட்ஜ் ஒண்ணு கட்டி பராமரிச்சிட்டு வர்றேன். இது சினிமாத் தொழிலைவிட டென்ஷனாத்தான் இருக்கு. இருந்தாலும், பத்து அஞ்சுக்குப் பழுதில்லாம ஓடிக்கிட்டு இருக்கு வாழ்க்கை.

எல்லாம் பாபாவோட அருள்தான். சொன்னா நம்ப மாட்டீங்க. இப்பவும் படம் பண்ணித் தர சொல்லி சிலர் கேட்பாங்க. இப்போ சினிமா உள்ள சூழ்நிலையில அவங்களை சினிமாவுக்குள்ள இழுத்துவிடறது தப்புன்னு தோணுது'' என்றவரிடம், '`இஷ்ட தெய்வம் யார்... எந்தக் கோயிலுக்குப் போவீங்க?’’ என்று கேட்டோம். 

``சொந்த ஊர் தூத்துக்குடினாலும் சின்ன வயசுலேர்ந்தே நான் வடபழனிவாசி. இங்கே இருக்கிற வேங்கீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடிப் போவேன். அங்கே போய் அரை மணி நேரம் உட்கர்ந்து இருந்துட்டு வந்தா, எனக்குப் பெரிய ரிலீஃப் ஆகிடும்’’ என்கிறார் கஜேந்திரன்.

``சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ விசாரித்தோம். ``நான் வெஜ்டேரியன் உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவேன். சின்ன வயசுல என்னென்னெல்லாம் சாப்பிடுணும்னு ஆசைப்பட்டேனோ, அது எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்திருக்கேன். ஆனாலும் இதுதான் வேணும்னு பிடிவாதமெல்லாம் கிடையாது. இப்போ கொஞ்சம் அசைவ உணவைக் குறைச்சிக்கிட்டேன்... வயதுகாரணமாக’’ என்பவர்,

``ஜிம்முக்கெல்லாம் போறதுண்டா?’’ என்றால், ``அதுக்கெல்லாம் நமக்கு நேரமும் இல்லை. ஆர்வமும் இல்லை. ஆனா, காலையிலயும் சாயந்திரமும் வாக்கிங் போயிடுவேன். அது ஒண்ணுதான் என்னுடைய ஆரோக்கிய ரகசியம்'' என்கிறார்.