Published:Updated:

ஒன்றிணைவோம்...

ஒன்றிணைவோம்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஒன்றிணைவோம்...

காசநோய்க்கு முடிவுகட்டுவோம்!மார்ச்-24, உலக காசநோய் தினம்

எப்படிப் பரவுகிறது?

இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குக் காற்றின் மூலம் பரவுகிறது. ஒருவருக்கு நுரையீரலில் காசநோய்த் தொற்று ஏற்பட்டால், அவர் இருமும்போது, தும்மும்போது, எச்சில் அல்லது சளி உமிழும்போது, கிருமி காற்றில் கலந்து பரவுகிறது. இந்தத் தொற்று உள்ள காற்றை உள்ளே இழுக்கும்போது, அது நுரையீரலை அடைந்து காசநோயை ஏற்படுத்துகிறது. பொதுவாக, காசநோய்த் தொற்று உள்ளவர்களின் அருகில் இருப்பவர்களுக்குக் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஒன்றிணைவோம்...

என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

பயப்படத் தேவை இல்லை. காசநோயைக் குணப்படுத்த முடியும். டி.பி பாக்டீரியாவை முற்றிலும் வெளியேற்ற, சிறிது கால அவகாசம் தேவைப்படும். குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது டாக்டர் பரிந்துரைத்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் சரியாகிவிட்டது என நடுவில் மாத்திரை எடுப்பதை நிறுத்தும்போது, கிருமி மேலும் அதிக ஆற்றலுடன் தாக்கும்.

தடுக்க முடியுமா?


சுகாதாரமான சுற்றுப்புறச் சூழல் மற்றும் பழக்கங்கள் மூலம் காசநோய் தொற்றுவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைக்க முடியும். தற்போது, காசநோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. இது, குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. காசநோய் பரவுவதை மிக எளிமையாகத் தடுக்க முடியும். யாருக்காவது காசநோய் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக அதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் நுரையீரல் காசநோயைத் தடுக்க முடியும்.

ஒன்றிணைவோம்...

நுரையீரலில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக, ஏற்படும் பகுதிகள்...

- பா.பிரவீன் குமார்