Published:Updated:

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

முகத்தில் அதிகமாக முகப்பரு வரவே,  ஏதேதோ வீட்டு சிகிச்சைகள் செய்துபார்த்தும் கட்டுப்படாமல் டாக்டரிடம் சென்றார் ஷர்மி. உடல் பருமனாக, மெல்லியதாக மீசை வளர்ச்சியுடன் இருந்த ஷர்மியைப் பார்த்ததுமே டாக்டருக்குப் புரிந்துவிட்டது. “28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி சரியாக வந்துவிடுமா?” என்று கேட்க, “இல்லை டாக்டர். இரண்டு, மூன்று மாதங்கள்கூட ஆகும்... வந்தா ஹெவியா பிளீடிங் இருக்கும்” என்றார். உடனே, மகளிர் நல மருத்துவரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார் டாக்டர்.

‘இதற்கு எதற்கு மகளிர் டாக்டரைப் பார்க்க வேண்டும்’ என்ற குழப்பத்தோடு ஷர்மி சென்றார். அங்கே அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு பி.சி.ஓ.டி (Polycystic ovarian disease (PCOD))எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பெண்ணுடைய சினைப்பையில் லட்சத்துக்கும் மேல் சினைமுட்டைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். ஒவ்வொரு மாதமும் இவற்றில் சில முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். ஆனால், ஒன்றே ஒன்று மட்டுமே முழுமையாக முதிர்ச்சியடையும்.  பெண்ணின் வாழ்நாளில் 360 சினைமுட்டைகள்தான் ஆரோக்கியமான நிலையில் முழுமையாக வளர்ச்சியடைந்து வெளிவரும். 

பொதுவாக, ஆரோக்கியமான பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும்போது, அவர்கள் சினைப்பையில் 4 முதல் 10 சினைமுட்டைகள் இருக்கும். இவை அனைத்தையுமே சினைமுட்டைகள் என்று சொல்ல முடியாது. சில நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். இவை, 2-3 செ.மீ அளவில் இருக்கும். இந்த நீர்க்கட்டிகளின் எண்ணிக்கை 12-க்கு மேல் இருந்தால், அதை பி.சி.ஓ.டி என்கிறோம்.

பெண்ணின் சினைப்பையில், மிகச்சிறிய அளவில் ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கும். பி.சி.ஓ.டி காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், ஆண்களுக்கு இருப்பதுபோல, மீசை வளர்ச்சி மற்றும் முகப்பரு, சீரற்ற மாதவிலக்கு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

பி.சி.ஓ.டி ஏன் வருகிறது?

ஹார்மோன் பிரச்னை, உடல்பருமன், அதிக இன்சுலின் சுரப்பு பி.சி.ஓ.டி வர முக்கியக் காரணமாக இருக்கின்றன.

தீர்வுகள்!


உடல் எடையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைக் குறைக்க முடியும். மருத்துவர் பரிந்துரைந்தால் மட்டுமே, மருந்துகளை உட்கொள்ளலாம். அனைத்துப் பெண்களுக்கும் மருந்துகள் தேவைப்படாது.

சூர்ய நமஸ்காரத்தை முறையாகக் கற்றுக்கொண்டு, மூன்று மாதங்கள் செய்தாலே பி.சி.ஓ.டி சரியாகும்.

சைக்கிளிங் செய்வதால், உடல்பருமன் குறையும்.

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

உடல் எடை குறைந்தாலே இன்சுலின் சரியாகச் சுரந்து, நன்றாக வேலைசெய்யும். சினைப்பையும் ஆரோக்கியமாகும். இதனால்தான் பி.சி.ஓ.டிக்குத் தரப்படும் மருந்துகளுடன் இன்சுலினை சீராக்கும் மருந்தும் அளிக்கப்படுகிறது.

பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

உணவில், மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ரீஃபைண்டு (தீட்டப்பட்ட) சர்க்கரை, உப்பு, அரிசி, மைதாவைத் தவிர்க்க வேண்டும். மட்டை அரிசி, தோல் நீக்கப்படாத அரிசி, தீட்டப்படாத பருப்புகளைச் சாப்பிடலாம்.

அன்றைய நாளுக்குத் தேவையான அளவு மாவுச்சத்து எடுத்துக்கொண்டாலே போதும்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெயை அளவாகச் சேர்த்துகொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பருப்பு, பயறுவகைகள், முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடலாம்.

எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய உணவு என அடிக்கடி உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், கீரைகளை அவசியம் சாப்பிட வேண்டும்.

பப்பாளி, கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம். அப்படியும் சரியாகவில்லை எனில், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

- ப்ரீத்தி, படங்கள்: மா.பி.சித்தார்த், ஷரண் சந்தர்

பி.சி.ஓ.டி- பி.சி.ஓ.எஸ் என்ன வேறுபாடு?

பிசிஓடி: ஸ்கேன் பரிசோதனையில் நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டாலும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றால், அதை பி.சி.ஓ.டி என்கிறோம். இதற்குப் பெரும்பாலும் மாத்திரை மருந்து தேவைப்படாது. உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமே சரிப்படுத்தலாம்.

பிசிஓஎஸ்: ஸ்கேன் பரிசோதனையில் நீர்க்கட்டிகள் இருந்து,  ஹார்மோன்களும் சமநிலை இல்லாமல் இருந்தால், பி.சி.ஓஎஸ் (Polycystic ovary syndrome) என்போம். இந்த நோய்க்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.