மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 6

மருந்தில்லா மருத்துவம் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
மருந்தில்லா மருத்துவம் - 6

மருந்தில்லா மருத்துவம் - 6

மருந்தில்லா மருத்துவம் - 6

மார்பின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது அனாஹத சக்கரம். இது மூலாதாரம் உள்ளிட்ட முதல் மூன்று சக்கரங்களின் சக்தியால் உந்தப்பட்டு, வளர்ச்சி பெறுகிறது. இதை, பச்சை நிற இதழ்களை உடையதாக உருவகப்படுத்துகின்றனர். இது `தைமஸ்’ என்னும் நாளமில்லா சுரப்பியைச் சேர்ந்தது. குழந்தையின் நான்கு முதல் ஏழு வயதில் மலரும். மார்புப் பகுதியில் உள்ள தைமஸ், நுரையீரல், இதயம் இந்தச் சக்கரத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

இந்தச் சக்கரம் வளர்ச்சி பெறும் காலகட்டத்தில்தான் குழந்தைகள் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும், மற்ற குழந்தைகளிடமும் எப்படிப் பழகுவது என்பதைக் கற்றுக் கொள்வார்கள். கற்றவற்றை மனதில் நிறுத்துவது, மனதையும் சுற்றுப்புறச் சூழ் நிலையையும் பொறுத்தது. ஆகவே, இந்த வயதில் ஞாபகசக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்க இசை, தியானம், கதைகள் உதவும். இந்த வயதில் ஏற்படும் பாதிப்புகள், குழந்தையின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது கோபம், வெறுப்பு, ஆத்திரம் போன்ற குணங்கள் தோன்றும். இதே மனநிலை வளர்ந்த பின்னும் தொடரலாம். குற்ற உணர்ச்சியுடன், தன்னம்பிக்கை இன்றி தோல்வியைச் சந்திப்பார்கள். ஆகையால், இந்தப் பருவத்தில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு அதிகம்.

மருந்தில்லா மருத்துவம் - 6

அனாஹத சக்கரத்தைச் சேர்ந்த உறுப்புகள் தைமஸ் சுரப்பி

பெண்களுக்குப் பூப்பெய்தும் வரை வளரும். பின்பு, இது சுருங்கி கொழுப்பு செல்களாக மாறும். ஆண்களுக்கும் 15-17 வயது வரை வளர்ந்து பின் மறைந்துவிடும். இந்தச் சுரப்பி, சிறு வயதில் நம் உடலைத் தாக்கும் நோய்களுக்குக் காரணமான நுண்கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்திக்கு வேண்டிய செல்களை உற்பத்தி செய்கிறது. குழந்தைப் பருவத்தில் வரும் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்களுக்கு அந்தக் காலத்தில் தடுப்பூசி கிடையாது. நோய்க் கிருமிகளில் இருந்து உடலில் உள்ள தைமஸ், டான்சில்ஸ் மற்ற சுரப்பிகளும் உடலைப் பாதுகாக்கும். ஆகையால், தைமஸ் நம்மை சிறு வயதில் பாதுகாத்து, வயதான பின் நுண்கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தைமஸ் ஆதாரமாக இருக்கிறது.

நுரையீரல்: மார்புப் பகுதியில் இதயத்தைத் தவிர முழுவதுமாக நிரப்பிக்கொண்டிருப்பது நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்று, நாசி வழியாக தடை இன்றி  நுரையீரலை அடையுமானால், சுத்தமான காற்றில் வரும் பிராண சக்தி இதயத்தை அடைந்து நுரையீரல், இதயம் இரண்டையும் ஆரோக்கியமாக இருக்கவைக்கும்.

பாதிப்பு: அசுத்தமான காற்று, சில உணவுப் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை ஆகியவற்றால், நாளடைவில் காற்று செல்லும் பாதையில் தடை ஏற்படலாம். இதனால், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். தவிர, தேவையற்ற பயம், துன்ப நினைவுகள் சுவாச உறுப்புகளில் தடையை ஏற்படுத்தும். இதனால், உடல் எதிர்ப்பு சக்தி குறைவதால் காச நோய், நிமோனியா, புற்றுநோய் போன்ற வியாதிகள் தோன்றும்.

சிகிச்சை: நாம் சுவாசிக்கும் காற்றை, ரெய்கி சிகிச்சைமுறையில், பிராண வாயு, பிரபஞ்ச சக்தி என்கிறோம். தடை இன்றி இந்த சக்தி நாசி மூலம் நுரையீரலை அடைந்தால் நோய் குணமாகும். இதற்கு நாசி ஆக்ஞா சக்கரம், தொண்டைப் பகுதியில் உள்ள சுவாசக் குழாய்கள் விஷுத்தி, நுரையீரல் - அனாஹத சக்கரம் என மூன்று சக்கரங்களுக்கு ரெய்கி சிகிச்சை மூலம் சக்தியூட்டி சுவாச உறுப்புகள் சம்பந்தப்பட்ட எந்த வியாதியையும் குணப்படுத்தலாம். இதனால், நுரையீரலை அடையும் சக்திப் பாதை சீர்படுத்தப்பட்டு, நுரையீரல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம். ஸுஜோக் அக்குபஞ்சர் முறையில், நுரையீரல் மெரிடியனில் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

இதயம்

இதயம் ஒரு தானியங்கி இயந்திரம். வலுவான தசைகளால் அமைக்கப் பெற்றிருப்பதால், இறக்கும் வரை, உடல் உறுப்புகள் அனைத்துக்கும் சக்தி அளிக்க வல்லது. ஆனால், ஓர் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்தால், இதயப் படபடப்பு அதிகமாகும். சில நேரங்களில், மன அதிர்ச்சியால் இதயம் நின்றுவிடலாம் (ஹார்ட் அட்டாக்), இதய வால்வு பாதிப்பு, இதயக் குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெய்ன்ஸ் போன்ற ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகள், மன அழுத்தத்தால் தோன்றும் படபடப்பு, மூச்சடைப்பு போன்ற உபாதைகளுக்கு அனாஹத சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளித்து, இதயத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஸுஜோக் அக்குபஞ்சர் முறையில் இதய மெரிடியனில் சிகிச்சை அளித்து, இதயம் பலப்படுத்தப்படுகிறது. ரத்தக் குழாய் நோய்களுக்கு, சிறுகுடல் மெரிடியனில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

- தொடரும்

படம்: தி.ஹரிஹரன்

அன்பின் சக்கரம்

அனாஹத சக்கரம் அன்பின் உறைவிடம். இதை வலுவாக வைக்க ஆழ்நிலை தியானம் மிகவும் உதவும். இதனால்தான், `பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் விடியற்காலை மூன்று முதல் ஐந்து வரை ஆழ்நிலை தியானம் செய்ய உகந்த நேரம் எனக் கருதினார்கள். நுரையீரல் அதிக சக்தி பெற்று, இதயத்தைப் பலமடையச்செய்கிறது. மற்ற உறுப்புகள் செவ்வனே வேலைசெய்கின்றன. அனாஹத சக்கரத்தைச் சார்ந்த உணர்வு, அன்பு. அன்பின் உறைவிடத்தை இதயம் என்கிறோம். அனாஹத சக்கரம் மலரும் பருவத்தில் அன்பு, கருணை, மனித நேயம் இவற்றைக் குழந்தையின் இதயத்தில் பதியவைத்தால், நாட்டில் நல்ல வளமான சமுதாயம் உருவாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.