Published:Updated:

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

முளைவிட்ட தானியங்கள் கிரேவி

தேவையானவை

கலந்த முளைவிட்ட தானியங்கள் (மிக்ஸ்டு ஸ்ப்ரௌட்ஸ்), நறுக்கிய பனீர் - தலா 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

இஞ்சி - அரை இன்ச்

பூண்டு - 5 பல்

சிவப்பு மிளகாய்த்தூள் - 1  டீஸ்பூன்

தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஈஸி 2 குக்

செய்முறை

குக்கரில் முளைவிட்ட தானியங்களை மூன்று விசில் வரை வேகவைக்க வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை வதக்கி, ஆறவிட்டு அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுது, வேகவைத்த தானியத்தைச் சேர்த்து வதக்கி, மஞ்சள், மிளகாய், தனியா, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். பின், நறுக்கிய பனீரை சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.

பலன்கள்

தானியங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நல்லது. புரதம், கால்சியம். வைட்டமின்கள் நிறைவாக கிடைக்கும்.

கால்சியம் நிறைந்தது என்பதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க, ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

நெல்லி சூப்

தேவையானவை

பெரிய நெல்லிக்காய் - 5

வெங்காயம் - 1/2

உப்பில்லாத வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், உப்பு - தேவையான அளவு

ஈஸி 2 குக்

செய்முறை

கடாயில் வெண்ணெய் ஊற்றி, உருகியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி, நெல்லிகாயைத் துண்டுகளாக நறுக்கி வதக்கவும். இதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வெந்த பிறகு ஆறவிடவும்.

மிக்ஸியில் இவற்றைப் போட்டு அரைத்து எடுத்துக்கொண்டு, மீண்டும் கடாயில் அரைத்தவற்றைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, கொதித்த பிறகு பரிமாறலாம்.

பலன்கள்

முடி வளர்ச்சியைத் தூண்டும். சருமத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைக்கும்.

பரு தொல்லைகள் நீங்கும். தொண்டை எரிச்சல் சரியாகும்.

பெரியவர்கள்கூட வாரம் இருமுறை சாப்பிட்டுவர, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். புளிப்பு எனச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நெல்லி சூப் கொடுக்கலாம்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்